Quantcast
Channel: Featued – Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV
Viewing all 679 articles
Browse latest View live

சபரிமலை யாத்திரை பாகம் –20

$
0
0

 (உ) இதே போலவே ஏகாதசி, ஸ்கந்தஷஷ்டி போன்ற விரதங்களையெல்லாம் அனுசரிக்கக் கூடிய அடியவர்களை இனங்காண்பது கடினம். ஐயப்ப விரத பக்தர்கள் கழுத்தில் ஏராளமான மாலைகளை அணிந்திருப்பதை கொண்டே அவர்களை சுலபமாக இனங்காண முடிகின்றது. சிற்சில இடங்களில் இவ்வாறு தங்களை மாவிரதாதிகளாகக் காட்டிக்கொள்ளும் பாங்கும் நகைப்பிற்குரியதாகி விடுவதைக் காண்கிற போது மனம் வேதனைப்படுகின்றது. பிறர் அறியாமல் விரதம் மேற்கொள்ளும் வகையில் இவ்விரதத்தை அனுசரிக்கிறவர்களையும் ஆற்றுப்படுத்தின் சிறப்பல்லவா? இன்றைய உலகம் செல்லும் போக்கு அப்படியிருக்கிறது என் செய்வது? எனினும் உளவியல் ரீதியாக விரதாதிகள் தங்களை தனித்துவமாக தயார்ப்படுத்திக் கொள்வது கட்டாயம் அவசியமானது. அப்படிச் செய்கிற போது மனதில் புத்துணர்வும் விரதசங்கல்பமும் ஏற்படும் என்பது மறுக்க இயலாத உண்மை.

  (ஊ) இதே போலவே ஐயனார்- ஐயப்பன் என்னும் மூர்த்திகளிடையான உறவும் விளக்கப்பெற வேண்டும். இது தொடர்பாக அடியவர்கள் பலருக்கு அநேக சந்தேகங்கள் இருப்பதையும் காண்கிறோம். சாதாரணமாக அவதாரம் என்றால் அதாவது கிருஷ்ணாவதாரம், ஸ்ரீ ராமாவதாரம், போல பந்தள தேசத்தில் ராஜசேகரன் மகனாக எழுந்தருளியிருந்த ஐயப்பன் என்பதும் ஒரு அவதாரமாகவே கொள்ளலாமா? என்பதும் சிந்தனைக்குரியது. இவ்வாறு பந்தளத்தில் பகவான் பிறந்தது வரலாற்றுக் காலத்திற்கு உட்பட்டது என்றால் ஆண்டையும் ஆய்வு செய்து கணிப்பதும் வரலாற்றை உணர்வு பூர்வமாக மட்டுமன்றி ஆதாரபூர்வமாகவும் ஏற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும்.

 இப்படியெல்லாம் ஒரு இந்து இளைஞனாக சிறியேன் கேட்கிற, ஆராய்கிற விடயங்களை பெரியவர்கள் -ஐயப்ப அடியார்கள் தவறாகக் கருதிவிடக்கூடாது. எவரையும் எவ்வகையிலும் புண்படுத்தும் நோக்கு சிறிதும் இதில் இல்லை. ஐயப்பபக்தியின் பேரில் மிகவும் நம்பிக்கையுடனும் சீர் செய்யப்பெற்ற வணக்க முறைமையாக இது விளங்க வேண்டும் என்ற அக்கறையுடனுமே இவற்றை வினவினேன். குற்றமுண்டாகில் பொறுத்தருள்க.

  எனினும் சபரிமலையிலுள்ள மகத்துவம் வாய்ந்த புனிதத்தன்மையையும் அங்கே திருவாபரணப்பெட்டி எடுத்து வரப்பெறும் போதும் மகரஜோதி ஏற்றும்போதும் உண்டாகிற அதியுச்ச பக்தி நிலையையும் ஏற்கத்தான் வேண்டும். ‘சுவாமி திந்தக்கத்தோம்….ஐயப்ப திந்தக்கத்தோம்…’என்று பாடி ஆடும் போதும் ஏற்படும் ஆனந்தம் உயர்வானதே.. அங்கே திருவாபரணப்பெட்டிகள் எடுத்து வரப்படும் போது கருடப்பட்சிகள் இரண்டு வட்டமிட்டு இறைசாந்நித்யத்தை வெளிப்படுத்துவதையும் மகரஜோதியின் எழில் மகத்துவமும் பேரின்பப் பெருநிலையான இறைவனின் பேராளுகை சபரிச்சந்நதியில் இருப்பதை எடுத்துக் காட்டும்.

  எது எப்படியிருப்பினும் உண்மை அன்போடு உள்ளம் உருகி ஐயப்பப் பெருமான் திருவடிகளைப் போற்றுகிற அடியவர்கள் எல்லாப் பேற்றையும் பெறுவது உண்மை. ஆக, ஹரிஹசுதனாக எழுந்தருளி சைவவைஷ்ணவ சமரச மூர்த்தியாகக் காட்சி தரும் பெருமான் முன்றலில் நம்மிடையே பேதங்கள் இல்லை.. ஜாதிகள் இல்லை.. சமயபேதங்கள் இல்லை.. அளவற்ற கிரியைகள் இல்லை.. பக்தி என்பதில் சங்கமித்து சரணகோஷம் சொல்லுகிற போது நாம்…இன்பப் பெருவெளியில் சஞ்சரிப்பதை உணரலாம் என்பதில் மாற்றுக்கருத்துமில்லை….

தண்டாமரை முகமும் மலர்க்கண்களும் தன் கரத்தே

செண்டாயுதமும் தரித்து எமையாளும் சிவக்கொழுந்தைக்

கண்டேன் இரண்டு கரங்கூப்பினேன் வினைக் கட்டறுத்துக்

கொண்டேன் அழியாப் பெருவாழ்வு தான்வந்து கூடியதே

                                                                                                                                                                                                                                                                                      –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சபரிமலை யாத்திரை பாகம் –20 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


கும்பாபிஷேகத்தின் வகைகள்

$
0
0

கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை

1, ஆவர்த்தம் : ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப் படுவது.

2, அனாவர்த்தம் : பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

3, புனராவர்த்தம் : கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

4, அந்தரிதம் : கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் சந்தி.

              கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்க்கொள்ளப்படும் அவசியமான கிரியைகள் பற்றிய விளக்கம்.

                                  kumbabishekam-jpg-1

1, அனுஞை : {அனுமதி வாங்குதல்} செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

2,சங்கல்பம் : இறைவனிட்த்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.

3,பாத்திர பூஜை : இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜா பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்குலுக்குறிய தேவதைகளை பூஜை செய்தல்.

4, கணபதி பூஜை : செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.

5, வருண பூஜை : அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

6, பஞ்ச கவ்யம் : ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால்,தயிர்,நெய்,பசுநீர்,பசுசானம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.

வாஸ்து சாந்தி : தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.

7, பிரவேச பலி : எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செயிதல் {துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு}

8, மிருத்சங்கிரஹணம் : {மண் எடுத்தல்} அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில்ருந்து மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.{ ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்ட படுத்தினதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் கிரியை}

9, அங்குரார்ப்பணம் : {முளையிடுதல்} எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை வளர செய்தல். இதில் 12 சூர்யர்கலான வைகர்த்தன்,விவஸ்வதன்,மார்த்தாண்டன்,பாஸ்கரன்,ரவி,லோகபிரகாசன்,லோகசாட்சி,திரிவிக்ரமன்,ஆதித்யன்,சூரியன்,அம்சுமாலி,திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.

10, ரக்ஷாபந்தனம் : {காப்புக்கட்டுதல்} கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும் செய்யும் கர்த்தாவுக்கும்எவ்வித இடையூறுகள் வராதபடிக் காத்தற் பொருட்டு. அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு {கயிறு} கட்டுதல்.

11, கும்பலங்காரம் : கும்பங்களை {கலசம்} இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.

12, கலா கர்ஷ்ணம் : {சக்தி அழைத்தல்} விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.

13, யாகசாலா பிரவேசம் : கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

14, சூர்ய,சோம பூஜை : யாகசாலையில் சூர்ய சந்திரனை வழிபடுதல்.

15, மண்டப பூஜை : அமைக்க பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.

16, பிம்ப சுத்தி : விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.

17, நாடி சந்தானம் : யாகசாலை இட்த்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல். { இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இனைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தல்}

18, விசேஷ சந்தி : 36 தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கு அர்க்யம் தருவது.

19, பூத சுத்தி : இந்த பூத {மனித} உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.

20, ஸ்பர்ஷாஹுதி : 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்குகொண்டு சேர்த்தல்.

21, அஷ்ட பந்தனம் : எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீட்த்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பர்.

22, பூர்ணாஹுதி : யாகத்தை பூர்த்தி செய்தல்.

23, கும்பாபிஷேகம் : {குடமுழுக்கு} யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.

24, மஹாபிஷேகம் : கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.

25, மண்டலாபிஷேகம் : பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 48.நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post கும்பாபிஷேகத்தின் வகைகள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

மன நிம்மதி தரும் விருத்தகிரிஸ்வரர்

$
0
0

கடலூர் மாவட்டம் திரு முதுகுன்றம் என்னும் விருதாச்சலத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.

 இங்கு தாயார் விருத்தாம்பிகையுடன் (பாலாம்பிகை – இளயநாயகி) விருத்தகிரிஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார். இவரை வழிப்படுவோருக்கு மனநிம்மதியும் உடல் சம்மந்தப்பட்ட எந்த நோயாக இருந்துலும் விலகி செல்லும் என்பது பக்தர்களின் தீராதநம்பிக்கை. பிராத்தனைகள் நிறைவேறியதும்.

இங்கு தலவிருச்சமாக வன்னியமரம் 1500 ஆண்டுகள் பழமையானது தீர்த்தமாக மணிமுத்தாநதி  நித்தியானந்தகூபம் அக்னி சக்கரதீர்த்தம்.

சிவனின் தேவராப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 220-வது தேவராத்தலம் ஆகும்.

 சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவியப்பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. சுவாமிக்கு சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவைகள் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள்பொடி மற்றும் புடவைசாத்துதல் ஆகியவைகளும் செய்யபட்டு வருகிறது

 விருத்தம் என்றால் முதுமை, அசலம் என்றால் மலை. இதனால் பழமலை என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு. 1008 சிவத்தலங்களில் முக்கிய 4 தலங்களில் ஒன்றாக விருத்தாசலம் விளங்குகிறது. காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி என்ற பழமொழியும் இக்கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலைவடிவில் தோன்றி காட்சியளித்தார். பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் உருவாகியது என்றும் திருவண்ணாமலைக்கு முன்பே உருவானதால் அதன் காரணமாக விருத்தாசலத்திற்கு பழமலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. மலையாக இருந்து பின் குன்றாக மாறி அதன் பின்னர்தான் திருத்தலமாக மாறியது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 இறைவனை தரிசனம் கண்ட ஐந்து முனிவர்கள், ஐந்து பிரகாரம், ஐந்து கோபுரம், ஐந்து கொடிமரம், ஐந்து உள்மண்டபம், ஐந்து வெளிமண்டபம், ஐந்து வழிபாடு, ஐந்து தேர், விருத்தகாசி, திருமுதுகுன்றம், விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி என ஐந்து பெயர்கள் உள்ளன. இவ்வாறு எல்லாமே ஐந்து என்ற சிறப்பை பெற்றுள்ளது. இத்தலத்தில் உள்ள துர்க்கையம்மனை வழிபட்டால் கல்யாணவரம் கை கூடும், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும்.      கோயில் அருகிலுள்ள மணிமுக்தா நதியில் நீராடினால் முக்தி கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. விருத்தகிரீஸ்வரரை வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும். உடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இக்கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுகிறது.

 ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதி விநாயகரின் இரண்டாவது படைவீடாகும். காளஹஸ்தி கோயிலில் உள்ளது போல் 18 படியிறங்கி சென்று தரிசிக்கும் வகையில் விநாயகர் அமர்ந்துள்ளார். ஒருமுறை உலகம் அழிந்தபோது இத்தலம் மட்டும் அழியாமல் இருந்ததாக புராணம் கூறுகிறது.முருகப்பெருமானின் தலையில் சக்கரம் அமைந்துள்ளது. இவரை வணங்கினால் எல்லா வளமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

   ஒருமுறை சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திரவிழாவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்வதற்காக ஒவ்வொரு ஸ்தலமாக பொருள் சேகரித்து கொண்டு வந்தார். இத்தலத்துக்கு வந்தபோது இறைவன், சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னை தந்தார். அந்த பொன்னை எடுத்துச்சென்றால் வழியில் கள்வர்கள் பறித்துக்கொள்வார்களோ என பயந்துபோன சுந்தரர் இங்குள்ள மணிமுக்தாற்றில் பொற்காசுகளைப் போட்டு திருவாரூரில் உள்ள குளத்தில் எடுத்தாராம். இதுவே ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது என்ற பழமொழி உருவாகக் காரணமானது.

தொடர்புக்கு:   91-4143-230203

அமைவிடம்:

    கடலூர் மாவட்டம் விருதாச்சலத்திற்கு சென்னை விழுப்புரம் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இருந்து பஸ் வசதி உள்ளது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post மன நிம்மதி தரும் விருத்தகிரிஸ்வரர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

அகஸ்தியர் அருளிய சரஸ்வதி ஸ்தோத்திரம்

$
0
0

யா குந்தேந்து துஷார ஹாரதவளா

யா சுப்ர வஸ்த்ராவ்ருதா

யா வீணா வரதண்ட மண்டிதகரா

யாச்வேதபத்மாஸனா

யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி

தேவைஸ் ஸதா பூஜிதா

ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ

நிச்சேஷ ஜாட்யாபஹா

தோர்ப்பிர்யுக்தா சதுர்ப்பி:

ஸ்படிக மணிநிபை: அக்ஷமாலாம் ததானா

ஹஸ்தேநைகேன பத்மம் ஸிதமபி ச

சுகம் புஸ்தகஞ் சாபரேண

பாஸா குந்தேந்து சங்க ஸ்படிகமணி நிபா

பாஸ மானா(அ) ஸமானா

ஸாமே வாக்தேவதேயம் நிவஸது

வதனே ஸர்வதா ஸூப்ரஸன்னா

ஸூராஸூரஸேவித பாதபங்கஜா

கரே விராஜத் கமநீய புஸ்தகா

விரிஞ்சிபத்னீ கமலாஸன ஸ்த்திதா

ஸரஸ்வதீ ந்ருத்யது வாசி மே ஸதா

ஸரஸ்வதீ ஸரஸிஜ கேஸரப்ரபா

தபஸ்வினீ ச்ரிதகமலாஸன ப்ரியா

கனஸ்தனீ கமலவிலோல லோசனா

மனஸ்வினீ பவது வரப்ரஸாதினீ

ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா

ஸரஸ்வதி நமஸ்துப்யம்ஸர்வதேவி நமோ நம:

சாந்தரூபேசசிதரே ஸர்வயோகே நமோ நம:

நித்யானந்தே நிராதாரே நிஷ்களாயை நமோ நம:

நவித்யாதரே விசாலாக்ஷ?யை சுத்தஜ்ஞானே நமோ நம:

சுத்தஸ்ப்படிகரூபாயை ஸுக்ஷ?மரூபே நமோ நம:

சப்தப்ரஹ்மி சதுர்ஹஸ்தே ஸர்வஸித்யை நமோ நம:

முக்தாலங்க்ருத ஸர்வாங்க்யை மூலாதாரே நமோ நம:

மூலமந்த்ரஸ்வரூபாயை மூலசக்த்யை நமோ நம:

மனோன்மனி மஹாயோகே வாகீச்வர்யை நமோ நம:

சக்த்யை வரதஹஸ்தாயை வரதாயை நமோ நம:

வேதாயை வேதரூபாயை வேதாந்தாயை நமோ நம:

குணதோஷ விவர்ஜின்யை குண தீப்த்யை நமோ நம:

ஸர்வஜ்ஞானே ஸதா நந்தே ஸர்வரூபே நமோ நம:

ஸம்பன்னாயைகுமார்யை ச ஸர்வஜ்ஞேதே நமோ நம:

யோகாநார்ய உமாதேவ்யை யோகானந்தே நமோ நம:

திவ்யஜ்ஞான த்ரிநேத்ராயை திவ்யமூர்த்யை நமோ நம:

அர்த்தசந்த்ர ஜடாதாரி சந்த்ரபிம்பே நமோ நம:

சந்த்ராதித்ய ஜடாதாரி சந்த்ரபிம்பே நமோ நம:

அணுரூபேமஹாரூபே விச்வரூபே நமோ நம:

அணிமாத்யஷ்டஸித்தாயை அனந்தாயை நமோ நம:

ஜ்ஞானவிஜ்ஞானரூபாயை ஜ்ஞானமூர்த்யை நமோ நம:

நானா சாஸ்த்ர ஸ்வரூபாயை நானாரூபே நமோ நம:

பத்மஜா பத்மவம்சாச பத்மரூபே நமோ நம:

பரமேஷ்ட்யை பராமூர்த்யை நமஸ்தே பாபநாசினீ

மஹாதேவ்யை மஹாகாள்யை மஹாலக்ஷ?ம்யை நமோ நம:

ப்ரஹ்மவிஷ்ணு சிவாயை ச ப்ரஹ்மநார்யை நமோ நம:

கமலாகர புஷ்பாயை காமரூபே நமோ நம:

கபாலீ கரதீப்தாயை காமதாயை நமோ நம:

சரஸ்வதி அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம்

சரஸ்வதி மஹாபத்ரா மஹாமாயா வரப்ரதா

ஸ்ரீ ப்ரதா பத்மநிலையா பத்மாழீ பத்மவகத்ரகா

சிவானுஜா புஸ்தகப்பிருத் ஞானமுத்ரா ரமாபரா

காமரூபா மஹாவித்யா மகாபாதக நாசினி

மகாஸ்ரயா மாலீநீச மகாபோகா மகாயுஜா

மகாபாகா மகோத்ஸாஹா திவ்யாங்கா ஸுரவந்திதா

மகாகாளீ மகாபாஸா மஹாகாரா மஹாங்குசா

பீதாச விமலா விஸ்வா வித்யுன் மாலாசா வைஷ்ணவி

சந்திரிகா சந்திர வதனா சந்திரலேகா விபூஷிதா

ஸாவித்ரீ ஸுர ஸாதேவி திவ்யாலங்கார பூஷிதா

வாக்தேவி வஸுதா தீவ்ரா மகா பத்ரா மகா பலா

போகதா பாரதீபாமா கோவிந்தா கோமதீ சிவா

ஜடிலா வந்திய வாஸாச விந்தியாசல விராஜிதா

சண்டிகா வைஷ்ணவீ பிராஹ்மீ

பிரஹ்மஞ்ஞானைக ஸாதநா

ஸெளதாமினி ஸுதா மூர்த்தி ஸுபத்ரா ஸுரபூஜிதா

ஸுவாஸினி ஸுநாஸாச விநித்ரா பத்ம லோசநா

வித்யாரூபா விசாலாக்ஷ? ப்ரம்மஜாயா மஹாப்லா

திரயீமூர்த்திஸ் திரிகாலஞ்ஜா த்ரிகுணா சாஸ்திர ரூபிணி

சும்பாசுர ப்ரமதிநீ ஸுபதாச ஸ்வராத்மிகா

ரக்த பீஜ நிஹந்த் ரீ ச சாமுண்டா சாம்பிகா ததா

முண்டகாய ப்ரஹரணா தூம்ர லோசனா மர்த்தனா

ஸர்வ தேதூ ஸ்ததா ஸெளம்யா ஸுராஸு நமஸ்கிருதா

காளராத்ரீ கலாதாரா ரூப ஸெளபாக்ய தாயினி

வாக்தே வீச வரா ரோஹா வாரிஜாஸனா

சித்ராம்பரா சித்ர கந்த்தா சித்ரா மால்ய விபூஷீதா

காந்தா காம ப்ரதா வந்தியா வித்யாதரா ஸுபூஜிதா

ஸ்வேதா நநா நீலபுஜா சதுர் வர்க்க பலப்ரதா

சதுரா நந ஸாம்ராஜ்யா ரக்த மத்யா நிரஜ்ஜநா

ஹம்ஸாஸன நீல ஜங்கா பிரம்ம விஷ்ணு சிவாத்மிகா

ஏவம் ஸரஸ்வதி தேவ்யா நாம் நாமாஷ் டோத்தரம் சதம்

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post அகஸ்தியர் அருளிய சரஸ்வதி ஸ்தோத்திரம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சபரிமலை யாத்திரை பாகம் –21

$
0
0

“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்ற முதுமொழிக்கேற்ப கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்த நாம் இப்பூவுலகில் வாழ்க்கையின் பல்வேறுபட்ட கோணங்களில் ஆட்பட்டு இயங்கி வருகிறோம். உலகின் பல சூழல்களில் மாட்டிக்கொண்டு பிறவிப் பெருங்கடலில் எதிர் நீச்சல் போட்டுக் கடந்து கரையேற முயன்று வருகிறோம்.

  வாழ்வின் பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு தினமும் அல்லல்பட்டு உழன்றுவரும் நாம் வருடத்திற்கு ஒரு முறையாவது சில நாட்களாவது தூய மனத்துடனும் மெய்யான பக்தியுடனும் நல்ல சிந்தையுடனும் மனதைக் கட்டுப்படுத்தி விரதங்ள் இருந்து, பூஜைகள், அன்னதானங்களை இயன்றவரை சக்திக்கேற்ப செய்ய நாமாக மேற்கொள்ளும் இந்த சபரிமலை யாத்திரை நோன்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பினைத் தருகிறது.

  எருமேலி மார்க்கமாக சபரிமலை யாத்திரை செல்வதில் மற்றொரு விசேஷம்; உடல் நலம் காக்கும் மூலிகைகளின் மணம் தாங்கி வரும் காற்றைச் சுவாசிக்கும் பேறு கிடைத்தற்கரிய ஒன்றாகும்.

  ஆயுர்வேத சாஸ்த்திரப்படி மனித தேகத்தில் வாத, பித்த கபதாதுக்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அளவு வரையில் இருந்தால் தேகத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும். அதிகமாகவோ, குறைவாகவோ ஆனால் வியாதிகள் உடலைத் தீண்டுகின்றன. இம்மூன்றின் தொல்லைகளைக் குணப்படுத்தும் மூலிகைகளை; எருமேலியிலிருந்து சபரிமலை வரையிலும் அதற்கப்பாலும் மண்டிக் கிடக்கின்றன.

 வாதரோகத்தை அடக்குவதற்கு கருங்குறிஞ்சி மூலிகை உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. எருமேலியிலுந்து கல்லிடும் குன்று வரையில் முக்கியமாக அழுதா நதிப் பிரதேசத்தில் இம்மூலிகைகள் நிறைந்து இருக்கின்றன. கபரோகத்தைத் தீர்க்கும் மூலிகைகள் கல்லிடும் குன்றிலிருந்து கரிமலை ஆறாவது தட்டுவரை வளர்ந்து இருக்கின்றன. அங்கிருந்து புல்மேடுவரை உள்ள சபரிமலைப் பிரதேசத்தில் பித்தரோக சமனியான மூலிகைகள் மண்டிக் கிடக்கின்றன.

