Quantcast
Channel: Featued – Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV
Viewing all 679 articles
Browse latest View live

லிங்கமாக மாறிய மரக்காணம் பூமீஈஸ்வரர்

$
0
0

 விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் அழகிய தோற்றத்துடன் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க பூமீஈஸ்வரர் கோயில் பூமிஈஸ்வரரை வழிபட்டால் நிலப்பிரச்னை தீர்ந்து வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெறலாம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

  பண்டைய காலத்தில் எயிர் பட்டினம் என அழைக்கப்பட்டது. எயிர் என்றால் அரண் என்று பொருள். கி.மு 300 ம் ஆண்டு இப்பகுதி தொண்டை நாட்டு அரசனின் துறைமுகபட்டினமாக திகழ்ந்துள்ளது. முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் கி.பி 996 ஆம் ஆண்டு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

  விஜயராஜமன்னன் கம்பண்ன உடையார் ஆட்சியின் போது மீண்டும் மரக்காணம் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த கோயிலின் தல விருட்சம் வில்வம். இத்தனை வரலாற்று சிறப்புமிக்க இந்தகோயிலின் வடக்குபுறத்தில் பிச்சாடனார், தட்சணாமூர்த்தி சிலைகளும், மேற்கு பகுதியில் விஷ்ணு சிலையும், வடக்குப்பகுதியில் பிரம்மன் மற்றும் துர்க்கையும் அமைந்துள்ளது.   தினமும் இக்கோயிலுக்கு வந்து பூமிஈஸ்வரரை தரிசனம் செய்தால் நில சம்பந்தமான பிரச்னைகள் தீரும். பூமி வாங்கவும், விற்கவும் பூமி சம்பந்தமான கோயில் என்பதால் பூமீஈஸ்வரர் என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர்.

  ஒருவர் தனது நிலத்தை விற்கவோ அல்லது வாங்கவோ நினைத்தால் இந்த கோயிலுக்கு வந்து இங்குள்ள சிவனை வணங்கி விட்டு கோயிலில் இருந்து சிறிது மண் எடுத்து சென்று பிரச்னை உடைய நிலத்தில் தூவினால் சில நாட்களிலேயே அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விடும் என்பது ஐதீகம். திருமணத்தடை, குழந்தையின்மை, ராகு கேது தோஷம், தீராத நோய்கள் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்கும் வல்லமை கொண்வர் பூமிஈஸ்வரர். கோயிலின் உள்பகுதியில் கிரிஜாம்பாள் கோயில் (அம்பாள்) அமைந்துள்ளது. மேலும் நவக்கிரகங்கள், பைரவர், முருகப்பெருமான், சித்தி விநாயகர் ஆகிய கடவுளர்களும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

  கோயிலின் எதிர்புறத்தில் அழகிய தோற்றத்துடன் கூடிய கொடிமரம் மற்றும் நந்தீஸ்வரர் சிலையும் உள்ளது. மேலும் கோயிலின் எதிர்புறத்தில் சூரியன், சந்திரன் இணைந்த சிற்பமும் அழகுற அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்பு மிக்க சிற்பங்கள் அனைத்தும் ராஜராஜ சோழன் காலத்து சிற்பங்கள் ஆகும். பல நூறு ஆண்டுகள் ஆகியும் இந்த சிற்பங்கள் சிதிலமடையாமல் கம்பீரமாக அமைந்துள்ளது. பூமிஈஸ்வரரை வழிபட்டால் நிலப்பிரச்னை தீர்ந்து வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெறலாம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

 வெளியூரில் இருந்து வந்த சிவபக்தர் ஒருவர் மரக்காணம் பகுதியில் சிவபெருமானை வழிபடுவதற்காக கோயிலை தேடினார். அப்போது கோயில் கட்டப்படவில்லை. உடனே அருகில் உள்ள விவசாயி ஒருவரிடம் நெல் அளக்கும் பெரிய மரக்காவை வாங்கி அதனை கவிழ்த்து சிவலிங்கமாக மனதில் நினைத்து வழிபட்டு வந்தார். பின்னர் அவர் வெளியூர் சென்று விட்டார். இதற்கிடையே மரக்காவை தேடிவந்தபோது அதனை காணாமல் விவசாயி அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அங்கு சிவலிங்கம் காணப்பட்டது. இதனால் பரவசம் அடைந்த அவர் மரக்காவை காணோம், மரக்கா சிவலிங்கமாக மாறிவிட்டது என்று கூறியிருக்கிறார். அதனால் மரக்காணம் என்ற பெயர் வந்ததாகவும் இப்பகுதி பெரியவர்கள் கூறுகிறார்கள். சுயம்புவாக தோன்றியதால் இங்குள்ள சிவலிங்கத்திற்கு சக்தி அதிகம்

தொடர்புக்கு :  9500485233

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post லிங்கமாக மாறிய மரக்காணம் பூமீஈஸ்வரர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


சபரிமலை யாத்திரை பாகம் –12

$
0
0

மணிகண்டன் அவதாரம்:     

  கைலாசவாசன் தேவர்களின் குறை தீர்க்க எண்ணி விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ-வைஷ்ணவ ஜோதியான  ஐயனாரிடம் சென்று மகிஷியை மர்த்தனம் செய்து தேவர்களைக் காப்பாற்றவும், பந்தள மன்னனின் பிள்ளைக் கலி தீரக்கவும், சபரிக்கு அனுக்கிரகம் செய்வதற்காகவும்  பாண்டிய நாட்டின் இராசசேகர மன்னனுக்கு மகனாக அவதரிக்கும் பாக்கியம் தங்களுக்கு கிடைத்துள்ளது என அனுக்கிரகித்து; பூலோகத்தில் உனது அவதார நோக்கம் நிறைவுற இதோ இந்த “மணி” உனது கழுத்திலே “ரட்சா பந்தனமாக இருக்கட்டும்” என்று கூறி ஒரு மணி மாலையை அணிந்தார். அதன் பின் ஐயப்ப பிரானை  ஒரு குழந்தையாக்கி பம்பா நதிக்கரையை அடைந்தார். அங்கு அவர் ஓர் ரிஷிபோல் ரூபமெடுத்து சாஸ்தாவாகிய குழந்தையுடன் வேட்டைக்கு வந்த தனது பக்தனான ராஜசேகரனின் வரவை எதிபார்த்து ஒரு மரத்தடியில் காத்திருந்தார்.

 வனத்தில் வேட்டைக்கு வந்த பந்தள தேசத்து மன்ன பம்பா நதிக்கரை பக்கம் வந்தபோது ஒரு பச்சைக் குழந்தையின் அழுகுரல் கேட்டது.  குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மன்னன். என்ன ஆச்சரியம் கோடி சூரியனின் பிரகாசத்துடன் ஒரு ஆண் குழந்தை கழுத்தில் மணியுடன் அழுது கொண்டிருந்தது. குழந்தை அழகோ, அழகு!!! ஒரு பூவே பூத்து வந்தது போல மன்னனைப் பார்த்ததும் சிரித்தது. மன்னன் கையில் எடுத்தான் அந்தக் குழந்தயை, மார்போடு அள்ளி அணைத்தான், சுற்றும், முற்றும் பார்த்தான்,  யாரையும் காணவில்லை.

 அப்போது அங்கே தோன்றினார் ஒரு வேதியர். குழந்தையையும், மன்னனையும் பார்த்தார்.  “மன்னா, குழந்தை இல்லாத உன் பிள்ளைக் கலி தீர்க்க வந்த இந்தப் பாலகனை நீ வளர்த்து வா! இவனால் உன் ராஜ வம்சமே பெருமை அடையும். இவனின் பெருமையை நீயும் பின்னால் உணருவாய்.” எனக் கூறி மறைந்தார்.

 கழுத்தில் மணி இருந்ததால் “மணிகண்டன்” என்னும் பெயர் சூட்டினார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மணிகண்டன் வளர்ந்து வந்தான்.  மணிகண்டன் வந்த சில நாட்களில் ராணிக்கும் எல்லா லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான். ராஜராஜன் என பெயர் சூட்டி வளர்த்து வரலாயினர்.

 ஐயப்பனை குருகுலத்தில் சேர்க்க மன்னன் முடிவு செய்தான். தெய்வக்குழந்தையான அவன் குறுகிய காலத்திலேயே நான்கு வேதம், ஆறு சாஸ்த்திரம், 64 கலைகள் ஆகிய அனைத்தையும் கற்று தேர்ந்தான்.

 பிறவியிலேயே ஊமையாக குருகுலத்தில் இருந்த குருவின் மகனான கண்ணனை மணிகண்டன் பேசவைத்தான். மணிகண்டனின் அபூர்வ சக்திகளையும் செயல்களையும் கண்ட குரு அவரை தாங்கள் யார்  என்பதனை அறிய விரும்புவதாக கூறினார். குருவுக்கு உண்மையை மறைக்க விரும்பாத மணிகண்டன் தான் யார் என்பனை கூறி அதனை இரகசியமாக வைத்திருக்க வேண்டினார். அத்துடன் குருதட்சிணையாக ஆண்டு தோறும் மகர சங்கிராந்தி தினத்தில் ஜோதி சொரூபனாக காட்சி தருவதாக கூறினான்.

 தனது ஞான அறிவாலும், சமயோசித புத்தியாலும் பூலோகத்தில் இருந்த பல பண்டிதர்களையும், வித்துவான்களையும் தோற்கடித்து பந்தள நாட்டின் புகழை நிலை நாட்டினான். மணிகண்டன் திறமைகளைக் கண்டு  பொறாமையும், வெறுப்பும் கொண்ட மந்திரியார்; மணிகண்டன்  யார் என்பதை உணராது;  அவர் இராஜாவானால் தனக்குள்ள எல்லாச் செல்வாக்கும், வசதிகளும் பறிபோய்விடும் என எண்ணி மணிகண்டனை கொன்றுவிட தீர்மானித்து  பலவழிகளாலும் முயற்சிகள் செய்தான். உணவில் நஞ்சூட்டச் செய்தும், நஞ்சு பூசப்பெற்ற அம்புகளை ஏவச்செய்தும், பலரை ஏவிவிட்டு தாக்கியும் அவரைக் கொல்ல எடுத்த எல்லா முயற்ச்சிகளும் அவரின் தெய்வ சக்தியாலும், இறைவனின் அருளிளாலும் தோர்வியில் முடிந்தது.

 இதற்கிடையில் மணிகண்டன் பந்தள தேசத்தில் கொள்ளையிட துர்க்கிஸ்தானிலிருந்து படை வீரர்களோடு வந்த கடற் கொள்ளைக்காரனான பாபர் என்ற  கொள்ளைக்காரனை தனது அன்பு வார்த்தைகளினால் அடிபணியச் செய்து அவனைத் தனது நண்பனாக்கினார்.  அதன் பின்னர் பந்தள நாட்டை ஆக்கிரமிக்க வந்த உதயனையும் அவனது தம்பிமாரான உக்கிர சேனன், பத்திர சேனன் ஆகியோரையும், படைகளையும் பாபரின் உதவியுடன் அழித்து. பந்தள நாட்டை பேராபத்தில் இருந்து காப்பாற்றினார்.

 மணிகண்ட குமாரனின் வரவால் நாட்டில் எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகர மன்னன், மணிகண்ட குமாரனுக்கு “பட்டாபிஷேகம்”  செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தார். இதனால் வேதனை அடைந்த மந்திரி அரசனிடம் சென்று அதனைத் தடுப்பதற்காக பல காரணங்களை முன்வைத்து பட்டாபிஷேகத்தை நிறுத்த முயற்ச்சித்தான். மந்திரியாரின் சூழ்ச்சி அரசனிடம் பலிக்காததினால், பட்டாபிஷேகம் நடைபெற்வதற்கு முன்  மணிகண்டனை  கொன்று விடபல சூழ்ச்சிகள் செய்தான்.

 மந்திரியார்  மகாராணியாரை அணுகி; இந்த நாட்டை அரசாளும் உரிமை அரசபரம்பரையில் வந்த ராசராசனுக்கே உண்டு என்றும், காட்டில் கண்டெடுத்த மணிகண்டன் முடிசூடினால் மகாராணியாரின் சொந்த மகனான ராஜராஜனுக்கு அரசாளும் வாய்ப்பு கிடையாமலேயே போகும் என்றும் ராஜ பரம்பரையில் வந்த ராஜ ராஜனை யுவராஜன் ஆக்குவதே ராஜ நீதி என்றும் பல துர்ப்போதனை செய்து  கோபெருந்தேவியின் மனத்தை மாற்ற முயற்ச்சித்தான். அவை ஒன்றும் பலனளிக்கவில்லை.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சபரிமலை யாத்திரை பாகம் –12 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

விநாயகரின் 51 வடிவங்களும் பலன்களும்

$
0
0

அந்த வடிவங்களை வணங்குவதால் நாம் அடையும் பலன்களும்
1. ஏகாக்ஷர கணபதி: பரிபூரணசித்தி.
2. மகா.கணபதி:  கணபதி அருள்கிடைக்கும்
3. த்ரைலோக்ய. மோஹன கரகணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.
4. லக்ஷ்மி கணபதி: தனஅபிவிருத்தி
5. ருணஹரள கணபதி: கடன்நிவர்த்தி.
6. மகா வித்யா கணபதி: தேவஅனுக்ரகம்.
7. ஹரித்ரா கணபதி: உலக வசியம்.
8. வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்டலாபம்.
9. நிதி கணபதி: நிதி ப்ராப்தி.
10. புஷ்ப கணபதி: தானிய விருத்தி.
11. பால கணபதி: மகிழ்ச்சி, மனநிறைவு.
12. சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.
13. சர்வ சக்தி கணபதி: சர்வரக்ஷாப்ரதம்.
14. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரிதபலன்.
15. குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.
16. ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி:மக்கட்செல்வம்.
17. ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ணபிராப்தி.
18. ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.
19. விஜய கணபதி: வெற்றி.
20. அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.
21. ச்லேதார்க்க கணபதி: மாலாமந்திரம்.
22. உச்சிஷ்ட கணபதி: திரிகாலதரிசனம்.
23. போக கணபதி: சகலலோகப்ராப்தி.
24. விரிவிரி கணபதி: விசால புத்தி.
25. வீரகணபதி- தைரியம்
26. சங்கடஹர கணபதி: சங்கடநிவர்த்தி.
27. கணேசாங்க நிவாரணி: லட்சுமிமந்திர சித்தி.
28. விக்னராஜ கணபதி:ராஜயோகம்.
29. குமார கணபதி: மாலா மந்திரம்.
30. ராஜ கணபதி: மாலா மந்திரம்.
31. ப்ரயோக கணபதி: மாலாமந்திரம்.
32. தருண கணபதி: தியானயோகப்ராப்தி.
33. துர்கா கணபதி: துக்கநிவாரணம்.
34. யோக கணபதி: தியானம்.
35. நிருத்த கணபதி: கலாபிவிருத்தி.
36. ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள்நீங்குதல்.
37. புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.
38. நவநீத கணபதி: மனோவசியம்.
39. மோதக கணபதி: சம்பூர்ணபலன்.
40. மேதா கணபதி: மேதா பிவிருத்தி.
41. மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.
42. குரு கணபதி: குருவருள்.
43. வாமன கணபதி: விஷ்ணு பக்தி.
44. சிவாவதார கணபதி: சிவபக்தி.
45. துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.
46. ரக்த கணபதி: வசிய விருத்தி.
47. அபிஷ்டவாத கணபதி:நினைத்ததை அடைதல்.
48. ப்ரம்மண கணபதி: ப்ரம்மஞானம்.
50. மகா கணபதி: ப்ரணவமூலம்.
51. வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post விநாயகரின் 51 வடிவங்களும் பலன்களும் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

தாயாக வந்து பிரசவம் பார்த்த களக்காடு ஸ்ரீகற்பகவல்லி அம்பாள்

$
0
0

 திருநெல்வேலி மாவட்டம் மேற்க்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள களக்காடு என்ற இடத்தில் வீர மார்த்தாண்ட மகாராஜா கட்டிய அம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்பாள் கற்பகவல்லி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார், இந்த அம்பாளை திருமணமாகி பலஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்கள் அம்பாளுக்கு 54 வகையான மூலிகைகளை கொண்டு ஹோமங்கள் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இங்கு வரும் தம்பதிகளின் தீராதநம்பிக்கை.

 பிராத்தனைகள் நிறைவேறியதும் கணவனும் மனைவியும் புதுவஸ்திரம் அணிந்து கொண்டு அம்பாளை வணங்கி பிராத்தனையை நிறைவேற்றுகின்றனர்.

 ஒருமுறை, கர்ப்பிணி ஒருத்தி இந்தக் கோயிலில் நடைபெறும் வைகாசி தேரோட்ட வைபவத்தைக் காண வந்தாள். வழியில், வயல்வெளியில் வலியால் துடித்து அழுதாள். உடனே ஸ்ரீகற்பகவல்லி அம்பாள், அந்தப் பெண்ணின் தாயாரின் உருவில் அங்கு வந்து, அந்தப் பெண்ணுக்கு அங்கேயே பிரசவம் பார்த்தாள். பின்னர், வந்தவள் அம்பாளே என்று தெரிந்ததும், திகைத்துப் போனார்கள் ஊர்மக்கள். அதையடுத்து, அம்பாளின் திருவிக்கிரகத்தை எடுத்து, ஊருக்கு வடக்கில் எல்லைக் காளியாக வைத்து வணங்கத் துவங்கினார்கள்.

 அம்பாளும் அன்று முதல் இன்றளவும் ஊரின் எல்லையில் இருந்தபடி, உலக மக்களைக் காத்தருள்கிறாள். திருமணமாகிப் பல வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லையே எனக் கலங்கி அழுபவர்களின் கண்ணீரைப் போக்கும் ஆலயம் இது. இங்கு வரும் தம்பதிகளை சந்நிதிக்கு முன்னே அமர வைத்து, மகா அனுக்ஞை பூஜை, சங்கல்பம், அஷ்டோத்திரம் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டு, வலம்புரிக்காய், இடம்புரிக்காய், ஜாதிக்காய், கடுக்காய் என 54 வகை மூலிகைகளைக் கொண்டு ஹோமங்கள் செய்யப்படுகின்றன. பிறகு, கணவனும் மனைவியும் புது வஸ்திரம் அணிந்துகொண்டு, அம்பாளுக்கும் கோயிலில் உள்ள ஸ்ரீநாகராஜா மற்றும் நாகராணி சிலைகளுக்கும் 21 வகை அபிஷேகங்கள் செய்து, மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால், அடுத்த வருடமே வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் எனப் பெருமிதத்துடனும் பூரிப்புடனும் சொல்கின்றனர் பக்தர்கள்.

 பொதுவாக, அம்பாளுக்கு உகந்த செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளைவிட, இங்கு ஞாயிற்றுக்கிழமைதான் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆயில்ய நட்சத்திர நாளில், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. சுகப்பிரவசம் நிச்சயம்! கர்ப்பிணிகள் ஒருமுறையேனும் இங்கு வந்து ஸ்ரீகற்பகவல்லி அம்பாளை வணங்கிச் சென்றால், அவர்களுக்கு சுகப்பிரசவம் நிகழும் என்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள். அதனால்தான், குழந்தை வரம் பெற்றவர்களும், சுகப்பிரசவம் கண்டவர்களும் பெரும்பாலும் தங்கள் குழந்தைக்குக் கற்பகம், கற்பகவல்லி என்று பெயர் சூட்டி மகிழ்கின்றனர்.

அமைவிடம் :

  திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து களக்காட்டிற்கு செல்ல பஸ் வசதி உள்ளது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post தாயாக வந்து பிரசவம் பார்த்த களக்காடு ஸ்ரீகற்பகவல்லி அம்பாள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சபரிமலை யாத்திரை பாகம் –13

$
0
0

மணிகண்டன் அவதாரம்:  தொடர்ச்சி

 இதற்கிடையில்; இறை அருளால் மஹிஷிக்கு தேவலோக வாழ்க்கையில் வெறுப்பேற்பட்டதனால், லௌகீக வாழ்கையில் நாட்டம் ஏற்பட்டு; முற்பிறப்பில் தனது கணவனாக இருந்த ததாத்திரேயன்  தனது சாபத்தினால் அசுர குலத்தில் பிறந்து சுந்தரமஹிஷி என்ற பெயருடன் பூலோகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதை அறிந்து; பூலோகத்திற்கு வந்து சுந்தரமஹிஷியை விவாகம் செய்து லௌகீக வாழ்க்கை நடாத்திக் கொண்டிருந்தாள்.(தேவலோகத்தில் மகிஹி சம்காரம் நடைபெற்றால் தேவலோகம் அசுரரின் இரத்தக் கறை பட்டு கழங்கம் ஏற்பட்டு விடும் என்பதனால் மஹிஷி சம்காரம் பூலோகத்தில் நடைபெற்றதாக ஐதீகம்)

 மஹிஷியின் சம்கார காலம் நெருங்கி வரவே மணிகண்டனை மஹிஷி இருக்கும் வனத்திற்கு அனுப்பி வைப்பதற்கு ஒரு சாதகமான சந்தற்பத்தை ஏற்படுத்துவதற்காக பரமசிவனே மகாராணிக்கு தலைவலியை வரச்செய்தார். அந்த தலைவலியையை சாதாரண மருந்துகளால் மாற்ற முடியாது போகவே, மருந்தாக புலிப்பால் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லுமாறு மந்திரியார் அரண்மனை வைத்தியரை கூறவைத்து, தந்திரமாக மணிகண்டனை புலிகள் நிறைந்த காட்டிற்கு அனுப்பி கொல்ல நினைத்தான்.

 (மகாராணி கோப்பெருந்தேவி மந்திரியாரின் துர்ப்போதனையால் மனம் மாறி தாங்க முடியாத தலைவலி உள்ளது போல் நடித்ததாகவும் கூறுவாருமுளர்.)  மணிகண்டனும் தனது அவதார நோக்கத்தினை உணர்ந்து அவை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டதால்; புலிப்பால் கொண்டுவர சம்மதித்து காட்டிற்கு செல்ல ஆயத்தமானார். மன்னன் மனம் கலங்கியது. இதில் ஏதோ சூட்ச்சி இருப்பதாய் உள்மனம் கூறுகிறது. ஆனால் ராணியோ தலைவலியில் துடிக்கிறாள். ஆகவே மன்னன் இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவிக்கின்றான். மனம் கலங்கிய மன்னனையும் மணிகண்டன் ஒத்துக் கொள்ள வைக்கிறான்.