  இம்மூன்று பிரதேசங்களிலும் தங்கிச் செல்பவர்கள் மேற்படி மூலிகைகளில் மணம் நிறைந்த காற்றைச் சுவாசிப்பதாலும், மூலிகைவளம் செறிந்த நீரை அருந்துவதாலும், மூலிகைகளை எரித்த சாம்பலைத் தரிப்பதாலும் ரோகங்கள் நீங்கி நல்ல ஆரோக்கியம் அடைகிறார்கள்.

 சமவெளிப் பிரதேசமாகிய வயல் சூழ்ந்த நாட்டில் வாழும் நமக்கு படிகள் இல்லாத மலை ஏறும் வாய்ப்பு அதிகமாக கிடைப்பதில்லை. ஆண்டுக்கொரு முறையாவது சபரிமலைக்கு எருமேலியிலிருந்து நடந்து பெருவழிப்தையாக சபரிமலை சென்றுவரும் பக்தர்களுக்கு மலையேறும் நல்வாய்ப்புக் கிடைப்பதனால் அவர்களின் இதயம் பலம் பெறுகிறது. இரத்தம் சுத்தமடைகிறது. நரம்புகளும், தசை நார்களும் உறுதி பெறுகின்றன. கெட்ட உணர்வுகள் பட்டுப்போகின்றன.

 சபரிமலை யாத்திரையின்போது சாதி, சமய வேறுபாடுகள் சரணம் போட்டுப் பறக்கின்றன. ஏழை, பணக்காரர் என்ற பேதம் இல்லை. உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், பாமரர் என்ற வித்தியாசம் இல்லை. எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிரை என்ற உணர்வோடும், அன்போடும், பண்போடும் மேற்கொள்கின்ற யாத்திரையே இந்த சபரிமலைப் புனித யாத்திரை.

 ஐயப்பனும் வாபர் சுவாமியும் இரண்டறக் கலந்து நின்று அருள் புரிவதைப் போலவே இஸ்லாம் மதத்தாரும் மாலை அணிந்து இருமுடிதாங்கி ஐயப்பசுவாமி கோயிலுக்குப் பெரும் திரளாக வந்திருந்து வழிபட்டு அருள் பெறுகிறார்கள். இதனால் இந்து, இஸ்லாம் இன ஒற்றுமை ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி வளர்கின்றது. எனவே இந்த யாத்திரையின் மூலம் ஒருமைப்பாட்டு உணர்வு வளர்கின்றது. சாதி, சமய வேறுபாடுகள் வேரறுக்கப்படுகின்றன. சமத்துவம் என்பது நடைமுறையில் நடாத்திக் காட்டப்படுகிறது. நல்லவைகளையே செய்து நல்லவைகளையே நினைத்து சுவாமியே சரணம் ஐயப்பா என்ற தாரக மந்திர சக்தியுடன் பக்தர் பெருவெள்ளம் பரம்பொருளை உணர்ந்து கொள்ளத் துடிக்கும் ஓர் அறப்போர்க்களமே ஐயப்ப சுவாமியின் சபரிமலை யாத்திரை என்றால் மிகையாகாது.

  இந்த யாத்திரையின்போது வாழ்வின் பல்வேறு துறையிலிருப்பவர்களும், பலவிடங்களில வசிப்பவர்களும், பல திறத்தவரும், பல குணத்தவரும், ஓரிடத்தில் வந்து ஒன்று கூடுகின்றார்கள். ஒருவரோடொருவர் மனம் விட்டு பேசிப் பழகுகிறார்கள். இதன் பயனாக கூச்ச மனப்பான்மையுள்ளவர்களுக்கு மனக்கூச்சம் விலகி மனத்தெளிவு பிறக்கிறது. மனப்பயம் நீங்கி தைரியமும் மன உறுதியும் ஏற்படுகின்றன. தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் உயர்வுள்ளம் பெறுகிறார்கள். எல்லோரையும் போலவே நாமும் நம்மை போலவே எல்லோரும் என்ற உணர்ந்து உறுதி பெறுகின்றார்கள்.

                                                                                                                                                                                                                                                                                      –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சபரிமலை யாத்திரை பாகம் –21 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ஸ்ரீ கால பைரவர் தோன்றிய வரலாறும் வழிபாட்டு முறையும்

$
0
0

 சிவரூபமான தட்சானாமூர்த்தி கல்விக்கும் நடராஜமூர்த்தி(nataraaja moorthi) நடனத்திற்க்கும். லிங்கமூர்த்தி (linga moorthi) அருவ வழிபாட்டிர்க்கும் பைரவமூர்த்தி(bairava moorthi) காவலுக்கும் அதிபதியாக மக்களால் தொன்று தொட்டு  வணங்கப்பட்டு வருகிறார்கள்.

பைரவரின் சிறப்பு:

 சிவபிரானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவர் காசியம்பதியில்  சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்மனின்  சிரம் கொய்தவர். மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். முனிவரின் (munivarin)  சாபத்திலிருந்து  தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்தவர்.  சனியை சனிஸ்வரராக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர் என்ற பெருமைமிகு சிறப்புகளைக் கொண்டவர். இவரை காலபைரவர் , மார்த்தாண்ட பைரவர் , க்ஷேத்ரபாலகர் ,சத்ரு சம்ஹார பைரவர்,  வடுக பைரவர் , சொர்ணகர்சன பைரவர்  என்று பல பெயர்களில் அழைத்து  வழிபடுகிறோம், பிரம்மனின் செருக்கு அழித்தல்

 ஓரு காலத்தில் ஜந்து தலைகளுடன் விளங்கிய பிரம்மா (bramahaa) தனக்கு ஜந்து தலை. ஈசனுக்கும் ஜந்து தலை ,ஆகவே தானே உயர்ந்தவன்.  தன்னை போற்ற வேண்டும். துதிக்க வேண்டும்  என்று சித்த , ரிஷி , முனிவர்களை வற்புறுத்தத் தொடங்கவே அவர்கள் சிவனாரை தரிசித்து பிரம்மனின் ஆணவப் போக்கை எடுத்துக் கூற பைரவப் பெருமானை அழைத்து பிரம்மாவின் ஜந்தாவது தலையை நீக்க அவரை நான்முகன் ஆக்கினார்.பிரம்மாவை நான்முகன் ஆக்கிய சிவசொரூபமே ஸ்ரீ கால பைரவர் என்று காசி காண்டம் சொல்கிறது.

சனீஸ்வரருக்கு அருளுதல்:

 சூரிய பகவானின் புத்திரர்களாகிய  எமதருமரும்  ,சனியும் சகோதர்களாவார்கள்.  இதிலே எமதருமர் நல்ல  அழகுடனும் ஆரோக்கியத்துடனும்  திகழ்ந்து. சனி ஊனமான காலுடன் சற்று அழகு குறைந்தும் காணபட்டதால் தனது சகோதரனால் அலட்சியப்படுத்தப்பட்டு வந்தார். இதனால்  மனம் வருந்திய சனி தனது தாயான சாயதேவியிடம்  மனவருத்தத்தை எடுத்நுக்கூற நீ இன்று முதல் பைரவரை உள்ளன்போடு வழிபட்டு வா அவர் உனக்கு  நல்ல நிலையைத் தருவார். உனது மனத்துயரம் யாவும்  தீர்ந்து போகும் என்று தாயார் கூறிய அறிவுறையை ஏற்று சனியும் பைரவப் பெருமானை வழிபாடு செய்து வரலானார்.

 சனியின் உன்மை அன்பால் கள்ளமில்லா வழிபட்டால் மனம் மகிழ்ந்த பைரவர்  சனியின் உன்மை அன்பை மக்களுக்கு எடுத்துகாட்டும் விதமாக ஈஸ்வர பட்டம் அளித்து  சனீஸ்வராக நவக்கோள்களில் சக்தி மிகுந்த கோள்களாக உயர்த்தி பெருமைபடுத்தினார்.

ஆகவே பைரவ மூர்த்தியை வழிபட

ஏழரைச்சனி

அஷ்டமச்சனி

கண்டச்சனி

ஜன்மச்சனி

அர்த்தாஷ்டமச்சினி

போன்ற சனி தோசங்கள் பனி போல நிங்கி விடும்.

பிடித்த மாலைகள்

 பைரவருக்கு

*தாமரைப்பூ மாலை ,  வில்வ மாலை ,  தும்பைப்பூ  மாலை ,

 சந்தன மாலை அணிவித்து  மல்லிகைப்பூ  தவிர்த்து  செவ்வரளி , மஞ்சள்  , செவந்தி மற்றும்  வாசனை மலர்களைக் கொண்டு  அர்ச்சனை செய்வது உதமம்.

பைரவ வழிபாடு:

 பைரவப் பெருமானை காலையில்  வழிபட சர்வ நோய்கள் நிங்கும். பகலில்  வழிபட விரும்பியது யாவும் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும்  விலகும். இரவு அதாவது அர்த்தஜாமத்தில் வழிபட வாழ்வில் எல்லாம் வழமும் பெருகி மன ஓருமைப்பாடும் கிடைத்து  முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப் பெருமானை அடையும் சாகாக் கல்வியும் ,  மரணமில்லாப் பெருவாழ்வும் கூட கிட்டும்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post ஸ்ரீ கால பைரவர் தோன்றிய வரலாறும் வழிபாட்டு முறையும் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ஊரும் விநாயகரின் வழிபாடும்!

$
0
0

sivan-parvathi-ganesh மதுரையிலிருந்து 20 கி.மீ தொலைவில் திருபுவனம் கோட்டை எனும் இடத்தில் ganesh-light-orang-12விநாயககோரக்கர் அருள்கிறார். நோய்களைத் தீர்ப்பதிலும் சனி தோஷம்  தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார். ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன காலங்களில் இந்த விநாயகரின் தெற்கு பகுதியிலும் உத்திராயண காலங்களில் வடக்கு பகுதியிலும் கதிரவன் தன் கிரணங்களால் இந்த விநாயகரை வணங்குகிறான்.

கிருஷ்ணகிரியில் உள்ள பாகலூரில் விநாயகப் பெருமான் சிவலிங்க ஆவுடையாரின் மேல் வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடக்கையில்  கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திக்கை நோக்கி அமர்ந்தருள் புரிகிறார்.

 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் ஆலயம். மழை பொய்த்தால் இவரது உடலில் மிளகை அரைத்துத்தடவி  அபிஷேகம் செய்வித்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.

  ganeshதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம். ganesh-12பார்வதியால் அவள் காவலுக்குப் படைக்கப்பட்ட சிறுவனின் தலையை ஈசன் அறியாமல்  கொய்தார். அவர் மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். இத்தலத்தில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.

விழுப்புரம், தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் போது அதில் உள்ள விநாயகரை  தரிசிக்கலாம். இவர் முன் பொய் சத்தியம் செய்தால் விநாயகர் தண்டிப்பார் எனும் ஐதீகம் நிலவுகிறது.

 நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவர் சந்நதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது  வித்தியாசமான அமைப்பு.

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இத்தல சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் பஞ்சமுக ஹேரம்ப கணபதி  நடராஜப் பெருமானுடன் திருவீதியுலா வருகிறார்.

ganesh கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம்.ganesh-22222 இக்கோயிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதியை தரிசிக்கலாம். இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார்.

சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப் பிள்ளையார். நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த விநாயகர் இவர்.  ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறைகளைத் தொகுக்க உதவியவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார்.

 தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரத்தில் விநாயகர் சதுர்த்தி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகசதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை. இந்த ஆலயத்திலேயே வந்து கொண்டாடுகின்றனர்.

 ஓசூர்-பேரிகை பாதையில் பாகலூர் ஏசியன் பேரிங் கம்பெனி அருகில் மாடி விநாயகர் அருள்கிறார். இவர் சந்நதியில் இருபுறங்களிலும் பிள்ளையார்பட்டி  கற்பகவிநாயகரும், மலைக்கோட்டை மாணிக்கவிநாயகரும் சந்நதி கொண்டுள்ளனர்.

 திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலின் அடிவாரத்தில், மாணிக்க விநாயகர் கோயில் உள்ளது. இந்த பிள்ளையாருக்குக் கீழே யந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

ganesh-blackwite-12ganesh-pink-12

திருவையாறுக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் வேத விநாயகர் அருள்பாலிக்கிறார். இவர் வேத கோஷத்தை சற்றே செவியை  சாய்த்த வண்ணம் கேட்பதால் செவிசாய்த்த விநாயகர் என்கிறார்கள்.

கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள மருத்துவக் குடியில் தேள் போன்ற வடிவமைப்பில் விருச்சிகப் பிள்ளையார் அருள்கிறார்.

திருச்சிக்கு அருகேயுள்ள பிட்சாண்டார் கோயிலில் சிம்ம வாகனத்தின் மீது பஞ்சமுக விநாயகர் ஐந்தடி உயரத்தில் அருட்கோலம் காட்டுகிறார்.

 தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மராட்டிய மன்னர் துளசாஜி மகராஜாவால் கட்டப்பட்ட நீலகண்ட விநாயகரை தரிசிக்கலாம். நீலகண்டரின் பிள்ளையாதலால்  நீலகண்ட பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார்.

தஞ்சாவூர் கீழவாசலில் வல்லபாம்பிகா சமேத ஸ்வேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) ஆலயம் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன் சோழர்களால்  வழிபட்ட இந்த விநாயகருக்கு கோட்டை விநாயகர் என்றும் பெயருண்டு.

    sivan-parvathi-ganesh-12காஞ்சிபுரத்தை அடுத்த தேனம்பாக்கம் சிவாலயத்தில் அம்மையப்பனுடன்sivan-murugan-ganesh-11 அருள்புரியும் சோமகணபதியை தரிசிக்கலாம்.

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் உக்கிரம் தணிக்க ஆதிசங்கரர் தேவியின் காதுகளில் ஸ்ரீசக்ரம், சிவசக்ரம் பொறித்த தாடங்கங்கள் அணிவித்த  பிறகும், உக்கிரம் தொடர்ந்தது. உடனே ஆதிசங்கரர் அன்னையின் முன்விநாயகரைப் பிரதிஷ்டை செய்ய, உடனே தேவி குளிர்ந்தாள். அந்த விநாயகரை இன்றும்  தரிசிக்கலாம்.

சென்னை கிழக்கு தாம்பரம் ஸ்கந்தாஸ்ரமத்தில் புவனேஸ்வரி அன்னையின் எதிரே சுவாமிநாதன் எனும் பெயரில் முருகப் பெருமான் அருள, விநாயகர்,  கமலவிநாயகராகத் திகழ்கிறார்.

 திருப்பாதிரிப்புலியூர் எனும் கடலூரில் அன்னை பெரிய நாயகியின் தவத்திற்கு உதவிய விநாயகர் கையில் பாதிரி மலர்களை ஏந்தி தரிசனம்அளிக்கிறார்.

ஆந்திர மாநில ஸ்ரீசைலம், மல்லிகார்ஜுனர் ஆலயத்தில் கைகளில் எழுத்தாணி, ஏடு வைத்துக் கொண்டு சாட்சி கணபதி அருள்புரிகிறார்.

 காஞ்சிபுரம் – வேலூர் பாதையில் உள்ள திருவலம் திருத்தலத்தில் மாங்கனிக்காக அம்மையப்பனை வலம் வந்த விநாயகரையும் அந்த விநாயகருக்கு  மாங்கனியை அளித்த தனுமத்யாம்பாளையும் தரிசித்து
மகிழலாம்.

 சென்னைganesh-book-1 – நங்கநல்லூர் வழியில் உள்ள கரத்தில் விஜயகணபதி கோயில் ganesh-pink-1கொண்டருள்கிறார். இந்த ஆலயத்தில் தினந்தோறும் கணபதி ஹோமம்  நடைபெறுகிறது.

 பாற்கடல் தந்த அமிர்தத்தை தேவர்களும் அசுரர்களும் பங்குபெற முனைந்தபோது, தன்னை வணங்காததால் விநாயகர் அமிர்தத்தை மறைத்தார். தவறை  உணர்ந்த தேவாசுரர்கள் அவரை வணங்க, அமிர்தத்தை காட்டியருளிய விநாயகரை திருக்கடவூரில் கள்ளவாரணப் பிள்ளையாராக தரிசிக்கலாம்.

 திருப்பூவனம் திருத்தலத்தில் மந்திர விநாயகர், கற்பகவிநாயகர், ஒட்டுக்கல் வெள்ளை விநாயகர் என மூன்று விநாயகப் பெருமான்கள் திருவருள் புரிகின்றனர்.

 சுந்தரரும், சேரமான் பெருமானும் கயிலை சென்ற போது, கணபதி பூஜையை நடத்திக் கொண்டிருந்த ஔவையாரை, கணபதி பெரிய விஸ்வரூபம் எடுத்து  அவர்களுக்கு முன்பே கயிலையில் சேர்த்தார். அவரை திருக்கோவிலூரில் பெரியானை கணபதியாக தரிசிக்கலாம்.

 கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலய திருப்பணியை மேற்கொண்ட கணக்குப்பிள்ளையிடம் மன்னன் சந்தேகப்பட்டு கணக்கு கேட்க, கணக்கெழுதாத  அவர் கணபதியிடம் புலம்ப, கணபதி கணக்கு விவரங்களை துல்லியமாக அவனுக்கு அறிவித்தார். அந்த விநாயகர் கணக்கு விநாயகராக இன்றும் அருள்புரிகிறார்.

 காஞ்சிபுரம் காமாட்சி ஆலயத்தில், சிந்தூர கணபதி, விக்ன நிவாரண கணபதி, பிரசன்ன கணபதி, இஷ்டசித்தி கணபதி, துண்டீர மகாராஜ கணபதி, சக்திகணபதி,  சௌபாக்ய கணபதி, சந்தான கணபதி, வரசித்தி கணபதி, திருமஞ்சன கணபதி மற்றும் சந்நதி வீதியில் ஏலேல விநாயகர் என ஏகப்பட்ட கணபதிகள்  அருள்கின்றனர்.

 தன் தந்தையை வழிபட்ட நீலகண்ட விநாயகரை சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் தனி சந்நதியிலும் தன் தாயைப் போல் வடிவெடுத்த விக்னேஸ்வரி  எனும் விநாயகரை ஆலய தூணிலும் தரிசிக்கலாம்.

 நாவல், பவளமல்லி, வில்வம், அரசு, நெல்லி, அத்தி, மந்தாரை, வேம்பு, வன்னி ஆகிய ஒன்பது தலவிருட்சங்கள் சூழ வீற்றருளும் விநாயகரை மதுரை  மீனாட்சியம்மன் ஆலயத்தில் தரிசிக்கலாம்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post ஊரும் விநாயகரின் வழிபாடும்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சபரிமலை யாத்திரை பாகம் –22

$
0
0

புண்ணியம் நல்கும் சபரிமலை யாத்திரை:

 உலகெங்கும் உள்ள ஐயப்ப பக்தர்கள் தங்கள் தேசத்திலிருந்து புறப்பட்டு எருமேலி என்ற இடத்தில் வந்து கூடுவார்கள். பக்தர்களின் கணக்கற்ற வருகை எருமேலி இன்று ஜன நெரிசல் நிறைந்த இடமாக மாறியுள்ளது. இங்கு ஒரு சாஸ்தா ஆலயம் உண்டு, ஆலயத்திலிருந்து சுமார் 1 /2 மைல் வடகிழக்கில் எருமேலி பேட்டைக் களமாகும். இங்கு ஐயன் ஐயப்பனின் அருமை நண்பரான வாவரின் ஆலயமும் பேட்டை சாஸ்தாவின் பிரதிஷ்டையுள்ள சிறுகோயிலும் உண்டு. இந்த ஆலயங்களைச் சுற்றி அநேகம் இஸ்லாமிய அன்பர்கள் குடியிருக்கிறார்கள். மார்கழி மாதத்தில் வாவர் ஆலயத்தில் கொடியேற்றப்படும்.

எருமேலி

 எருமேலிப் பேட்டை ஆடுதல் சபரிமலை யாத்திரையில் முக்கியமான அம்சமாகும். இங்கு இந்துக்களும், முஸ்லீம்களும் ஒரு தாய் மக்கள் போல் சகோதர பாசத்துடன் பழகுவதைக் காணலாம். ஜனசந்தடி நிரம்பப்பெற்ற எருமேலி கடைவீதியின் நடுமையத்தில் வாவர் ஆலயம் அமையப்பெற்றுள்ளது. ஹரிஹர புத்திரரான ஸ்ரீ தர்மசாஸ்தா வேடனைப்போல் வில்லும் அம்பும் தரித்த நிலையில் நிற்கும் தோற்றத்தில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு தாவளம் (தங்கும் கூடாரம்) போடாமல் செல்ல மாட்டார்கள்.

 ஒவ்வொரு ஐயப்ப பக்தர்களும் பாகுபாடின்றி வண்ணப்பொடிகள் பூசி வாவரை வணங்கி, பேட்டை துள்ளி பின் குளித்து ஐயனை வழிபட்டு இருமுடிக்கட்டு தலையில் ஏற்றியவாறு சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரணகோஷத்துடன் இங்கிருந்து அடர்ந்த காட்டில் பெருவழிப் பயணம் ஆரம்பமாகின்றது.

பேரூர்த்தோடு:

 இது மிகவும் புராதனமான முக்கியத்துவம் வாய்ந்த வாய்க்காலாகும். கிழக்கு முகமாக நாம் துவங்கிய வனயாத்திரையில் இளைப்பாற சிறந்த இடம் இந்தப் பேரூர்த்தோடாகும். எருமேலியிலிருந்து இரண்டு மைல் தூரமுள்ள இந்தப் பேரூர்த்தோடு கானகத்தையும், கிராமத்தையும் பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளது.

 வனயாத்திரையில் ஸ்ரீதர்ம சாஸ்தா இந்த பேரூர்த்தோடில் குளித்து இளைப்பாறியதாகக் கூறப்படுகின்றது. யாத்திரை மேற்கொண்டுள்ள ஐயப்பன்மார் இத்தோடில் குளித்து மலர், அரிசிப்பொரி இவற்றை வாய்க்காலில் உள்ள மீன்களுக்கு தூவி தமது பக்தியை வெளிப்படுத்துவர்.   இந்த இடத்திலிருந்து அரசாங்கத்தின் விலையுயர்ந்த தேக்கு தோட்டம் ஆரம்பமாகும். பேரூர்த்தோடை அடையும் இடம் வரை உள்ள ஸ்தலத்திற்கு கோட்டைப்படி என்று பெயர்.

கோட்டைப்படி:

 கோட்டைப்படியைக் கடந்தால் அங்கிருந்து தொடங்கும் இடம் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பூங்காவனம் என்றழைக்கப்படும். ஆகையால் அங்கு இரண்டு இலைகளைப் பறித்து வழிபாடு செய்த பிறகுதான் கடந்து செல்ல வேண்டும். கோட்டைப்படி என்பது கோஷ்டஸ்தானம் என்ற அர்த்தத்திலிருந்து இந்த கோட்டைப்படி என்ற சொல் தோன்றியுள்ளது.