 அரை மனதாய்ச் சம்மதித்த மன்னன், மனம் கேளாமல் காட்டில் உணவு கிடைக்காமல் தன் அருமைக் குமாரன் தவிப்பானே என எண்ணி; மணிகண்டன் தனது குலதெய்வமான சிவனைப் பூஜை செய்வதற்காக; ஒரு துணியின் ஒரு பக்கத்தில் மூன்று கண்ணுள்ள தேங்காயும், பூசைக்குரிய பொருட்களும்; மற்றைய பக்கத்தில்; மணிகண்டன் பாதையில் உண்பதற்கான ஆகாரப் பொருட்களும்  வைத்து இரண்டு முடிச்சுகளும் தலையில் இருக்கக் கூடியதாக ஒன்றாக இணைத்து; பூஜைப் பொருட்கள் உள்ள முடிச்சு முன்பக்கம் இருக்கக் கூடியாக, “இருமுடிபோல்”  ஐயப்பரின் தலைமீது வைத்து வழியனுப்பி வைத்தான்.

 அரண்மனையை விட்டுக் கிளம்பிய மணிகண்டன் காட்டை வந்தடைகிறான். அங்கே ஏற்கெனவே மும்மூர்த்திகள் கட்டளைப்படி வந்து கூடிய தேவர்கள், முனிவர்கள் அனைவரும் மணிகண்டனைப் போற்றித் துதித்து உயர்ந்த சிம்மாசனத்தில் அமர வைக்கின்றார்கள். (தேவர்கள் மணிகண்டனை அவ்வாறு அமர வைத்த இடம் தான் “பொன்னம்பலமேடு” எனவும், அந்தமலை “காந்தமலை” எனவும் அழைக்கப் படுவதாய்ச் சொல்லப் படுகிறது. இதை தக்ஷிண கைலாயம் எனவும், இங்கிருந்து உற்பத்தி ஆகும் “பம்பா” நதியை தக்ஷிண கங்கை எனவும் அழைக்கப் படுவதுண்டு.) பின்னர் மணிகண்டனிடம் மஹிஷியினால் ஏற்பட்ட துயரங்களை எல்லாம் எடுத்து உரைக்கின்றார்கள்.

 மஹிஷியின் வரலாறும் தற்சமயம் மனிதனாய் வந்த மணிகண்டனுக்குச் சொல்லப்படுகின்றது. தன்னுடைய அவதார நோக்கம் புரிந்து கொண்ட ஐயன், மஹிஷியோடு போர் புரியச் செல்கின்றார். மஹிஷியோடு போர் புரிந்த ஐயன், அவளை அப்படியே தூக்கி எறிகிறார். அவர் எறிந்த வேகத்தில், மஹிஷி பந்தள நாட்டுக் காட்டில் அலசா நதியில் (தற்சமயம் அழுதா நதி எனச் சொல்லப் படுகிறது) வந்து விழுந்தாள். அவள் எழுந்தால் ஆபத்து என அவள் எழுவதற்குள் மணிகண்டன் அவள் உடலில் ஏறி நின்று நர்த்தனம் ஆடுகின்றார். அவளுடைய பலமும், அகங்காரமும் போய், அவளின் உயிரானது உள்ளும், புறமுமாகப் போய்ப் போய் வருகின்றது.

 மகேசன் புத்திரனின் திருவடி பட்டதுமே அவளுக்கு மெய்ஞ்ஞானமும் உதிக்கின்றது. தன்னுடைய முற்பிறவி, தான் செய்த தவறுகள், எல்லாம் நினைவுக்கு வருகின்றது. அவளின் உடலில் இருந்து உயிரானது ஒளிமயமான பெண் வடிவெடுத்து – மஞ்சள் மாதாவாக ஐயன் திருப்பாதங்களில் வீழ்ந்து தன்னை ஏற்று ரட்சிக்குமாறு வேண்டிக் கொள்கின்றது.

 அப்போது ஐயன்;  என்னுடைய அவதார நோக்கமே மகிஷி சம்ஹாரம் தான். இந்தப் பிறவியில் என்னுடைய தலையாய கடமை இன்னொன்று இருக்கிறது. என் தாய்க்கு நான் கொடுத்த வாக்குறுதி, புலிப்பால் கொண்டு வருகிறேன் என. அதை நிறைவேற்ற வேண்டும், தவிர, இப்பிறவியில் எனக்குத் திருமணமும் இல்லை, என்னால் உயிர் பெற்ற நீ எனக்குச் சகோதரி முறையாவாய், நீ எப்போதும் மாளிகைபுறத்தம்மன் (மஞ்சள் மாதா) என்ற பெயருடன் என் பக்தர்களுக்கு அருள்புரிவாயாக”என்று கூறினார் . எந்த வருஷம் என்னைக் காண வரும் பக்தர்களில், (புதியதாய்) கன்னியாக வரும் பக்தர் இல்லையோ அப்போது நான் உன்னை மணந்து கொள்ளுவேன்!” என்று சொல்ன்னார்.

 மகிஷியின் கொடுமைகள் நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலிகளாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் செல்ல ஆயத்தமாகினர்.

                                                                                                                                                                                                                                                                                      –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சபரிமலை யாத்திரை பாகம் –13 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

பசித்த பக்தனுக்கு உணவு கொடுத்த விருந்தீஸ்வரர்

$
0
0

 கோயம்பத்தூர் மாவட்டத்தில்  உள்ள வடமதுரையில் 1500 ஆண்டுகள் குலோத்தங்க சோழனால் பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு அம்பாள் விசுவநாயகியுடன் விருந்தீஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். இவரை திருமணமாகி பிரிந்த தம்பதிகள் வந்து அபிஷேகம் செய்து வந்தால் ஒன்றுசோர்வர்கள் என்பது இத்தலத்தின் ஐதீகம்.

 பிராத்தனைகள் நிறைவேறியதும். தம்பதியர் ஒன்று சோர்ந்த பின் இங்குள்ள லட்சுமி நாரயணனுக்கு துளசியால் அர்ச்சனை செய்து பக்தர்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றுகின்றனர்.

 பசியால் வந்த சுந்தரருக்கு அம்பாளும் சிவபெருமானும் அவருக்கு விசிறிவிட்டு உணவு உபசரித்தனர். மேலும் ஆண்டுதோறும் பங்குனிமாதம் 17ம் தேதி காலை 6.30 மணி முதல் 6.48 மணி வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் இறைவனது திருமேனியில் நேரடியாக விழுகிறது.

 கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது. கோயிலின் கருவறை மண்டபம், மகா மண்டபம், திராவிடக் கட்டிடக் கலைப் பாணியில் விமானம் உள்ளது. கோயிலில் மூலவர் விருந்தீசுவரர், அம்பிகை விசுவநாயகி அம்மன், மூர்த்தி சுயம்பு. ஒரு காலத்தில் கொங்குநாடு 24 நாடுகளை உள்ளடக்கியதாக இருந்ததாம். இதில் வடபரிசார நாட்டில் உள்ள சிற்றூர்களில் வடமதுரையும் ஒன்று. இத்தலத்திலிருந்து மேற்குத்திசையில் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. அம்மலையின் ஒரு பகுதியில் குருரிஷி என்ற முனிவர் வாழ்ந்தமையால் அப்பகுதி குருரிஷி மலை என பெயர் பெற்றது. பின்னர் நாளடைவில் அப்பெயர் மருவி குருடிமலையென பெயர்பெற்றது.

 முனிவர் இறைவன் மற்றும் இறைவியை தரிசிக்க வரும்போது ‘துடிசை’ என்னும் முரசு வாத்தியத்தை இசைத்த பின்னர் தரிசனம் மேற்கொண்டதால் இவ்வூருக்கு ‘திருத்துடிசையம்பதி’ எனப் பெயர் வழங்கப்பெற்றது. இக்கோயிலுக்கு வடக்கு திசையில் ‘மதுரநதி’ அமைந்த காரணத்தால் வடமதுரையெனவும், வடமன் என்பவரது ஆட்சி அதிகார எல்லையில் அமைந்ததால் வடமன்ஊர் என்று பெயர் பெற்று நாளடைவில் வடமதுரை எனப்பெயர் பெற்றது என்றும் கூறுகின்றனர். இத்தலத்தின் தென்திசையில் பூஜைக்காக நந்தவனம் ஒன்று சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

 இக்கோயிலில் அமர்ந்து அடியார்களுக்கு அருள் பாவித்து வரும் இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். ஒரு முறை சமயக் குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவிநாசி பகுதியில் உள்ள கருணாம்பிகை அவிநாசியப்பரை தரிசனம் செய்துவிட்டு, மலைநாட்டு தலம் செல்லும் வழியில் விருந்தீசுவரரை தொழ எண்ணி பயணித்தார். இவர் கோயில் அடையும் முன்பே பசியால் வாட்டமுற்று சோர்வுற்று தள்ளாடும் நிலைக்கு ஆளானார். இருப்பினும், கோயிலை அடைந்தார். சுந்தரர் வருவதை முன்கூட்டியே உணர்ந்த இறைவனும் இறைவியும் வேடுவர்குல மரபுப்படி ஆடை அணிந்து சுந்தரரை இன்முகத்துடன் வரவேற்றனர். பயணக்களைப்பு, பசிமயக்கம் ஆகியவற்றால் துவண்ட சுந்தரரை அமரச்செய்து தல விருட்சமான முருங்கை கீரை, பூ மற்றும் காய்களை கொண்டு உணவு வழங்கினர்.

 பசியுடன் வந்த சுந்தரமுர்த்தி சுவாமிக்கு அவரின் பசியை போக்கி விருந்தளித்த காரணத்தால் இறைவருக்கு விருந்தீசுவரர் எனப் பெயர் வழங்கப்பட்டது. இறைவி விசுவ ரூபம் கொண்டு காட்சியளித்ததால் விசுவநாயகி அம்மன் எனப் பெயர் வழங்கப்பட்டது. இத்தலத்தை அகத்தியர் வழிபட்டுள்ளார்.

 சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு குரு பூஜை விழா நடக்கிறது. இக்கோயில் வளாகத்தில் அரச மரத்து விநாயகர், பலிபீடம், நந்தியம் பெருமாள், விநாயகர், சமயக்குரவர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், லட்சுமி நாராயணப் பெருமாள் உள்ளன.

தொடர்புக்கு:   9442844884.

அமைவிடம்:

      கோவையில் இருந்து வடமதுரைக்கு பஸ் வசதியுள்ளது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post பசித்த பக்தனுக்கு உணவு கொடுத்த விருந்தீஸ்வரர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சுயம்பு மூர்த்தியாக காட்சி தரும் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர்

$
0
0

 97_bigகடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்துள்ள மணவாளநல்லூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. இங்கு சுயம்பு மூர்த்தியாக முருகன் கொளஞ்சியப்பர் என்ற பெயரில் முருகன் அருள்பாலிக்கிறார், இவரிடம் பிராது கட்டுதல் நேர்த்திகடனாக இங்கே புதுமையாக உள்ளது. பெருட்கள் திருடுபோய்விட்டாலே, நோய்களால் அவதிப்பட்டாலே, இவரை வணங்கி பிராது கட்டி விண்ணப்பித்து கொண்டால் நிறைவேறும் என்பது பக்தர்களின் தீராதநம்பிக்கை, பிராத்தனைகள் நிறைவேறியதும் உயிர் உள்ள ஜீவராசிகலையும், உயிர் அற்ற பெருட்களைபக்தர்கள் காணிக்கையாக நேர்த்திகடான செலுத்துகின்றனர், வேடனாய் வடிவெடுத்த வேலவன் சுந்தரர் கூட்டத்தை சுற்றி வளைத்தார். நாணேற்றி அம்பின் முனையில் நிறுத்தினார். அஞ்சி நின்ற சுந்தரர் வசமிருந்த பொன்னையும் பொருளையும் பறித்துக்கொண்டார் முருகன். அவற்றைத் திரும்பத் தரும்படி கெஞ்சினார் சுந்தரர்.

வேலவன் பழமலை:

 t_500_439வேலவன் பழமலை வந்து பெற்றுக்கொள் என்று கம்பீரமாய் கட்டளை இட்ட போதுதான், தான் ஈசனை மதிக்காமல் வந்தது தவறு என்பது பிடிபட்டது சுந்தரருக்கு.  உடனே பழமலை வந்து ஈசனைப் பாடி துதித்தார். உடனே இறையருள் கிட்டியது அவருக்கு. அரனின் ஆணைப்படி பழமலை பதியின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வமாய் அமர்ந்தார் வேலவன். அதிலொருவர்தான் மணவாளநல்லூரில் கோயில் கொண்டுள்ள கொளஞ்சியப்பர். இவர் இங்கு கோயில் கொண்ட கதையும் சுவையானது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு இன்று கொளஞ்சியப்பர் கோயில் கொண்டுள்ள மணவாளநல்லூர் அடர்ந்த காடாக இருந்தது. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் நான்கைந்து பேர்கள் சேர்ந்து கொண்டு, மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டியபடி அந்தப் பக்கம் செல்வார்கள். காலை செல்லும் அவர்கள் அந்தி சாய்வதற்குள் வீடு திரும்பி விடுவார்கள். அந்த அளவுக்கு மனித நடமாட்டம் மிகவும் குறைந்த பயமுறுத்தும் காட்டுப் பகுதி அது.

 அப்பகுதி மக்களின் அச்சம் தீர்க்கவும் குறைகளை போக்கவும் திருவுளம் கொண்டான் குமரன். எல்லா மாடுகளும் படிப் படியா பால் தருது.  ஒரு வெள்ள பசு மட்டும் நாலஞ்சி நாளாய் பொட்டு பால் கூட தர மாட்டேங்குதே. மடியில கைய வெச்சாலே எட்டி ஒதைக்குது  என்று மாடு மேய்ப்பவர்களில் ஒருவன் பேசிக் கொண்டிருந்த போதே, அதோ போவுதே அந்த மாடா? என்று கேட்டான் கூட இருந்தவன். ஆமாம்பா. இவ்ளோ வேகமா எங்க ஓடுது? என்று கேட்டபடி கூட்டமாய் பின் தொடர்ந்தார்கள். ஓரிடத்தில் நின்ற பசு, தலையைத் திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தது. யாருமில்லை என்று உறுதி செய்து கொண்டு கண்மூடி நின்றது. அதன் காம்பிலிருந்து பால் தானாய் பொழிந்தது. இதை மறைந்து நின்று பார்த்த மாடு மேய்ப்பவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றார்கள். பசுவின் அருகில் சென்று ஆதூரமாய் அதைத் தொட்டார்கள். கண் திறந்து பார்த்த பசு தன் பணி முடிந்த நிறைவில் மெல்ல நகர்ந்தது.

 பால் பொழிந்த இடம் ஒரு கல் பீடமாக இருக்கக் கண்டார்கள். ஊராரிடம் நடந்ததைச் சொல்லி கூட்டி வந்து காட்டினார்கள். இவர் குமரக்கடவுள் என உணர்ந்த பெரியவர்கள், கொளஞ்சி மரங்கள் சூழ்ந்த காட்டின் நடுவே தோன்றியதால் இவரை கொளஞ்சியப்பர் என வாய் நிறையப் போற்றி மகிழ்ந்தார்கள். ஒரு கீற்றுக் கொட்டகை அமைத்து வழிபடத் தொடங்கினார்கள்.

 கொளஞ்சியப்பர் கோயில். சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் இக்கோயிலின் அழகிய ராஜகோபுரம் காண்பவர் கண்களுக்கு விருந்தாகிறது. பலிபீடம், கொடிமரம், மயில் ஆகியவற்றைக் கடந்து, சித்தி விநாயகர். அருகே அருவமாய் சுயம்புவாய் தோன்றிய கொளஞ்சியப்பர் வீற்றிருக்கிறார்.

 விநாயகருக்கும் கொளஞ்சியப்பருக்கும் தனித்தனி விமானங்கள் உள்ளன. சுமார் மூன்றடி உயரம் கொண்ட பலி பீட வடிவம் கொண்ட கொளஞ்சியப்பரின் பீடத்தில் ஷடாட்சரம் பொறிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த கொளஞ்சியப்பர் இப்பகுதி மக்கள் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் வாழும் பக்தர்களுக்கெல்லாம் மகா நீதிபதியாய் இருந்து நல்ல தீர்ப்பும் நல்வாழ்வும் வழங்கி அருள்கிறார். இத்தல நாதன் முருகன் ஒரு மகா நீதிபதிதான். இத்தலத்தில் பிராது கட்டுதல் என்று ஒரு வழிபாடு இருக்கிறது. கோயிலின் பிராகாரத்தில் அதற்காக முனீஸ்வரன் சந்நதி அருகே ஒரு இடமும் இருக்கிறது. பிராது கட்டுவது என்றால் என்ன? கோயில் அலுவலகத்தில் மனு எழுதிட தாள் கிடைக்கிறது. அதில், ‘மணவாளநல்லூர் அருள்மிகு கொளஞ்சியப்பர்  அவர்களுக்கு…. என ஆரம்பித்து, நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன்.

கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து

 இன்னாருடைய மகன். என் பெயர் இது. என்பன போன்ற விவரங்களை எழுதி தனது குறை, கோரிக்கை என்ன என்பதையும் குறிப்பிட்டு, கொளஞ்சியப்பர் சந்நதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் தர வேண்டும். அதை, அவர் கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, மனுவை விபூதி சேர்த்து பொட்டலமாக்கி ஒரு நூலால் கட்டித் தருவார். அதை முனியப்பர் சந்நதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலில் கட்ட வேண்டும். பிராது கட்டியவர்களின் கோரிக்கை பிராது கொடுத்த 90 நாட்களுக்குள் ஈடேறும் என்பது பக்தர்களின் அனுபவம். குழந்தைப் பேறு, கடன் தொல்லை தீர, திருடு போன பொருள் கிடைக்க, ஏமாற்றப்பட்ட பணம் திரும்ப கிடைக்க, பிரிந்து இருக்கும் கணவன், மனைவி ஒன்று சேர, தீராத நோய் தீர, தொலைந்த கால்நடைகள் திரும்ப கிடைக்க, பங்காளி சண்டை, துரோகம் தொலைய, வேலை வேண்டி, வேலை மாற்றம் என பல கோரிக்கைகளை பிராது சீட்டில் எழுதி, குமரன் குறைகளைத் தீர்த்தருள்வான் என்ற நம்பிக்கையோடு கட்டுகிறார்கள்.

 இவ்வாறு பிராது கட்டுவதற்குக் கட்டணம் உண்டு. பிராது கட்டணம் 4 ரூபாய். சம்மன் கட்டணம் 4 ரூபாய். தமுக்கு கட்டணம் 4 ரூபாய். இதர கட்டணம் 8 ரூபாய். இது தவிர படிப் பணமாக வழக்கு கொடுத்தவர் ஊரிலிருந்து மணவாளநல்லூர் கோயில் வரையான தூரத்திற்கு கிலோ மீட்டருக்கு 25 பைசா வீதம் தொகை செலுத்த வேண்டும். இது முதல் மாத கட்டணம். சில வழக்குகள் 90 நாள் வரை நடக்கக் கூடும். அந்த வழக்குகளுக்கு மீதி 2 மாதங்களுக்கு படி கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். வழக்கை வாபஸ் பெற விரும்பினால் 50 ரூபாய் செலுத்தி கொளஞ்சியப்பரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்! தமிழகம், இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, லண்டன், மலேசியா, போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் பக்தர்கள் வந்து இந்த மகா நீதிபதியிடம் நீதி கேட்டு மனு கொடுக்கிறார்கள்.

வேப்பெண்ணெய் மருந்து:

 இக்கோயிலில் வேப்பெண்ணெய் மருந்து தரும் வழக்கமும் இருக்கிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுத்தமான வேப்பெண்ணெய் வாங்கி வந்து இத்தல அர்ச்சகரிடம் கொடுத்தால் அதை கொளஞ்சி நாதனின் திருவடியில் வைத்து அவனது அருள் பிரசாதமான விபூதியை  சேர்த்து தெய்வீக மருந்தாக்கி தருவார். அதை பய பக்தியோடு பயன்படுத்தினால் தீராத சரும நோய்கள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை. இப்பகுதி விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கும் இந்த அருள் மருந்தை வாங்கி பூசி அவற்றின் நோய்களை தீர்ப்பார்கள். பல மாநிலங்களில் இருந்தும் இந்த மருந்தை பக்தர்கள்  பெற்றுச் செல்வதை இன்றும் காணமுடிகிறது. இந்தக் கோயிலுக்கு சேவல், ஆடு, மாடுகள் போன்றவற்றை நேர்ந்து விடுவதும் வழக்கமாயிருக்கிறது.

தொடர்புக்கு:  91-4143-230232 – 9362151949

அமைவிடம்:

  கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

The post சுயம்பு மூர்த்தியாக காட்சி தரும் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சபரிமலை யாத்திரை பாகம் –14

$
0
0

மணிகண்டன் அவதாரம்:  தொடர்ச்சி

 புலியாக மாறிய இந்திரன் மீது மணிகண்டன் அமர்ந்து பந்தளம் நோக்கிச் செல்லும் போது வழியில் உள்ள ஒரு மலையில்; சாபத்தால் கிழரூபம் அடைந்த “சபரி” என்ற பித்யாதர ஸ்திரீ தவம் செய்து கொண்டிருந்தாள்,கடும்புலியின் சிம்மத்தின்மீது வருகின்ற மணிகண்டனை அவள் உபசரிக்கவே அவளையும், அவள் சாபத்தையும் அறிந்த ஐயனும் அவளுடைய சாபத்தை நீக்கி தேவலோகம் செல்லும்படி அருளினார்,  தன் சாபம் எந்த மலையில் நிவர்த்தியாயிற்றோ அந்த மலை (சபரி) தன் பெயரால் வழங்க வேண்டும் என்றும் அம்மலையை அடையும் மானிடர்கள் பிறவி என்னும் சாபத்திலிருந்து நீங்க வேண்டும் என்று பிரார்த்தித்து, பதினெட்டு பிரதட்ஷனை நமஸ்காரங்கள் செய்தாள்.

 மணிகண்டனும் வித்யாதர மங்கை தன்னைப் பதினெட்டு சித்திகளையும் பதினெட்டு படிகளாக அமைத்து கோயில் கொள்ளுவதாகவும், ஒவ்வொரு வருஷமும்; தன்னைத் தரிசிக்க வருபவர்கள் ஒவ்வொரு சித்தியையும் அடைந்து பதினெட்டு வருஷங்கள் தரிசித்தவர் சித்த புருஷர்களான முமூச்சுகளாவார்கள் என்றும் அதற்காகச் செய்ய வேண்டிய தவத்தை தானே அங்கு செய்வதாயும் வாக்களித்து பந்தள தேசத்திற்குப் புலிக்கூட்டத்துடன் வந்து சேர்ந்தார்.