                                                                                                                                                                                                   –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சபரிமலை யாத்திரை பாகம் –22 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


சபரிமலை யாத்திரை பாகம் –23

$
0
0

கரிமலைத்தோடு தீரம்:

 கரிமலை ஏற்றம் ஏறுவதற்கு முன்பு ஆகாராதிகள் தயார் செய்யவும், சற்று இளைப்பாறவும் தகுதியுள்ள இடமாகும். இந்த கரிமலைத்தோடு தீரம். தங்குவதற்கு சற்று வசதிக்குறவு என்றாலும், தண்ணீர் தாராளமாகக் கிடைக்கின்றது என்பதால் பக்தர்கள் இங்கு கூடி சற்று இளைப்பாறுகின்றார்கள்.

கரிமலை ஏற்றம்:

 இளைப்பாறி முடிந்ததும் உடன் நடந்தால் செங்குத்தான கரிமலை ஏற்றம் தான். கரிமலை ஏற்றத்தைப் போன்ற கடினமான ஏற்றம் சபரிமலை யாத்திரையில் வேறு கிடையாது என்று பல பழமக்கார சுவாமிகள் கூறுவது வழக்கம். கரிமலை ஏற்றத்தைக் காட்டிலும் கரிமலை இறக்கம் மிகவும் கடினம். எவ்வளவு ஏற்றமோ அவ்வளவு இறக்கம் உண்டு. மரங்களின் வேர், பெரிய, சிறிய பாறைகள் இவற்றின் மீது அதிகவனமாக இறங்க வேண்டும். இந்த இறக்கம் இறங்கும்போது, பெரியானை வட்டம், சிறியானை வட்டம் என்ற இடங்கள் எதிர்ப்படும். இங்கு சிறு வாய்க்கால்களில் பளிங்கு போன்ற நீர் சலசலத்தோடும். யானைகள் கூட்டமாய் வந்து தாகம் தீர்த்துக் கொள்ளும் இடம் என்பதால் இருட்டு வேளைகளில் தனியாக இந்த இடத்தைக் கடக்க மாட்டார்கள். இந்த இடத்தை கடந்து சிறிய தூரம் சென்றால் பம்பாநதியைக் காணலாம்.

புண்ணிய பம்பாநதி:

 பம்பாஸ-கிஸ்தலம் புவனேகசுந்தரம் பந்தள ராஜனின் கமனீய மந்திரம், தஷிண கங்கையென்ற அடைமொழியுடன் கீர்த்தி பெற்றதும் ஐயப்பனின் ஜனனஸ்தானம் என்ற புகழும் இந்த பம்பா தீர்த்தத்திற்கு உண்டு. அநேக வனமூலிகைகளின் சாறு கலந்து பாவங்களைக் கொல்லும் அபார சக்தியும் நிரம்பப்பெற்று ஸ்படிகத்திற்கு ஒப்பான நிறத்துடன் கரை புரண்டோடும் பம்பையின் ஜலப்ரவாஹம் நமது இருதயத்தை ஆகர்ஷித்து நிர்மாலயத்தை ஏற்படுத்தும்.

பம்பாஸத்தியும் குருதட்சணையும்

 கங்கை நதிக்கொப்பான புனித பம்பையில் நீராடி பாவங்களைந்து புனிதராய் ஐயப்பன்மார் தமது விரியில் குருசாமி எல்லோருடைய இருமுடிகளின் பின்முடிகளைப் பிரித்து அதிலிருந்து உணவுப்பொருட்களை எடுத்து உணவு தயாரிப்பார்கள். இதனை பம்பாஸத்தி என்று அழைப்பார்கள்.  இங்கு கன்னி ஐயப்பன்மார்களிடம் தட்டு கொடுத்து 108 அடுப்புகளில் இருந்து சாம்பல் எடுக்கப்பட்டு அதனை வஸ்திரகாயம் செய்து கொண்டு வரும்படி குருசாமி கூறுவார்.

 இச்சாம்பலை பூஜையின்போது விபூதியாக உபயோகிப்பது வழக்கம். அதன்பின் இருமுடிகளை கட்டி ஒன்றாக வைத்து உணவுகளை இலையில் இருமுடிகளுக்கு முன்வைத்து நைவேத்தியம் செய்து பஜனை, பூஜைகள் செய்து முதலில் கன்னி ஐயப்பன்மார்களுக்கு அன்னதானம் செய்வார்கள். இந்த விருந்தில் சாஷாத் ஐயப்ப சுவாமியே கலந்து கொண்டு தங்களுடன் உணவருந்த வருவார் என்பது கருதப்படுகின்றது.

                                                                                                                                                                                                                                                                                     –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சபரிமலை யாத்திரை பாகம் –23 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ஒவ்வொரு ரசிகளுக்கான கடவுளின் துதிகள்

$
0
0

விநாயகர் துதி (மேஷம்)

ஐந்து கரத்தனை யானை முகத்தனைmeasham

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியுள் வைத்தபடி போற்றுகின்றேனே.

 அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கரத்தின் நிலையறிவித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட

வித்தக விநாயக ! விரைகழல் சரணே !

            முருகன் துதி (ரிஷபம்)

பேர் ஆதரிக்கும் அடியவர்தம்

பிறப்பை ஒழித்து, பெருவாழ்வும்rishabam

பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்

பெருமான் என்னும் பேராளா!

சேரா நிருதர் குல கலகா!

சேவற்கொடியாய் ! திருச்செந்தூர்த்

தேவா ! தேவர் சிறைமீட்ட

செல்வா ! என்று உன் திருமுகத்தைப்

பாரா, மகிழ்ந்து, முலைத் தாயர்

பரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா !

வா, வா, என்று உன்னைப் போற்றப்

பரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால்

வாராது இருக்க வழக்கு உண்டோ !

வடிவேல் முருகா ! வருகவே !

வளரும் களபக் குரும்பை முலை

வள்ளி கணவா ! வருகவே !

    பெருமாள் துதி (மிதுனம்)

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்methunam

அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்

என்னாழி வண்ணன்பால் இன்று !

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்

சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்

திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு

இரண்டுருவு மொன்றாய் இசைந்து !

             நரசிம்மர் துதி (கடகம்)

அண்ட சராசரங்களில் நிறைந்த சிம்மன்

அகிலமும் தானாகி அறிவு தந்த சிம்மன்kadagam

தொண்டரின் தூதாகி துணை வந்த சிம்மன்

துஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சிம்மன்

மீனாகி வந்து சதுர்வேதம் காத்த சிம்மன்

ஆமையாய் மிதந்து மலை தாங்கி நின்ற சிம்மன்

வராகமாய் பூதேவியை ரக்ஷித்த சிம்மன்

பிரகலாத ஆழ்வானின் பிரசன்ன சிம்மன் !

அனுமன் துதி (சிம்மம்)

விரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய்

உறைவார் முடிவே உணரா முதலோன்simam

கரைவார் நிறைவே கருதாதவன் போல்

உறைவான் மறையாய் ஒரு நீதியனே !

கண்டேன் ஒரு சீதையையே

கருதேன் இனிய ஸ்ரீராமனையே நான்

வென்றேன் எனவே விழைந்தானையே நான்

கொண்டேன் மனமே குலம்வாழ் வதற்கே !

சரமே தொளையா சகமே மறவா

சரீரா அனுமா ஜமதக் கினிநீ

உரமே உறவே உறவோய் பெரியோய்

உயர்வே அருள்வாய் திருமாருதியே !

கோவிந்தன் துதி (கன்னி)

ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ,

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்,kani

தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே,

நெடியானே ! வேங்கடவா ! நின்கோயி லின்வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே !

ராகவேந்திரர் துதி (துலாம்)

நெஞ்சத்திலே என்றென்றும் நிலைக்கின்ற ஆலயம்

நாவினிக்கப் பாடி நின்றால் நலமளிக்கும் ஆலயம்thula

பஞ்சம்பசி துடைக்கின்ற பாராளும் ஆலயம்

பரந்தாமன் அருள்பெற்ற புண்ணியனின் ஆலயம்

கொஞ்சுதமிழ்ப் பாவினிலே கோபுரமாம் ஆலயம்

காவியுடை போர்த்திநின்ற கண்கொள்ளா ஆலயம்

வஞ்ச நெஞ்சம் உடையோரை மாற்றிடுமே ஆலயம்

மாந்தர்குறை தீர்க்கின்ற மகிமை மந்த்ராலயம் !

சிவ துதி (விருச்சிகம்)

நீருளான் தீயுளான் அந்தரத்துள்ளான்

நினைப்பவர் மனத்துள்ளான் நித்தமா ஏத்தும்viruchagam

ஊருளான் எனதுரை தனதுரையாக

ஒற்றைவெள் ளேறு உகந்தேறிய வொருவன்

பாருளார் பாடலோ டாடல் அறாத

பண் முரன்றஞ்சிறை வண்டினம் பாடும்

ஏருளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர்

இருக்கையாப் பேணியென் எழில்கொள்வதியல்பே !

செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்

செல்வ மதிதோய செல்வம் உயர்கின்ற

செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய

செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே !

துர்க்கை துதி (தனுசு)dhanusu

இசைதந்து இல்வாழ்வின் இடர்நீக்கிக் காப்பவளே,

விசையுடனே மணமாலை விருப்பமொடு அளிப்பவளே,

திசையெல்லாம் திருவிளங்கத் திருவடியால் நடந்தவளே,

அசைவற்றபொருளதையும் ஆட்சிசெய்வாய் துர்க்கையளே !

 

துர்க்கை துதி (மகரம்)

சேவித் தெழுந்திருந்தேன் தேவி வடிவங் கண்டேன்

வச்சிரக் கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்

முத்துக்கொண்டைகண்டேன்முழுப் பச்சை மாலை கண்டேன்.

சவுரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக் கண்டேன்

பின்னலழகு கண்டேன் பிறைபோல நெற்றி கண்டேன்

சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங்கண்டேன்magaram

கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்

மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்

கைவளையல் கலகலென்ன கணையாழி மின்னக் கண்டேன்

அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா

வந்தவினையகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா

தாயாரே உன்றன் தாளடியில் சரணம் என்றேன்

மாதாவே யுன்றன் மலரடியில் நான் பணிந்தேன் !

சிவன் துதி (கும்பம்)

ஈசனடி போற்றி யெந்தையடி போற்றி

தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலனடி போற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றிkumbam

சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளும்மலை போற்றி !

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நிழலே !

ஸ்ரீரங்கநாதர் துதி (மீனம்)

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா ! அமரரேறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்,

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !meenamm

வேதநூற் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்,

பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு

பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்

ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே !

ஊரிலேன் காணியில்லை, உறவுமற் றொருவரில்லை

பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி

காரொளி வண்ணனே ! ஓ கண்ணனே ! கதறுகின்றேன்

ஆருளர் களைக ணம்மா ! அரங்கமா நகருளானே !

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post ஒவ்வொரு ரசிகளுக்கான கடவுளின் துதிகள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சபரிமலை யாத்திரை பாகம் –24

$
0
0

காளைகெட்டி:

 கோட்டைப்படி கடந்தால் அடுத்த முக்கிய இடம் காளைகெட்டியாகும். எருமேலியிலிருந்து சுமார் 8 மைல் தொலைவிலுள்ளது இந்தக் காளைகெட்டி என்ற இடமாகும். காளைகெட்டி ஒரு அழகு மிகுந்த வனப்பிரதேசமாகும். இங்கு மஹிஷியை வதம் செய்த ஐயப்பன் அவளைத் தனது காலால் மர்த்தனம் செய்யும் காட்சியை காணவந்த கைலாயவாசன் தனது வாகனமான காளையை இந்த இடத்தில் கட்டியதால் இந்த இடத்திற்கு காளைகெட்டி என்ற பெயர் ஏற்பட்டதாய் கூறப்படுகின்றது.