 புலிக்கூட்டம் ஒன்று பந்தள அரண்மை நோக்கி வருவதையும் பெரிய புலி ஒன்றின் சிம்மத்தின் மீது மணிகண்டன் அமர்ந்திருப்பதையும் கண்டு மக்கள் அதிசயமும், பீதியும் அடைந்தனர், மணிகண்டனை யாரென்று அறிந்த பந்தள தேசத்து மந்திரியார் தன்னுடைய குற்றங்களை மன்னிக்கும்படி வேண்டினான்.

 மணிகண்டனும், நீங்கள் எவரும் ஒரு குற்றமும் செய்யவில்லை என்றும்; எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில எதற்காக அவதரித்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. கலியுகத்தில் அதர்மம் தலை தூக்கியுள்ள இந்த வேளையில் இறைவனின் ஆணைப்படி தர்மத்தை நிலைநாட்ட தர்மதாஸ்தாவாக தவம் செய்யப் புறப்படும் காலம் நெருங்கி விட்டது எனக் கூறினார்.

 இதைக்கேட்டு மனமுடைந்த மன்னனும், மகாராணியாரும் தங்கள் பட்டாபிஷேகம் நடைபெறும்போது அணிவதற்காக பலநாட்களாக தேடி வைத்துள்ள ஆபரணங்களை அணிந்து ஒருநாளாவது சிம்மாசனத்தில் அமர்ந்து எங்களுக்கு காட்சி தந்தருள வேண்டும் என பிடிவாதமாக கேட்டனர்.

 ஐயப்பரும் பந்தள சிம்மாசனத்தை விட மேன்மையான சிம்மாசனம் எனக்காக காத்திருக்கின்றது. அது இறைவனின் நியதி. அதனை விலக்கவோ தடுக்கவோ இயலாதகாரியம் என்று கூறி; தாங்கள் எனக்காக அன்போடு வைத்திருக்கும் அந்த ஆபரணங்களை மகர ஜோதி தினத்தன்று அணிந்து தங்களுக்கு காட்சி தருவேன் என்று உறுதியளித்தார். அத்துடன் அவ் திருவாபரணப் பெட்டி எவ்வாறு யாரால் சபரி மலைக்கு எடுத்து வரப்பட வேண்டும், எந்த ஆலயங்களில் இறக்கப் பெற்று ஆசீர்வாதம் பெற வேண்டும் என்பதனையும் மன்னனுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.

 மன்னன் “பகவானே ” தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்தி, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு ஓர் கோயில் எழுப்புங்கள் என்றான்.  அந்த அம்பு சபரிமலையில் வீழ்ந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும், இடப்பாகத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறி; தான் இனி அரச மாளிகையில் தங்க முடியாது என்றும், சபரிமலைக்குத் தவம் செய்யப் போவதாயும் கூறி மறைந்தார்.மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார்.

 புத்திர சோகத்தினால் வருந்திய அரசன் அகஸ்திய முனிவரால் ஹரிஹரப் புத்திரரின் தத்துவங்கள் உபதேசிக்கப்பெற்று ஐயனின் உத்தரவுப்படி கோவில் அமைத்து மானிடப் பிறவியின் நற்கதி பெற அருள் புரிந்தார்.

 ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 41 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு “ஜோதி” வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.

 மணிகண்டன் தனது குருவுக்கு குரு தட்சணையாக ஆண்டு தோறும் “மகர ஜோதியாக” காட்சிஅளிக்கிறார்.

                                                                                                                                                                                                                                                                                      –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

The post சபரிமலை யாத்திரை பாகம் –14 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


தவமிருந்த பிருங்கி முனிவருக்கு காட்சி தந்த நந்தீஸ்வரர்

$
0
0

 சென்னை பரங்கிமலை ரெயில் நிலையம் அருகில் ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் சிவபெருமானே நந்தீஸ்வரராக அருள்பாலிக்கிறார், திருமணத்தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு தொடர்ந்து 5 பிரதோஷங்கள் வந்து 2 ரோஜாப்பூ மாலையை சிவன், நந்திக்கு சாற்றி வழிபட்டால் போதும். திருமணத்தடை நீங்கி, அவர்களது திருமணம் விரைவில் சிறப்பாக நடந்து முடிந்துவிடும். மேலும், கல்வி, திறமைக்கு ஏற்ற வேலை உள்ளிட்ட பக்தர்களின் எல்லா வேண்டுதல்களும் இங்கே வந்து வழிபடுவதன் மூலம் நிறைவேறுகின்ற,பிருங்கி முனிவருக்கு அவர் நந்தி உருவத்தில் காட்சித் தந்ததால் அவ்வாறு அழைக்கப்படுகிறார்.

பிருங்கிமலை

 இங்குள்ள மலையில் இந்த பிருங்கி முனிவர் தவமிருந்து வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. அதனாலேயே இந்த பகுதி ‘பிருங்கிமலை’ என்று அழைக்கப்பட்டு, அதுவே நாளடைவில் இன்றைய ‘பரங்கிமலை’ யாக மாறிவிட்டது. இத்தலத்து இறைவன் நந்தீஸ்வரர் லிங்க வடிவில் கிழக்கு திசை பார்த்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவி ஆவுடைநாயகி தென்திசை நோக்கியவாறு அருள்கிறார்.

 சுந்தர விநாயகர், நாகதேவதை, விஷ்ணு, பைரவர், சந்திரன், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவரர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களும் இங்கு தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இந்த கோவிலுக்கும், புகழ்பெற்ற திருவொற்றிர் வடிவுடையம்மன் கோவிலுக்கும் பண்டைய காலத்தில் நெருங்கியத் தொடர்பு இருந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, திருவொற்றிர் ஆலய நித்திய பூஜைக்கு தேவையான புஷ்பங்களை பெறவும், அதற்காக பூச்செடிகள் சாகுபடி செய்யவும் ஆதம்பாக்கம் நந்தீஸ்வரர் கோவில் சார்பில் மானியமாக நிலம் கொடுக்கப்பட்ட தகவல் கல்வெட்டு வாயிலாக தெரிய வருகிறது. திருமணத்தடை நீங்க வைக்கும் விசேஷ தலமாக இந்த கோவில் அமைந்துள்ளதால், திருமணத்தடை உள்ளவர்கள் அதிக அளவில் இங்கு வந்து செல்வதை காண முடிகிறது.

  வள்ளி-தெய்வானையுடன் இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமானை வழிபட்டால், குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். சிவபெருமானுக்கு உரிய எல்லா விசேஷ தினங்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

தொடர்புக்கு : 044 24836903

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post தவமிருந்த பிருங்கி முனிவருக்கு காட்சி தந்த நந்தீஸ்வரர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சபரிமலை யாத்திரை பாகம் –15

$
0
0

காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்

பாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப்

பூரணை புட்கலை பூம்புற மேவ

வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்

 என்பது கச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய கந்தபுராணத்திலுள்ள ஐயனார் தோற்றம் பற்றிய வரலாறுபேசும் பகுதியில் ஐயனாரின் திருவுருவ வர்ணனயுடன் கூடிய பாடல். இப்பாடலில் பூரணைபுஷ்கலா தேவியருடன் ஹரிஹரபுத்திரராக ஐயப்பன் மதக்களிற்றில் எழுந்தருளி வருவதாகச்சொல்லப்படுகின்றது. இதே போலவே,

’மத்தமாதங்க கமநம் காருண்யாம்ருத பூஜிதம்

ஸர்வ விக்னஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்’

”மதம் பொருந்திய யானையை ஊர்தியாகக் கொண்டவரும், கருணை பொழியும் திருமுகத்தினரும்,வணங்கத்தக்கவரும, எல்லா துன்பங்களையும் நீக்குபவரும் ஆகிய சாஸ்தாவை வணங்குகிறேன்”என்று தர்மசாஸ்திரா ஸ்தோத்திரம் சொல்கிறது.

ஐயப்பன், ஐயனார் இவர்கள் இருவரும் ஒருவரா?

 ஐயனார் வழிபாடு என்பது மிகப்பழைய காலம் தொடக்கம் தமிழகத்திலும் இலங்கையிலும் விரவிக்காணப்படுகின்றது. ஊர்கள் தோறும் வயல் நிலங்களிலும் கடலோரத்திலும் மலை உச்சிகளிலும்ஐயனாருக்கு கோயில் எழுப்பி தமிழர்கள் பாரம்பரியமாக கிராம உணர்வுடன் இயற்கைவழிபாடாற்றியும் சிவாகம பூர்வமாக திருக்கோயில் எழுப்பி பிரதிஷ்டை செய்து வேதாகம நெறிசார்ந்தும் வழிபாடாற்றி வந்திருக்கிறார்கள்.

 சாத்தா (சாஸ்தா) என்றும் அழைக்கப்பெறும் ஐயனார் கிராமத்தேவதையாகவும் வழிபடப்பட்டுவந்துள்ளார். தமிழகத்தின் கிராமங்களில் ஊர் நடுவே சிவபெருமானுக்கோ, மஹாவிஷ்ணுவுக்கோதிருக்கோயில் பெரிதாக எழுப்பி வழிபாடாற்றும் போது ஊரின் நாற்புறத்தும் கிராமத்தேவதைகளாகமாரி, பிடாரி, ஐயப்பன் முதலிய தெய்வங்களை கோயில் அமைத்து வழிபாடாற்றியிருக்கிறார்கள்.இது இப்படியே இன்னும் விரிவடைந்து சில ஊர்களில் ஐயனாருக்கு பெரிய கோயில்கள் அமைத்துமஹோத்ஸவாதிகள் செய்து வழிபாடாற்றியும் வந்திருக்கிறார்கள்.

 இவ்வகையில் பெரிய சிற்ப சித்திர தேரில் ஐயனாருக்கு உலாவும் நடைபெற்று வருகின்றமையும்இங்கு குறிப்பிட வேண்டியது. இது இவ்வாறிருக்க, மேற்படி ஐயனாரின் அவதாரமாகக்கொள்ளப்பெறும் ஐயப்பன் வழிபாடு கேரளதேசத்திலிருந்து அண்மைக்காலத்தில் மிகப்பிரபலம்பெற்றிருக்கிறது. இன்றைக்கு கேரளாவிலுள்ள சபரிமலைக்கு உலகெங்கிலுமிருந்து ஆண்டு தோறும்கோடிக்கணக்கான அடியவர்கள் மிகப்பக்தி சிரத்தையுடன் சரண கோஷம் முழங்க செல்வதையும்காண்கிறோம்.

 ஆக, நம் தேசத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வழிபட்டு வரும் ஐயனார் வழிபாடும் தற்போதுபிரபலம் பெற்றுள்ள ஐயப்பன் வழிபாடும் நெருக்கமானதாகக் கருத முடிகிறது. ஐயனாரின்அவதாரமான ஐயப்பனை இணைத்து சிந்திக்க முடிகின்றது. எனினும் இரு வேறு வடிவங்களில்வழிபாடாற்றும் போது இடையில் சில ஸம்ப்ரதாய பேதங்களையும் அவற்றின் வழியான வழிபாட்டுமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் அவதானிக்கலாம்.

ஐயனாரின் அவதாரமும் அருளாட்சியும்

 கச்சியப்ப சிவாச்சார்ய ஸ்வாமிகள் இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதியதும் சிறப்புப்பொருந்தியதுமான கந்தபுராணத்தில் மிகச்சிறப்பாக ஐயனாரின் அவதாரம் பேசப்பட்டுள்ளதைக்காண்கிறோம். எனவே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயனார் வழிபாட்டில் நம் தமிழ்மக்கள் ஊறித் திளைத்திருப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

 சாவா மூவா மருந்தாகிய அமிர்தத்தைப் பெற திருப்பாற்கடலை தேவரும் அசுரரும் கடைந்துஅமிர்தத்தைப் பெற்ற போது, தேவர்களுக்கே அமிர்தத்தை வழங்க திருமாலோன் மோஹினி வடிவம்என்ற அழகிய பெண் வடிவு கொண்டு, அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அமிர்தத்தைப்பகிர்ந்தளித்தார். இது நிற்க, சைவசித்தாந்த மரபானது

சாந்தமயமாக இறைவன் எழுந்தருள்கையில் உமா,

கோபங்கொள்கையில் காளீ,

போரிடுகையில் துர்க்கா,

புருஷத்துவத்துடன் எழுந்தருள்கையில் விஷ்ணு

என்று சிவபெருமானின் சக்திகளை நான்காகக் கூறும்.

 இந்த வகையில் சிவபெருமானின் சக்தியாகவும் விஷ்ணு விளங்குகிறார்.‘அரியல்லால் தேவியில்லை’என்ற அப்பர் பெருமானின் தேவார அடியும் ஈண்டு சிந்திக்கத்தக்கது. இதில் விஷ்ணுவை சக்திஎன்கிற வகையில் குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று கொள்வதிலும் பார்க்க விஷ்ணு உயிர்என்றால், சிவன் உடல் அல்லது சிவன் உடல் என்றால் விஷ்ணு உயிர் என்று கொண்டார்கள் என்றுகருதுவதே சிறப்பு. சிவபெருமானின் ஹிருதயத்தில் விஷ்ணுவும், விஷ்ணுவின் ஹிருதயத்தில்சிவனாரும் வாஸம் செய்வதாக ஒரு பிரபல சம்ஸ்கிருத வாக்கியமும் இருக்கிறது.

                                                                                                                                                                                                                                                                                     –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

The post சபரிமலை யாத்திரை பாகம் –15 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

திருமழபாடியில் நந்திக்கு திருமணம் செய்து வைத்த சிவபெருமான்

$
0
0

 அரியலூர் மாவட்டத்தில் உள்ள மழுவாடி என்ற திருமழபாடியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு தாயார் சுந்தராம்பிகையுடன் வைதியநாதசுவாமி என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார்,இவரை கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வணங்கி இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடினால் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை,பிராத்தனைகள் நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சார்த்தி பக்தர்கள் நோத்தி கடனை நிறைவேற்றுகின்றனர்.

adhikara-nandi-vahanam-copyஇத்தலத்தில் தான் நந்திக்கு திருமனம் நடைபெற்றது.

சிவன் தோவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 54-வது தேவாரத்தலமாகும்.

அப்பர் சுந்தரர் சம்மந்தர் பாடிய தலமாகும்.

இங்கு தீர்த்தமாக கொள்ளிடம் லட்சுமி சிவகங்கை தீர்த்தம் உள்ளது.

தலவிருச்சமாகும் பனை மரம் உள்ளது.

 காவிரி வடகரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் 54-ம் திருத்தலம் இது. எம் பெருமானே முன்னின்று நந்திகேஸ்வரருக்குத் திருமணம் செய்து வைத்த இடமாகக் கருதப்படுகிறது. திருவையாறு அருகே அந்தணபுரத்தில் வசித்தவர் சிலாத முனிவர். குழந்தைப் பேறு இல்லாமல் இருந்த சிலாத முனி, குழந்தை பாக்கியம் வேண்டி, திருவையாறில் அருள்பாலிக்கும் ஐயாறு அப்பரை நோக்கித் தவம் இருந்தார். தவத்திற்கு மெச்சி இறங்கி வந்த ஐயாறு அப்பர், புத்திர காமேட்டி யாகம் செய்து யாகம் நடத்திய பூமியை உழுதால் குழந்தை பாக்கியம் கிடைக்குமென்று உத்தரவிட்டார். உழுத நிலத்திலிருந்து பெட்டகம் ஒன்று கிடைக்க, அதிலிருந்து குழந்தையையும் பெற்றார் சிலாத முனிவர். ஆனால் அந்தக் குழந்தை 16 ஆண்டுகள் தான் வாழுமென்று முன்பே கூறிவிட்டார் இறைவன்.

t_500_438பெட்டகத்திலிருந்து தோன்றிய புதல்வனுக்கு செப்பேசன் என்று பெயர் சூட்டி வளர்த்தார். 14 வயதிற்குள் அனைத்து வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தான் செப்பேசன். இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் தன் புதல்வன் இருப்பான் என்ற  உண்மை, கடுங்கவலையாக சிலாத முனியை ஆட்கொண்டது. தனது ஆயுள் ரகசியத்தைத் தெரிந்து கொண்ட செப்பேசன், ஐயாறு அப்பர் கோயிலின் அயன அரி தீர்த்தக் குளத்தில் இறங்கி சிவபெருமானை வேண்டி ஒற்றைக் காலில் தவம் இருந்தார். அவரது மேனியைத் திருக்குளத்து மீன்கள் கடித்துச் சேதப்படுத்தியபோதும் தவத்தைக் கலைக்கவில்லை. மனஉறுதி கொண்ட அவரது தவத்தை மெச்சிய இறைவன், செப்பேசனுக்கு பூரண ஆயுளைக் கொடுத்து ஆசீர்வதித்தார்.

 திருமழபாடி வைத்தியநாத சுவாமியை சாட்சியாக வைத்து ஐயாறு அப்பரே செப்பேசன் என்ற நந்தியெம்பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருமணத்தை நடத்தி வைத்தார். இறைவனே முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்ததால் மழபாடி வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் நந்தியெம்பெருமான் திருமணத்தைக் காணும் இளைஞர்களுக்கும் கன்னியர்களுக்கும் திருமணத் தடைகள் நீங்கிக் காலத்தே திருமணம் கைகூடி வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ‘நந்தி’ கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் நடக்கும்’ என்ற சொல் வழக்கு இன்றளவும் மக்களிடம் செல்வாக்குடன் இருக்கிறது.

 தொடர்புக்கு:

      91-4329-292890

 அமைவிடம்:

     அரியலூரில் இருந்து திருமழாபாடிக்கு பஸ்வசதி உள்ளது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post திருமழபாடியில் நந்திக்கு திருமணம் செய்து வைத்த சிவபெருமான் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

கொலுசு விழுந்ததால் சுயம்புவாக தோன்றிய முத்தாலம்மன்

$
0
0

 திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள பாடகம் என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமையும் பெறுமையும் வாய்ந்த சக்தி மிக்க அம்மன் கோவில் உள்ளது. இங்கு அன்னை ஆதிபராசக்தி பலபெயர்களிலும் பல உருவங்களிலும் காட்சி கொடுப்பது போல் இங்கு சிரித்த முகத்துடன் இருக்கும் சுயம்பு முத்தாலம்மன் வரும் பக்தர்களை வா வென்று அழைத்து கூறைகளை தீர்க்கும் முத்தாலம்மனாக இத்தலத்தில் இருந்து அருள் பாலிக்கிறார் இத்தலம் வரலாறு சிறப்பு மிக்க தலமாக விளங்குகிறது.

 இந்த அம்மனை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் நீண்ட நாள் தடைப்பட்ட திருமணம் ஆகாதவர்களும் நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கல்வியில் சிறந்து விளங்கவும் இந்த அம்மனை வணங்கினால் அனைத்தும் தருவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாகவே உள்ளது. பிராத்தனைகள் நிறைவேறியதும் முத்தாலம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து புதுவஸ்திரம் சார்த்தி பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றுகின்றனர்.

சில பக்தர்கள் அவர் அவர் வசதிகளுக்கு கேற்ப காணிக்கை செலுத்துகின்றனர்.

whatsapp-image-2016-12-02-at-5-12-50-pm‘பத்து  விரல்; மோதிரம்  எத்தனை பிரகாசமது

பாடகந் தண்டை கொலுசும் வைடுரிய மிச்சையோ

யிழைத் திட்ட பாதச்சிலம்பினொலியும் முத்து

மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்  மோகன மாலை

யழகும் முழுதும் வைடுரியம் புஷ்புராகத்தினால்

முடிந்திட்ட தாலியழகும்  சுத்தமாயிருக்கின்ற

காதினிற் கம்மலும் செங்கையிற் பொன்கங்

கணம் ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா

மொளிவுற்ற சிறுகாது கொப்பினழகும்  அத்தி

வரதன் தங்கை  சத்தசிவ  ரூபத்தை யடினாற்

சொல்ல திறமோ அழகான பாடகந்தனில் புகழாக

வாழ்ந்திடு மம்மை முத்தாலம்மை யுமையே”

 சிவபெருமானின் கண்களை மூடிய பார்வதி

 திருக்கயிலாயத்தில் சிவபெருமானின் கண்களை மூடிய பாவம் போக்க காஞ்சிபுரத்தில் இருந்து காமாட்சிதேவியாக அவதரித்தார், காப்பற்றியத்தில் அகமகிழ்ந்து பாவம் போக்க தேவியார் காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பயணமானார் உம்மை எப்பொழுதும் பிரியாமல் இருக்க உமது மேனியில் இடபாகம் அளிக்க வேண்டும் என வேண்டிய அன்னையிடம் நீ அருணை மாநகருக்கு சென்று என்னை நோக்கி தவமிரு என்று கூறி மறைந்தார் சிவபெருமான் திருவண்ணாமலை நோக்கி வரும் வழியில் பாடகம் என்ற கிராமத்தில் அன்னையின் காலில் இருந்த கொலுசுகளில் உள்ள இரண்டு முத்துக்கள் (தண்டத்தில் இருந்து) விழுந்தது.

அந்த கிராமத்திலேயே முத்தாலம்மனாக குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார்.

mutharamman

 ‘பாடகம” என்ற செல்லுக்கு கொலுசு (அணிகலன்) என்று பொருள் பண்டைய கால கல்வெட்டுகளில் ‘நிலம்” நில அளவு” என்ற பொருளில் வருகிறது. பாடகம் என்றால் பெண்கள் அணியும் அணிகலன் என்ற குறிப்பும் காணப்படுகிறது.

 இவ்வூரின் பெயரே தொன்மைச் சிறப்பு மிக்கதாக விலங்குகிறது நிலம் வளம் மிக்க பாடகம் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் அம்பாள் முத்தாலம்மன் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

திருவிழாக்கள்:

 தைமாதம் பெங்கல் அன்று மூன்று நாட்கள் முத்தாலம்மன் வீதியுலா வருவதை பார்க்க வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவது இந்த கிராமத்தின் சிறப்பு.

 மேலும், ஆடி மாதம் அம்மனுக்கு பெங்கல் வைத்து அம்மனின் வரலாற்றை உடுக்கை மேலத்துடன் வர்னித்து இரவு குதிரை வாகனத்தில் வீதியுலா கொண்டு வருவது நம் கண்முன்னே முத்தலாம்மன் நேரில் வருவது போல் தோன்றுகிறது.

தொடர்புக்கு:  ஸ்ரீ முத்தாலம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள்:-

     எ.பழனி -9047122373

     எஸ்.காந்தி – 9786629487

     எம்.சேகர்-9585789063.