அழுதாநதி:

 காளைகெட்டியில் இருந்து சுமார் ஒன்றரை மைல் கிழக்காக நடந்தால் அழுதாநதி என்ற இடத்தை அடையலாம். இந்த அழுதாநதி தொடர்ச்சியாகப் பாய்ந்து பம்பாநதியில் கலக்கின்றது. இந்த அழுதாநதியில் குளித்து மூழ்கும்போது நம் கையில் கிடைக்கும் சிறு கல்லை மடியில் கட்டிக் கொண்டு அதை மிகவும் கவனமாய் நாம் கல்லிடும் குன்று என்ற இடத்தில் போடவேண்டும்.

அழுதாமேடும் கல்லிடும் குன்றும்:

அழுதையிலிருந்து நடக்க ஆரம்பிக்கும் ஐயப்பன்மார்களுக்கு இரண்டு மைல் செங்குத்தான மலையேற்றம் எதிர்படும். இதைத்தான் அழுதையேற்றம் என்று சொல்வார்கள். இதைவிட கடினமான ஏற்றம் வேறு ஏதுமில்லை என்று கூறவவேண்டும்.

பக்தர்களான வயோதிகர்களும், குழந்தைகளும் ஐயனின் கருணையினால் சிரமப்படாமல் ஏறுவது கண்கொள்ளாக் காட்சியாகும். ஒவ்வொருவருடைய இருதய சுத்தியையும், பாப சக்தியையும் அளக்கும் இடமாகும். ஐயப்ப பக்தர்கள் பயபக்தியுடன் கொண்டு வந்த கல்லை அழுதாமேட்டின் முடிவில் ஒரு பக்கமாக இருக்கும் கல்லிடும் குன்று என்ற இடத்தில் போட்டு வணங்க வேண்டும்.

அழுதா ஆற்றில் இருந்து தேவர்களால் எறியப்பட்ட கற்கள் மஹிஷியின் பூதவுடலை மறைத்த இடம் இது என்றும் அந்த குன்றை கல்லிடும் குன்று என்றழைத்து பயபக்தியுடன் வணங்குவார்கள்.

இஞ்சிப்பார கோட்டம்:

 அழுதை ஏற்றத்தின் கடினம் இந்த இடத்தை அடையும்போது எதிர்படும் சிறுவாய்க்காலுடன் முடிவடைகிறது. வாய்க்கால் என்றாலும் இங்கு தண்ணீர் கிடைப்பது மிகவும் கடினம். ஆயினும் இதை ஒரு இளைப்பாறும் கட்டமாக பக்தர்கள் கருதுகிறார்கள். இங்கு கோட்டைப்படி சாஸ்தாவை நினைத்து பூஜைகள் நிகழ்த்துவது வழக்கம்.

தாவளங்களையும் கோட்டைகளையும் பற்றிய விபரங்கள்

 இஞ்சிப்பார கோட்டையில் இருந்து கிழக்காக நடந்தால் கரிமலை வரும் கரிமலை உச்சியும் ஒரு இளைப்பாறச் சிறந்த தாவளமாகும். ஆக மொத்தம் ஏழுகோட்டைகளும் அவற்றில் ஏழு தாவளங்களும், சபரிமலை யாத்திரீர்களின் இளைப்பாறும் கேந்திரங்களாகும்.

 எருமேலி, கோட்டைப்படி, காளைகட்டி, இஞ்சிப்பார கோட்டைக் கோட்டை, உடும்பாரமலை, கரிமலைத் தோட்டம், கரிமலை உச்சி, பம்பையாற்றங்கரை, சன்னிதானம் போன்ற இடங்களில் மட்டும் தாவளங்களடித்து இளைப்பாற சிறந்த இடங்களாகத் தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.

மேற்கூறப்பட்டுள்ள கோட்டைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தேவதை உண்டு. ஆகையால்தான் ஒவ்வொரு கோட்டையைத் தாண்டும்போதும் கானகத்தில் நமக்கு துணை புரியும்.

                                                                                                                                                                                                                                                                                     –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சபரிமலை யாத்திரை பாகம் –24 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சபரிமலை யாத்திரை பாகம் –25

$
0
0

கரிமலைத்தோடு தீரம்
கரிமலை ஏற்றம் ஏறுவதற்கு முன்பு ஆகாராதிகள் தயார் செய்யவும், சற்று இளைப்பாறவும் தகுதியுள்ள இடமாகும். இந்த கரிமலைத்தோடு தீரம். தங்குவதற்கு சற்று வசதிக்குறவு என்றாலும், தண்ணீர் தாராளமாகக் கிடைக்கின்றது என்பதால் பக்தர்கள் இங்கு கூடி சற்று இளைப்பாறுகின்றார்கள்.

கரிமலை ஏற்றம்
இளைப்பாறி முடிந்ததும் உடன் நடந்தால் செங்குத்தான கரிமலை ஏற்றம் தான். கரிமலை ஏற்றத்தைப் போன்ற கடினமான ஏற்றம் சபரிமலை யாத்திரையில் வேறு கிடையாது என்று பல பழமக்கார சுவாமிகள் கூறுவது வழக்கம். கரிமலை ஏற்றத்தைக் காட்டிலும் கரிமலை இறக்கம் மிகவும் கடினம். எவ்வளவு ஏற்றமோ அவ்வளவு இறக்கம் உண்டு.

மரங்களின் வேர், பெரிய, சிறிய பாறைகள் இவற்றின் மீது அதிகவனமாக இறங்க வேண்டும். இந்த இறக்கம் இறங்கும்போது, பெரியானை வட்டம், சிறியானை வட்டம் என்ற இடங்கள் எதிர்ப்படும். இங்கு சிறு வாய்க்கால்களில் பளிங்கு போன்ற நீர் சலசலத்தோடும். யானைகள் கூட்டமாய் வந்து தாகம் தீர்த்துக் கொள்ளும் இடம் என்பதால் இருட்டு வேளைகளில் தனியாக இந்த இடத்தைக் கடக்க மாட்டார்கள். இந்த இடத்தை கடந்து சிறிய தூரம் சென்றால் பம்பாநதியைக் காணலாம்.

புண்ணிய பம்பாநதி
பம்பாஸ-கிஸ்தலம் புவனேகசுந்தரம் பந்தள ராஜனின் கமனீய மந்திரம், தஷிண கங்கையென்ற அடைமொழியுடன் கீர்த்தி பெற்றதும் ஐயப்பனின் ஜனனஸ்தானம் என்ற புகழும் இந்த பம்பா தீர்த்தத்திற்கு உண்டு. அநேக வனமூலிகைகளின் சாறு கலந்து பாவங்களைக் கொல்லும் அபார சக்தியும் நிரம்பப்பெற்று ஸ்படிகத்திற்கு ஒப்பான நிறத்துடன் கரை புரண்டோடும் பம்பையின் ஜலப்ரவாஹம் நமது இருதயத்தை ஆகர்ஷித்து நிர்மாலயத்தை ஏற்படுத்தும்.

பம்பாஸத்தியும் குருதட்சணையும்
கங்கை நதிக்கொப்பான புனித பம்பையில் நீராடி பாவங்களைந்து புனிதராய் ஐயப்பன்மார் தமது விரியில் குருசாமி எல்லோருடைய இருமுடிகளின் பின்முடிகளைப் பிரித்து அதிலிருந்து உணவுப்பொருட்களை எடுத்து உணவு தயாரிப்பார்கள். இதனை பம்பாஸத்தி என்று அழைப்பார்கள். இங்கு கன்னி ஐயப்பன்மார்களிடம் தட்டு கொடுத்து 108 அடுப்புகளில் இருந்து சாம்பல் எடுக்கப்பட்டு அதனை வஸ்திரகாயம் செய்து கொண்டு வரும்படி குருசாமி கூறுவார்.

இச்சாம்பலை பூஜையின்போது விபூதியாக உபயோகிப்பது வழக்கம். அதன்பின் இருமுடிகளை கட்டி ஒன்றாக வைத்து உணவுகளை இலையில் இருமுடிகளுக்கு முன்வைத்து நைவேத்தியம் செய்து பஜனை, பூஜைகள் செய்து முதலில் கன்னி ஐயப்பன்மார்களுக்கு அன்னதானம் செய்வார்கள். இந்த விருந்தில் சாஷாத் ஐயப்ப சுவாமியே கலந்து கொண்டு தங்களுடன் உணவருந்த வருவார் என்பது கருதப்படுகின்றது.

                                                                                                                                     –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சபரிமலை யாத்திரை பாகம் –25 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சபரிமலை யாத்திரை பாகம் –26

$
0
0

பம்பா விளக்கு(PAMBA VILAKKU):

பம்பாஸத்தி முடிந்த மாலை நேரத்தில் பம்பா விளக்கினை சிறு மூங்கல், மெழுகுவர்த்திகள் கொண்டு அவரவர் கைவண்ணத்தில் தமது குழுவினராக தமது தோளில் சுமந்து சென்று பம்பா விளக்கே சரணமய்யப்பா என்று சரணகோஷத்துடன் பம்பையாற்றில் விடுவர்.

நீலிமலையும் (NEELI MAZHA) அப்பாச்சிமேடும் (APPACHI MEDU)  அப்பாச்சிக் குழியும் (APPACHI KUZHI):

பம்பையிலிருந்து புறப்பட வருவது நீலிமலையாகும். நீலிமலை சற்று கடினமாகவே இருக்கும் ஏனென்றால் அது மிகவும் செங்குத்தாக இருக்கும். மலை ஏற்றம் முடியும் இடத்திற்கு அப்பாச்சிமேடு என்று பெயர். அப்பாச்சிமேடு வந்தவுடன் இருபுறமும் உள்ள பள்ளத்தாக்கு பகுதிகளிற்கு வெல்லக்கட்டி இட்டு வணங்க வேண்டும் கடூரவனையும், துர்தேவதைகளையும் திருப்பதிப்படுத்த வேண்டி இச்சடங்குகள் நடத்தி வழிபாடு செய்வது வழக்கம்.

நீலிமலையில் சுப்பிரமணியர் பாதை:

ஐயப்பன் வாசம் செய்யும் சபரியை அடையும் முன்பு கால் முட்டி, தரையில் உரசுமளவுக்கு நாம் ஏறும் மூன்றாவது மலை இது. நீலிமலையில் வசித்த மாதங்க மகரிஷி, தன் மகள் நீலியுடன் சிவனை நோக்கி தவம் செய்ததாகவும், அவளது பெயரில் இம்மலை விளங்குவதாகவும் கூறப்படுகிறது. இம்மலைப்பாதையின் துவக்கப் பகுதியில், வலது பக்கமாக ஒரு பாதை பிரிகிறது. இதை “சுப்பிரமணியர் பாதை’ என்பர்.

இந்த வழியாகத்தான் ஐயப்பன் கோயிலுக்கு தேவையான சாமான்கள் கழுதை மூலமாக கொண்டு செல்லப்படுகிறது. நீலிமலை ஏற்றத்தில் அப்பாச்சி மேடு, இப்பாச்சி குழி என்ற சமதளப்பகுதி வருகிறது. அப்பாச்சிமேட்டில் பச்சரிசி மாவு உருண்டையை கன்னிசுவாமிகள் வீசி எறிவார்கள். வனதேவதையை திருப்திப்படுத்த இந்த வழிபாடு நடத்தப்படுகிறது

                                                                                                                                     –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சபரிமலை யாத்திரை பாகம் –26 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சபரிமலை யாத்திரை பாகம் –27

$
0
0

சபரிபீடம்

அப்பாச்சிமேட்டைக் கடந்து சற்று நடந்தால் இயற்கை அழகு நிறைந்த ஒரு சமநிலத்தைக் காணலாம். நீலிமலையின் உச்சியில் சபரிபீடம் உள்ளது. இந்த பீடம் உள்ள பகுதியில் தான் “சபரிமலை’ என்று பெயர் தோன்றக் காரணமான சபரி அன்னை வசித்தாள்.

மதங்க முனிவர் என்னும் முனிவர்:

மதங்கொண்ட ஐம்புலன்களையும் அடக்கி தவம் செய்து தவத்தின் வலிமையால் தனது சீடர்களுடன் பிரமலோகம் செல்லும் பாக்கியம் பெற தவம் செய்த இடம் இதுதான். மதங்க முனிவரின் முதல் சீடரான “சபரி” மதங்க முனிவரோடு பிரமலோகம் செலும் பாக்கியம் கிடைத்தும் இராமபிரான் மீது கொண்ட பக்தியால் அவரைப் பூலோகத்தில் பூசிப்பதற்கும் அதன் பின்னர் பிரமலோகம் செல்வதற்கும் பிரமதேவனிடம் வரத்தினைப் பெற்றுக் கொண்டு தவம் செய்து இராமபிரானைச் தரிசித்த இடமும் இதுதான்.

இந்த மூதாட்டிக்கு ராமபிரானின் மீது மிகுந்த பக்தி உண்டு. பக்தன் பகவானைத் தேடி சென்றது விஷ்ணுவின் மற்ற அவதாரங்களில்… ஆனால், பகவான் பக்தனைத் தேடி, தனக்குத்தானே 14 ஆண்டு காட்டுவாசம் என்ற தண்டனையை விதித்துக் கொண்டு வந்த அவதாரமே ஸ்ரீராம அவதாரம். அவ்வகையில், ராமபிரான் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டு, விஸ்வாமித்திரருக்கு தொண்டு செய்து, இன்னும் காட்டிலுள்ள பல மகரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். அந்த ரிஷிகளுக்கும் மேலான பக்தியைக் கொண்டவள் சபரி அன்னை. இவள், இந்த மலையில் தங்கி ராமனின் தரிசனத்திற்காக காத்திருந்தாள். அவள் என்ன செய்தாள் தெரியுமா?

ராமனுக்காக காட்டில் கிடைக்கும் இலந்தைப்பழங்களைப் பொறுக்கினாள். அதை கடித்துப் பார்த்து, இனிப்பானவற்றை சேர்த்து வைத்தாள். இலந்தையை காய்ந்தாலும் தின்னலாம். ராமன் வந்ததும் அந்தப் பழங்களை காணிக்கையாக்கினாள்.எச்சில் பழமெனக் கருதாத பகவானும் சபரியின் அன்பை அந்தப் பழங்களைச் சாப்பிட்டதன் மூலம் ஏற்றார். அவளுக்கு மோட்சம் தந்தார். அந்த பரமபக்தையின் பெயரே சபரிமலைக்கு நிலைத்து விட்டது. இங்கிருந்து சன்னிதானம் வரை சமதளமான பாதையில் ஆசுவாசமாக நடந்து செல்லலாம்.

இந்த இடத்தில் இராமபிராணைக் காண பக்தை சபரி அமர்ந்து தவம் செய்தது. இச்சபரிபீடத்தில் விடல் தேங்காய் உடைத்து வழிபாடு செய்கிறார்கள் இந்த ஸ்ரீ சபரிபீடத்தை ஐந்தாவது கோட்டையாகக் கருதி வழிபடுகிறார்கள்.

                                                                                                                                     –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சபரிமலை யாத்திரை பாகம் –27 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ஆண்டாள் அருளிய திருப்பாவை

$
0
0

ஆண்டாள் (Andal) அருளிய  திருப்பாவை (Thiruppavai) இன்று முதல்…

 ஆண்டாள் (Andal) பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்தான கண்ணனை மணப்பதையே எண்ணிக்கொண்டிருப்பதற்கு சிகரம் வைத்தது போன்றது திருப்பாவை (Thiruppavai).

திருப்பாவையில் பொழுது விடிவதற்குரிய அடையாளங்கள் பல கூறப்பட்டுள்ளன. அவை, கீழ்வானம் வெளுப்பது, கோழி கூவுவது, பறவைகள் ஒலிப்பது, முனிவர்களும் யோகிகளும் துயிலெழுந்து செல்வது போன்றவை. அதை விரிவாகக் கீழே பார்க்கலாம். காலை நேரத்தின் பலவித சப்தங்களையும் நடைமுறைகளையும் இயல்பாகச் சொல்லும் திருப்பாவை பக்தியும் இலக்கிய நயமும் கலந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்று.

திருப்பாவை முப்பது பாடல்களையும் நோக்கும்போது ஆண்டாள் பெரும்பாலும் தன் தோழிகளையும் கண்ணனின் உறவினர்களையும், இறுதியில் கண்ணனையும் துயிலெழுப்புகிறார். புறத்தூய்மையாலும் அகத்தூய்மையாலும் அவனை அடைய உங்களால் முடியும் என்ற புது நோக்கில் எழுதிய அந்த இளம் பெண் நூற்றாண்டுகள் கடந்தும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறாள்.

 ஸ்ரீ ஆண்டாள் (Shree Andal)

 ஸ்ரீவில்லிபுத்தூரில் (Srivilliputhur) வாழ்ந்திருந்த பெரியாழ்வார் (periyalwar) வீட்டு துளசி (Thulsi) மாடத்தில் கண்டெடுக்கப்பெற்று, அவரால் வளர்க்கப்பட்டவர் ஸ்ரீஆண்டாள்(Sree Andal). பெரியாழ்வார் கண்ணபிரானை(Sri Krishna) பெருந்தெய்வமாக கருதி, அவர்மீது பல பாடல்களைப்பாடியுள்ளார். அவைகளை தினமும் கேட்டு வளர்ந்த ஆண்டாள், தானும் கிருஷ்ண பக்தியில் அளவிலா ஈடுபட்டு, கண்ணனிடம் (Kannan) தெய்வீக காதலும் கொண்டு, அவரை மணக்கவும் ஆசைப்பட்டாள். Shree Ranganathar, Andal, Thiruppavaiதான் பிறந்து வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயினும், தன்னை கோகுலத்திலுள்ள (Gokulam) கோபியராகவே கருதி, கண்ணனை மணக்க வேண்டி, ‘பாவை நோன்பு’ நோற்றாள். அப்பொழுது அவர் பாடிய முப்பது பாடல்களை ‘திருப்பாவை’ என்றும், தான் கண்ணனை மணப்பதாக கனவு கண்டு பாடிய 143 பாடல்களை ‘நாச்சியார் திருமொழி’ (Nachiyar Thirumozhi) என்றும் கூறுவர். பின்னர் ஸ்ரீரங்கத்திலுள்ள (Sri Rangam) ஸ்ரீரங்கநாதனையே (Shree Ranganathan) சென்றடைந்து, அவருடன் இரண்டறக்கலந்தார்.

திருப்பாவை – 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:
மார்கழி மாதம் பிறந்து விட்டது முழு நிலவு ஒளிவீசுகிறது. செல்ல வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! எழுந்திருங்கள். இன்று நாம் அதிகாலையில் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை(Lotus) மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய, சந்திரர்களைப் போல பிரகாசிக்கும் திருமுகத்தையுடையவனும், நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் ஆண்டாள்(Andal).

– திருப்பாவை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post ஆண்டாள் அருளிய திருப்பாவை appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


திருவெம்பாவை (Thiruvempavai) பாடல்கள் அருளிய மாணிக்கவாசகர் (Manikkavasagar)

$
0
0

திருவெம்பாவை (Thiruvempavai) பாடல்கள் அருளிய மாணிக்கவாசகர் (Manikkavasagar)

மாணிக்கவாசகர்(Manikkavasagar):

மாணிக்கவாசகர்(Manikkavasagar) அருளிய திருவெம்பாவை (Thiruvempavai)மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர்.  இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும்(Thiruvasagam), திருவெம்பாவை (Thiruvempavai), திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார். இவர் பாடிய பாடல்கள் “திருவாசகம்” என அழைக்கப்படுகின்றன. “சிறை பெறா நீர் போல் சின்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே” என்பதாலும், “இமைப் பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.” எனும் அடிகளால் தமிழின் அருட் திறத்தையும், வாதவூரரிற்கும் இறைவனுக்குமான நெருக்கத்தையும் உணரலாம். ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் (Chidambaram) சாயுச்சிய முக்கியடைந்தார்.

திருவெம்பாவை பாடல் 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே
ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.

பொருள்:

வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!

விளக்கம்:

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலையில் பவனி வருகிறார். அவரைத் தரிசிக்க பெண்கள் காத்து நிற்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த இந்த நற்பேறு தங்கள் தோழிக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அவளை எழுப்புகிறார்கள்.

-திருவெம்பாவை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post திருவெம்பாவை (Thiruvempavai) பாடல்கள் அருளிய மாணிக்கவாசகர் (Manikkavasagar) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ஆண்டாள் (Andal) அருளிய திருப்பாவை (Thiruppavai) பாசுரம் -2

$
0
0

திருப்பாவை Thiruppavai பாசுரம் 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

 

திருப்பாவை (Thiruppavai) பாசுரம்  விளக்கம்:

பாவை நோன்பு நோற்பவர்களுக்கு திருப்பாவை Thiruppavai இரண்டாம் பாசுரத்தில் ஆண்டாள் (Andal) சில கோட்பாடுகளை விதிக்கிறாள். நோன்பில் ஈடுப்பட்டவர்கள் செய்ய வேண்டிய நான்கு விஷயங்களையும், தவிர்க்க வேண்டிய ஆறு விஷயங்களையும் தெரிவிக்கிறாள். கண்ணன் (Kannan) பிறந்த இந்த பூமியில் பிறந்து வாழ்பவர்களே, திருப்பாற்கடலில் துயிலும் அந்த பகவானின் (Bhagavan) நாம சங்கீர்த்தனங்களை (Karnatic Music) அன்புடன் பாடி, நெய் உண்ணாது, பால் பருகாது, அதிகாலையில் நீராடி, கண்களுக்கு மை இடாமல், மலர்களை நாம் சூடாமல், செய்யக்கூடாதவற்றைச்செய்யாமல், பொய் பேசாது, அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசாது நாம் நோன்பு நோற்கவேண்டும்.

இந்த வையத்தில் வாழும் பேறு பெற்றவர்களே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி வாழ, வாழ்வில் கடைத்தேற வேண்டிய வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் கள்ளத் துயில் கொண்டு கண்வளரும் பரமனின் திருவடியைப் போற்றிப் பாடி, நம் ஆசார்யர்களாகிற பெரியோர்களுக்கு இடுகின்றதான ஐயத்தையும், துன்பத்தே உழல்வார்க்கு இடும் பிட்சையையும் நம் சக்தி உள்ளளவும் இட்டு மகிழ்வோம்.