 அமைவிடம்:

 திருவண்ணாமலையில் இருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும் போளூரில் இருந்து 10 கி.மி தூரத்தில் பாடகம் முத்தாலம்மன் கோவில் உள்ளது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post கொலுசு விழுந்ததால் சுயம்புவாக தோன்றிய முத்தாலம்மன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சபரிமலை யாத்திரை பாகம் –16

$
0
0

 சிவசக்தி ரூபமாக, சங்கர நாராயணனாக இணைந்து காட்சி தரவும் ‘அரியும் அரனும் ஒண்ணு அறியாதார் வாயில் மண்ணு’ என்ற கிராமத்துக் குழந்தைகள் சொல்லும் உண்மையை எடுத்துக் காட்டவும் இச்சந்தர்ப்பத்தில் மோஹினி அவதாரம் செய்து பெண்ணுருக் கொண்டிருந்த மஹாவிஷ்ணுவுடன் ஆணுருக் கொண்டு காட்சி தந்த பரமேஸ்வரன் இணைய இந்த திருவிளையாடலில் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால் சிலர் கூறுவது போல ஒரு பாற்புணர்ச்சி என்று இதனைக் கருதக்கூடாது. அப்படிக் கருதுவது இங்கு பொருத்தமானதுமல்ல. இங்கே இருவரும் ஒருவர். அவ்விருவரில் தோன்றிய மூன்றாமவரும் ஒருவரே.

 நாவலந்தீவில் தேக்க மர நீழலில் நடந்த கூடலில் அரிகரபுத்திரர் அவதரித்தார். லோகரட்சகராக இறைவனால் உடனேயே பணி நியமனமும் மேற்படி ஐயப்ப தேவருக்கு வழங்கப்பெற்றதாகவும் கந்தபுராணத்தின் ‘மகா சாத்தாப்படலம்’ சொல்லும். கந்தபுராணம் இப்பெருமானின் தோற்றப்பொலிவைக் காட்டும் போது,

மைக்கருங்கடல் மேனியும் வானுலாம்
செக்கர் வேணியும் செண்டுறு கையுமாய்
உக்கிரத்துடன் ஓர் மகன் சேர்தலும்
முக்கண் எந்தை முயக்கினை நீக்கினான் என்று கூறும்.

 மேலும் கந்தபுராணம் சிவகுமாரர்களான விநாயகர், முருகப்பெருமான், போன்றோருக்கு இளவலாக தம்பியாக இக்கடவுள் கொள்ளப்படுவார் என்கிறது. தேவர்களையும் யாவரையும் காக்கும் பொறுப்பில் ஐயனார் என்ற இக்கடவுள் என்றும் ஈடுபட்டிருப்பதாகக் காட்டுகிறது.

 ஸ்காந்தத்தின் அடிப்படையில் கந்தபுராணம் இவ்வாறு ஐயப்பனின் அவதாரத்தைக் காட்ட பத்மபுராணம் பஸ்மாசுரனை அழிக்க சிவபெருமான் எழுந்தருளிய போது பஸ்மாசுரனை மயக்கி அழிக்க திருமால் மோஹினி வடிவம் கொள்ள, அப்பொழுது பிறந்தவரே ஐயனார் என்று காட்டுகிறது. இதே போலவே தாருகா வனத்து முனிவர்களின் கடவுள் நிந்தனையையும் செருக்கையும் அழிக்க பிட்சாடனராக சிவபெருமான் வந்த போது மோஹினி வடிவம் கொண்ட திருமாலும் இணைந்து பிறந்தவரே ஐயனார் என்பதும் வரலாறு.

 ‘ஆதியும் அந்தமுமில்லா அரும் பெரும் சோதி’ ஆகிய இறைவன் அடியவர்களின் நலன் கருதி திருவிளையாடல்கள் புரிகிறான். ஆதில் சில உண்மைகளை நிலை நிறுத்திக் காட்ட புராணங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றில் இறைவனையே அளக்கவோ, அவனின் பிறப்பை அறியவோ முற்படுவது விநோதமானது , உண்மையில் அது எவராலும் இயலாதது என்பதையே இக்கதைகள் புலப்படுத்தி நிற்கின்றன எனலாம்.

தமிழ் இலக்கியங்களினூடு நயந்து பேசப்படும் ஐயனார்

 சூரபத்மனால் வருந்திய இந்திரன் சீர்காழியில் இந்திராணியுடன் மறைந்து வாழலானான். அப்பொழுது தேவர்களுக்காக இறைவனை வேண்ட திருக்கைலைக்கு அவன் செல்ல நேரிட்டது. அப்போது தனித்தவளாயிருந்த இந்திராணிக்கு அசுரர்களால் தீங்கு நேரிடுமோ என்று அஞ்சிய அவன் ஐயனாரைத் துதித்து அவரைக் காவலாக எழுந்தருளியிருக்க வேண்டினான்.; ஐயனார் தனது சேனாபதிகளில் ஒருவரான மஹாகாளர் என்பரை இந்திராணிக்கு காவலாக நியமித்தார்.

 இந்திரன் எதிர்பார்த்தது போலவே சூரனின் தங்கை அசமுகி இந்திராணியைக் கண்டு அவளின் அழகைப் பார்த்து ‘இவளை நாம் கொண்டு போய் நம் அண்ணனிடம் கொடுப்போம்’ என்று துணிந்து அவள் சிவபூஜை செய்து கொண்டிருந்த சோலையை அடைந்து, இந்திராணியின் கையைப் பிடித்து இழுத்தாள். இவ்வமயம் அஞ்சிய இந்திராணி தன் காவல் நாயகராகிய ஐயனாரை நோக்கி தன் அபயக்குரலை வெளிப்படுத்தி அழுதாள்.

பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே ஓலம், விண்ணோர் ஆதியே ஓலம், செண்டார்
கையனே ஓலம், எங்கள் கடவுளே ஓலம், மெய்யர்
மெய்யனே ஓலம், தொல்சீர் வீரனே ஓலம், ஓலம்!

 இந்த அழுகுரலைக் கேட்டு ஓடி வந்த ஐயனாரின் சேனாபதியாகிய வீரமஹாகாளர் அசமுகியின் இழுத்த கையை அறுத்தெறிந்தார். இவ்விடம் இன்றும் சீர்காழியில் ‘கைவிடான் சேரி’ என்று வழங்கப்பெறுவதுடன் அங்கு ஐயனாருக்கு திருக்கோயிலும் அமைந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. ஆக, இந்திராணியின் திருமாங்கல்யத்தைக் காப்பாற்றிய முருகக் கடவுளுக்கு இளையவரான ஐயனாரின் பெருமையும் முருகனின் புகழ் சொல்ல வந்த கந்தபுராண காவியம் தெளிவுறக் காட்டுகிறது எனலாம்.

 பெரியபுராணத்தில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தம் வாழ்வின் நிறைவில் திருக்கைலாசத்திற்குச் சென்ற போது அவருடன் கைலாசத்திற்கு எழுந்தருளிய சேரமான் பெருமாள் நாயனார் ‘திருக்கைலாச ஞான உலா’ என்ற பிரபந்தத்தை பாடினார். அதனை கைலாசத்திலிருந்து கேட்டு தமிழகத்தின் திருப்பிடவூருக்குக் கொண்டு வந்து வெளிப்படுத்தி தமிழ்த் தொண்டாற்றியவராகவும் ஐயனார் பெருமானைக் காட்டுவர். பேரம்பலூருக்கு அருகிலுள்ள திருப்பிடவூர் என்ற இவ்வூரிலுள்ள ஐயனார் இன்றும் கையில் புத்தகத்துடன் காட்சி தருவதாகச் சொல்கிறார்கள். இவரை ஊர் மக்கள் ‘அரங்கேற்றிய சாமி’ என்று அழைக்கிறார்களாம்.

ஈழத்துச் சிதம்பர தலபுராணத்தில் இக்கதையை,

சேரமான் அருளிச்செய்த திருவுலாத் தெய்வ வெற்பில்
நேருறக் கேட்டு முந்நீர் நெடும்புவி உய்யுமாறு
சீருறு சோலை சூழ்ந்த திருப்பிடவூரை நண்ணி
ஆரவே சொல்லி வைத்த ஐயனே போற்றி போற்றி

என்று கூறுவதைக் காணலாம்.

மூக்கில் விரலை வைத்து முகுந்தன் மகன் சிந்திப்பதென்ன?

                                                                                                                                                                                                                                                                                   –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சபரிமலை யாத்திரை பாகம் –16 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சபரிமலை யாத்திரை பாகம் –17

$
0
0

 16ம் நூற்றாண்டளவில் வாழ்ந்த மகானாகிய ஸ்ரீமத் அப்பையதீட்சிதர் ஒரு சமயம் அக்கால அரசனாகிய நரசிம்ஹபூபாலன் மற்றும் அவனது அரசவைப்புலவருடன் ஒரு ஐயனார் கோயிலுக்குச் சென்றார். அங்கே ஐயனார் மூக்கில் ஒரு விரலை வைத்து ஆழ்ந்த சிந்தனையில் காட்சி தருவதைக் கண்டார்.

  அவ்வூர் மக்களிடம் இது பற்றி வினவிய போது ‘ஒரு ஞானி வருவார். அவர் ஐயப்பதேவனின் சிந்தனையைச் சொன்னவுடன் மூக்கிலிருந்து கையை எடுத்து விடுவார் எங்கள் ஐயப்பன்’ என்று தாங்கள் நம்புவதாகக் குறிப்பிட்டனர். உடனே அரசன் அவைக்களப்புலவரைப் பார்க்க, அவர் பாட, மூக்கிலிருந்து கை எடுக்கவில்லையாம் சாஸ்தா. அப்பையதீட்சிதரை அரசன் நோக்க, அவர்,

 அன்னையாம் அரவணையான், அபிராமவல்லி, இருவரையுமே யான்

இன்சொல் பேசி அம்மே என்றுமே இன்புற்று, கைலாச நாதனாய

பொன்னார் மேனிப்பெருமானை தந்தையெனவும் விளித்ததனால், வைகுண்ட

மின்னிடு பதியுற்றால் மிளிருமெழில் ஸ்ரீதேவியை எப்படி அழைப்பேனோ?

 என்று பாட சாஸ்தாவின் மூக்கிலிருந்து கை எடுக்கப்பெற்று விட்டதாம்! ஐயப்பனுக்கு திருமால் அன்னை என்றால் திருமகள்? இந்த வினாவின் விடையைச் சொல்ல வல்லவர் யார்?

 இந்த வினாவினூடே நாம் அபரிமிதமான இறையருளின் திருவிளையாடல்களை இனங்கண்டு கொள்ளலாம். இறைவனின் திருவடிவங்களுக்கு இடையில் உறவுமுறை பேசுவதும் அம்மூர்த்திகளிடையே பேதங்கள் பார்த்து ஒருவர் ஒருவருக்குப் பிறந்தார், அவர் இவருடன் சண்டையிட்டார் என்றெல்லாம் சொல்வதும் நம் சந்தோஷத்திற்காகவும் நாம் அறிவு பூர்வமான நீதிகளைப் பெறவுமே அன்றி அம்மூர்த்திகளுள் பேதமில்லை என்ற உண்மையைக் காட்டவேயாம் என்ற உண்மை இக்கதை ஊடாகவும் வெளிப்படுகின்றது. எல்லோரும் அப்பைய தீட்சிதரின் திறனையும் அறிவையும் பாராட்டினார்களாம் என்று ‘தீட்சிதேந்திரம்’ என்ற நூல் சொல்கிறது. இந்தக் கதை நம்மூர்களில் மிகப்பிரபலமாக உள்ளது. இது போல ஐயனார் பற்றிய பல கதைகளும் இருக்கலாம். சாஸ்தா என்பதற்கு மக்களின் மனங்களில் ஊடுருவியவர் என்றும் பொருள் சொல்வதுண்டல்லவா?