இப்போது, நமது நோன்புக்குச் செய்ய வேண்டிய கிரியைகளைக் கூறுகிறேன்… காது கொடுத்துக் கேளுங்கள். நோன்பு நோற்கத் தொடங்கிய பிறகு நாம் உடலுக்கு ஊட்டமும் உரமும் தரும் நெய் உண்ணக்கூடாது. பாலை உண்ணக் கூடாது. விடியற் காலத்தே உடற்தூய்மை பேண நன்னீரால் குளித்துவர வேண்டும். பின்னர் வழக்கமாக நாம் மேற்கொள்ளும் கண்ணுக்கு மையிட்டு அலங்காரம் செய்தல், கருங்கூந்தலிலே மலர்சூடி அழகு சேர்த்தல் ஆகியவற்றை நோன்புக் காலத்தே விலக்குவோம்.

இவ்வாறு நம் முன்னோர்கள் எதைச் செய்யக்கூடாது என்று வைத்தார்களோ அவற்றை செய்யாதிருப்போம். பெருமான் பக்கலில் நின்று, கொடுமையும் தீமையும் விளைவிக்கும் சொற்களைக் கூறாதிருப்போம் என்று நோன்புக் காலத்தின் கிரியைகளை தோழியர்க்குக் கூறுகிறாள் ஆண்டாள்.

– திருப்பாவை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post ஆண்டாள் (Andal) அருளிய திருப்பாவை (Thiruppavai) பாசுரம் -2 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

திருவெம்பாவை (Thiruvempavai) பாடல்கள் அருளிய மாணிக்கவாசகர் (Manikkavasagar) பாடல் 2

$
0
0

திருவெம்பாவை (Thiruvempavai) பாடல்கள் அருளிய மாணிக்கவாசகர் (Manikkavasagar)

திருவெம்பாவை (Thiruvempavai) பாடல்– 2 

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை (Thiruvempavai) பொருள்:

           “அருமையான அணிகலன்களை (Jewels) அணிந்த தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது “ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் (Thiruvannamalai) மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய், என்கிறார்கள் தோழிகள். உறங்குபவள் எழுந்து, “”தோழியரே! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது? என்றாள். அவளுக்கு பதிலளித்த தோழியர்,””கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. நமக்கோ, நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் வாழ்பவன், திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நம்மைத் தேடி வருபவன் மீது நாம் எவ்வளவு தூரம் பாசம் வைக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாயாக, என்றனர்.

-திருவெம்பாவை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post திருவெம்பாவை (Thiruvempavai) பாடல்கள் அருளிய மாணிக்கவாசகர் (Manikkavasagar) பாடல் 2 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சபரிமலை(Sabarimala) யாத்திரை(yatra) பாகம் –28

$
0
0

சபரிமலை (Sabarimala) யாத்திரை (yatra)

பாகம் –28

யானைப்பாதை:

 நீலிமலை (Neeli mala) உச்சியில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லும் பாதை இரண்டாகப்பிரிகிறது. இடது பக்கம் செல்லும் பாதை யானைப்பாதை (Yaanai paathai) எனப்படுகிறது. ஆனால், பக்தர்கள் வலது பக்கம் உள்ள சரங்குத்தி (Saranguthi) பாதை வழியாகத்தான் செல்கின்றனர். சபரிபீடத்தை (sabaripeedam) அடுத்து வருவது சரங்குத்தி. இங்கு கன்னிச்சாமிகள், எருமேலியில் (Erimeli) பேட்டை துள்ளிவிட்டு கொண்டுவரும் மரக்கத்திகளை போட்டு வழிபடுகின்றனர்.

சரங்குத்தி ஆல் (Saranguthi Aal):

 சபரிபீடத்திற்கடுத்தாக வருவது சரங்குத்தி ஆல். இங்கு கன்னி ஐயப்பன்மார் தங்களுடைய கன்னி யாத்திரையை உறுதி செய்து கொள்ளும் கட்டம் இதுதான். இந்த இடத்தில் தங்களுக்கு குருசாமியால் எருமேலிப்பேட்டையில் கொடுக்கப்பட்ட தங்களுடன் அதிஜாக்கிரதையாய் காட்டுவழித் துணையாய் கொண்டுவந்த சரத்தை அந்த சரங்குத்தி ஆல் என்ற இடத்தில் விடுக்க வேண்டும்.

சபரிமலை ஐயப்பன் (Sabarimala Iyyappan):

 சரங்குத்தி தாண்டியவுடன் தெரியும் ஐயப்பனின் (Iyyapan) தங்க கோயிலை தரிசித்தவுடனேயே, பஞ்சேந்திரியங்களையும் தட்டி எழுபபி மனம் உற்சாகமாகிறது. சரங்குத்தியிலிருந்தே ஐயப்பனின் நான்காவது மலையான சபரிமலை (Sabarimala) ஆரம்பமாகிறது. நெருங்க நெருங்க “சாமியே சரணம் (Swamiye Saranam Iyyappa) ஐயப்பா’ என்று பக்தர்கள் முழங்கும் சரண கோஷம் விண்ணைப்பிளக்கிறது.

    சன்னிதானத்தை அடைந்ததும், பதினெட்டாம் படியை நெருங்கியவுடன் கருப்பசாமி (Karuppasamy), கடுத்தசாமியை (Kadutha Samy) வணங்கி வலது பக்கத்தில் தேங்காயை உடைத்து விட்டு படியேற வேண்டும். நாம் செய்த பாவங்கள் விலகி, ஆணவம் அடங்கி ஐயப்பனின் தரிசனம் வேண்டும் என்ற அடிப்படையில் தான் படி ஏறும் முன் தேங்காய் உடைக்கப்படுகிறது. இங்குள்ள 18 படிகளும் 18 தெய்வங்களாக விளங்குவதால், தலையில் இருமுடி (Irumudi) வைத்திருப்பவர்கள் மட்டுமே 18 படி ஏறமுடியும்.

மூலஸ்தானம்(Sannithanam):

 கொடிமரம் தாண்டியவுடன் உள்ள சன்னதியில்(Sannathi) ஆனந்த சொரூபனாய், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக, கேட்டவரம் தரும் வள்ளலாக ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இவர் மூன்று விரலை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக் கொண்டு “சின்முத்திரை’ காட்டுகிறார். “சித்’ என்றால் “அறிவு’. இந்த வார்த்தையே “சின்’ என திரிந்துள்ளது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவது சின்முத்திரை.

சின்முத்திரை:

நாம் உய்யும் வழியை காட்டுவதுதான் சின்முத்திரை. கட்டைவிரலை ஆள்காட்டிவிரல் வளைந்து ஒட்டிக்கொண்டிருக்கிறது. மற்றைய மூன்று விரல்களும் நிமிர்ந்து நிற்கின்றது.  இங்கே கட்டைவிரல் இறைவனாகவும், ஆள்காட்டிவிரல் ஆன்மாவாகவும், மற்றைய மூன்று விரல்களும் மும்மலங்கள் என்றழைக்கப்ப்டும் ஆணவம், கன்மம், மாயையாக ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதுவும் பெருவிரல் இறைவனாக வேறு இடத்தில் அமைந்திருக்க மற்றைய நான்கு விரல்களும் ஒன்றாக அமைந்துள்ளன. எப்பொழுது ஆள்காட்டிவிலான ஆன்மா (Athma) தன்னைப் பீடித்துள்ள மும்மலங்களை விலக்கி இறைவனாகிய கட்டைவிரலுடன் இணைகின்றதோ அதுவே முக்தி என சின்முத்திரை உணர்த்துகிறது.

யோக பட்டம்:

 யோகபாதாசனத்தில், சற்று கண் திறந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனைக் கண்குளிரத் தரிசிக்கும் போது, இவரது காலில் சுற்றியுள்ள வஸ்திரம் ஒன்றை அவசியம் கவனிக்க வேண்டும். இதை “யோக பட்டம்’ என்பர்.

 –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சபரிமலை(Sabarimala) யாத்திரை(yatra) பாகம் –28 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சபரிமலை (Sabarimala) யாத்திரை (yatra) பாகம் –29

$
0
0

சபரிமலை (Sabarimala) யாத்திரை (yatra)

பாகம் –29

சபரிமலைகோயில் அமைப்பு (Sabarimala Temple Structure):

ஐயப்பனின் (Iyyappan) கருவறை ஒரு சதுரமான மாடியின் மையத்தில் நீண்ட சதுர வடிவில் நீளவாக்கில் அமைந்துள்ளது. அந்த நீண்ட சதுரத்தின் மீது கொட்டகை போட்டது போன்று தங்கத்தகடுகள் (Golden Plates) தட்டையாக இல்லாமல் இரண்டு புறமும் சாய்ப்புல் போல் இருக்கும். இந்தக் கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் முன் பகுதியில் இடது, வலதாக அமைந்த ஓட்டு வீடு போன்ற நுழைவாயில் உள்ளதுsabarimala yatra, iyyappan, pampa, temple, kerala, travancore devaswom board

அந்த ஓட்டு வீட்டின் முகப்பும் நீட்டிவிடப் பெற்றுச் சாய்ப்பான ஓட்டு வீடு போல்தான் இருக்கும். ஐயப்பனின் முன்னுள்ள ஓட்டுப் பகுதியில் நின்றால் மட்டுமே வெயில் மழை நம்மீது படாது.

பஸ்மக்குள தீர்த்தம் ஐயப்பன் கோயிலில் புண்ணிய தீர்த்தமாக கருதப்படுவது பஸ்மக்குளம். ஒரு காலத்தில் இக்குளத்து நீர் தேங்காய் தண்ணீரை விட சுவையாக இருந்தது. இதில் பார்வை பட்டாலே பாவங்கள் பறந்தோடும் என்பது நம்பிக்கை.

உயரமான ஒரு பெரிய முதல் மாடியில் அமைந்துள்ள கோவிலாக அமைந்திருப்பதால் சரங்குத்தி வந்தவுடனேயே கோவில் நம் கண்ணில் தென்பட்டு, ‘கண்டேன், கண்டேன் உன் திருக்கோவில்’ என்று கூற வைக்கிறது.

பதினெட்டு படி ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம். சன்னிதான வாசலில் தத்வமஸி (Thathuvamasi)  என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது நீ எதை நாடி வந்தாயோ அது நீயாகவே உள்ளாய் என்பது இதன் பொருள்.

sabarimala yatra, iyyappan, pampa, temple, kerala, travancore devaswom board

நான், இங்கிருந்து உன்னை எப்படி பாதுகாக்கிறேனோ, அதுபோல் நீயும் உன்னைச் சார்ந்தவர்களை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள். அவர்களிடம் நல்லதைப் பேசு, நல்லதை செய், நன்மையே நாடு என்பது இந்தச்சொல்லுக்குள்அடங்கியுள்ள தத்துவம்.

நெய் அபிஷேகம்

ஐயப்பனை வணங்கி விட்டு கணபதி (Lord Ganesh), நாகரை வணங்க வேண்டும். இருமுடியில் உள்ள நெய் தேங்காயை உடைத்து அதிலிருக்கும் நெய்யை ஐயப்பனின் அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும். நெய் அபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலகத்தில் பணம் கட்டி ரசீது பெறவேண்டும். அபிஷேகம் செய்த நெய்யை பாத்திரத்தில் ஊற்றி புரோகிதர் பக்தருக்கு கொடுப்பார். இந்த நெய் ஒரு புனிதமான மருந்து என்பதால் பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு வருவர்.

sabarimala yatra, iyyappan, pampa, temple, kerala, travancore devaswom board

உடைத்த தேங்காயின் ஒரு பகுதியை அக்னி குண்டத்தில் (Agni Gundam) போட்டு விட வேண்டும். பிரகாரத்தில் நெய்தீப மேடை உள்ளது. ஐயப்பனிடம் (Iyyappan) வேண்டிக்கொண்டு இங்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தீமைகள் விலகி நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை.

 –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சபரிமலை (Sabarimala) யாத்திரை (yatra) பாகம் –29 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Viewing all 679 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>