 ஆகம நெறியில் ஐயப்பன் வணக்கம் சிவாகமங்கள் ஆகிய பூர்வகாரணாகமம், சுப்பிரபேதம், அம்சுமானம் ஆகியவற்றில் சாஸ்தா என்ற ஐயப்பன் பற்றிய குறிப்புகள் உள்ளன. த்யான ரத்னாவளி என்ற பத்ததி சோடச சாஸ்தா ஸ்வரூபங்கள் என்று பதினாறு வகையான பேதங்களை உடைய ஐயப்ப வடிவங்கள் பற்றிப் பேசுகின்றது. மதகஜ சாஸ்தா, மோஹினீ சாஸ்தா, அம்ருத சாஸ்தா, வீரசாஸ்தா, லஷ்மீ சாஸ்தா, மதன சாஸ்தா, சௌந்தர சாஸ்தா, மஹா சாஸ்தா என்று இப்பேதங்கள் பதினாறாக அது கூறுகின்றது.

 இந்த ஆகமங்கள் மற்றும் பத்ததிகளின் படி சில மாறுபாடான கருத்துகளும் உள்ளன. சாஸ்தாவின் பரிவாரங்களாக மஹாகாளன், கோப்தா, பிங்களாட்சன், வீரசேனன், சாம்பவன், த்ரிநேத்ரன், சூலி, தட்சன், பீமரூபன் ஆகியோரையும் கொடியாக யானை மற்றும் கோழியையும் த்யானரத்னாவளி காட்டுகிறது. அது சௌந்திகராஜன் புதல்வியான பூர்ணா மற்றும் அம்பரராஜன் புதல்வியான புஷ்கலா ஆகியோர் ஐயப்பனின் இரு மனைவியர் என்றும் சொல்கிறது.

  இது இவ்வாறாக சில்பரத்னம் இப்பெருமான் மேகவர்ணர் என்றும் அவருக்கு பிரமை என்ற மனைவியும் சத்யகன் என்ற புதல்வனும் உண்டு என்றும் கூறுகிறது. பூர்வகாரணாகமம் ஐயப்பனின் நிறம் கறுப்பு என்கிறது. சுப்ரபேதம் என்ற சைவாகமம் ஐயப்பனை பெருவயிறர் என்றும் மதனா, வர்ணினி என்ற மனைவியரை உடையவர் என்றும் கரியமேனியர் என்றும் கூறுகிறது. இதே வேளை, அம்சுமான ஆகமம் ஹரிஹர சாஸ்தா என்ற ஐயன் முக்கண்ணும் சாந்தரூபமும் கொண்டவர். வெண்பட்டாடை சாற்றிய திருமேனியர். தாமரை மலரில் எழுந்தருளியிருப்பவர் என்று கூறுகிறது. எனினும் பொதுவாக ஐயனாரையும் ஐயப்பனையும் பொன்மேனியராகவே காட்டும் வழக்கமே இருக்கிறது.

 இவ்வாறாக, ஐயனார் -ஐயப்பன் வணக்கம் பல்வகைப் பட்டு பலவாறாக பலராலும் பல்வேறு நிலைகளில் செய்யப்பட்டு வந்துள்ளதை அவதானிக்கலாம். அவரை கிராமதேவதையாகவும் காவல் தெய்வமாகவும் கண்டிருக்கிறார்கள். அவரே முழுமுதற்பொருள் என்று பூஜை செய்தும் வாழ்ந்திருக்கிறார்கள். ஆக, ஐயன் அவரவர் தத்தம் அறிவின் வண்ணம் எப்படி எப்படி வணங்குகிறார்களோ அப்படி அப்படிக் காட்சி தந்து அவரவர் நிலைக்கேற்ப அருளி வந்திருக்கிறார் என்றே கருத முடிகின்றது.

 பொதுவான வழக்கில் உள்ள கதையின் படி ‘நேபாளதேசத்து அரசனான பலஞனின் மகளான புஷ்கலையை அவனின் வேண்டுகோளின் படி ஐயன் மணந்தார் என்றும், வஞ்சி மாநகராண்ட பிஞ்ஞகன் என்ற அரசனின் வேண்டுகோளை ஏற்று அவனின் மகள் புஷ்கலையை ஐயன் ஏற்றார் என்றும்’ சொல்லப்படுகிறது. இவர்கள் ஸத்தியபூரணர் என்ற முனிகுமாரத்திகள் என்றும் சில நூல்கள் சொல்வதாக அறியக்கிடக்கிறது.எது எப்படியோ இருமையின்பத்தையும் அருளவல்ல பெருமான் இருதேவியருடன் காட்சி தருவது ஏற்கத்தக்க விடயமாக தெரிகிறது. இதனை தத்துவார்த்த நோக்கில் அவதானித்து ஸத்தியத்தை அறிய வேண்டும்.

 ஆகம வழிப்பட்ட வழிபாடுகளைப் பெறும் ஐயனாரைப் பற்றி நோக்கும் போது நம் ஊர்களின் ஆகம நெறிப்பட்ட வகையில் ஐயனாருக்கு பேராலயங்கள் சமைத்துக் குடமுழுக்காட்டி வழிபாடாற்றியும் வந்திருப்பதைக் காண்கிறோம். வடஇலங்கையில் அனலைதீவு என்ற தீவிலும் ஊர்காவற்துறையிலுள்ள சுருவில் கிராமத்திலும் மேற்சுன்னாகம் பகுதியிலும் காரைநகரின் வியாவிலிலும் அளவெட்டியிலும் ஐயனாருக்கு பலநூறாண்டுகள் பழைமையான சிவாகம வழியில் அமைந்த சிவாகம வழியில் பூஜிக்கப்படும் ஆலயங்கள் உள்ளன.

 வியாவில் ஐயனார் கோயில் பற்றி ‘ஆறுமுகநாவலர் / ஈழத்துச் சிதம்பர தலபுராணம்’ என்ற இத்தளத்தில் வெளியான முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்களின் கட்டுரையிலும் பல செய்திகளைக் காணலாம். அனலை தீவில் இன்றும் தான்தோன்றியான ஒரே கல்லில் அமைந்ததும் கடலில் மிதந்து வந்ததுமான பூரணை புஷ்கலை உடனாய ஐயப்பன் திருவுருவம் உள்ளது. பாரம்பரியமாக இக்கோயிலில் கொடியேறி சிவாகமப்படி மஹோத்ஸவம் வருடாந்தம் நடைபெற்று வருகிறது. சுருவில் என்பது ஐயனாரின் கரவில் அல்லது கருவில் ஊன்றிய இடம் என்று சொல்கிறார்கள். .இக்கோயிலில் உள்ள ஊஞ்சல் பாவில் ஒரு பாடல்

 நந்தவன வாவிமலி நாடுங் காடும் நல்லவனாய் பூவுலகைக் காக்க வேணிச்

சங்கரனார் மோகினியாம் அரியோடாட சாந்திமிக அவதரித்த காந்தமூர்த்தி..

 என்று ஐயனின் அவதாரத்தைப் பேசுவதைக் காண முடிகின்றது.

 சபரி மலைக்கு வந்த சாஸ்தா யார்?

                                                                                                                                                                                                                                                                                    –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சபரிமலை யாத்திரை பாகம் –17 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

செல்வங்களை தரும் திருநகரி வரதராஜப்பெருமாள்

$
0
0

 நாகப்பட்டினம் மாவட்டம் திருநகரியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது, இங்கு தாயார் அமிர்தவள்ளியுடன் வேதராஜன் என்னும் கல்யாணசுந்தரர் என்ற பெயரில் பெருமாள் அருள்பாலிக்கிறார், பிராத்தனைகள் நிறைவேறியதும் பெருமாளுக்கு வஸ்திரம் சார்த்தி நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர், பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசஙக்ளில் இது 35-வது திவ்ய தேஷம் ஆகும்,மேற்கு பார்த்து  வீற்றிருக்கும் திருக்கோலம்.

 திருநகரிக்கு அருகே உள்ள திருக்குறவளூரில்  கி.பி.398–ம் ஆண்டு கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தார், திருமங்கையாழ்வார். இவர் இளமையிலேயே ஆயுத வித்தையில் தேர்ச்சி பெற்று விளங்கினார். அதனால் இவருக்கு ‘பரகாலன்’ என்ற பெயரும் உண்டு. சோழ மன்னன் திருமங்கையாழ்வாரை குறுநில மன்னராக ஆக்கினான். அதனால் தன் ஆட்சியை சிறப்பாக செங்கோல் செலுத்தி புகழ் பெற்று விளங்கினார்.

 ‘திருவெள்ளக்குளம்’ என்று அழைக்கப்படும் அண்ணன் பெருமாள் கோவில் என்ற திருத்தலத்தில் உள்ள தாமரைப் பொய்கையில் பல கன்னியர்கள் நீராடினர். அவர்களில் ஓர் அழகிய நங்கை, குமுத மலரை கொய்து கொண்டிருந்தாள். அப்போது அவளுடைய தோழிகள் அவளை தனியே தத்தளிக்கவிட்டுச் சென்றனர். அந்த நேரம் பார்த்து அங்கு ஒரு வைத்தியர் வந்தார். அவர் அந்தப் பெண்ணிடம் விசாரிக்க, அவள் தோழிகள் தன்னை விட்டுவிட்டுச் சென்றதைக் கூறினாள். மேலும் தன்னை பாதுகாத்து அருள வேண்டும் என்றும் வேண்டினாள். வைத்தியரும் மன மகிழ்ச்சியோடு அந்தப் பெண்ணை, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மனைவியிடம் ஒப்படைத்தார். வைத்திய தம்பதியினருக்கு குழந்தைப்பேறு இல்லை. எனவே அந்த நங்கையை தங்கள் மகளாக நினைத்து வளர்த்து வந்தனர்.

 அந்த நங்கை, குமுத மலரை கொய்த காரணத்தால் குமுதவல்லி என்று அழைத்தனர். அவள் திருமண வயது அடைந்தவுடன், அவளுக்கேற்ற கண வனைத் தேடினர்.

 இந்த நிலையில் திருமங்கை மன்னனுடைய ஆதரவாளர்கள் சிலர், குமுதவல்லியின் அழகைப்பற்றியும், குணாதிசயங்களைப் பற்றியும் அவரிடம் கூறினர். திருமங்கை மன்னன் திருவெள்ளக்குளத்தில் இருந்த வைத்தியர் இல்லத்திற்கு சென்று வைத்தியரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மறைந்திருந்து பார்த்த குமுதவல்லியை திருமங்கை கண்டார். கண்டவுடன் இவளை எனக்கு திருமணம் செய்து தரவேண்டும் என்று கேட்டார்.

 இதைக்கேட்ட குமுதவல்லி குறுக்கிட்டு, சங்கு சக்கர முத்திரையும், திருமண்ணும் தரித்த வைணவருக்கே வாழ்க்கைப்படுவேன் என்று கூறினாள். மேலும் நீர் ஓராண்டு, தினமும் 1,008 வைணவர்களுக்கு அன்னதானம் வழங்கி அவர்களுடைய திருவடித் தீர்த்தத்தையும், அவர்கள் உண்ட சேடத்தையும் உட்கொண்டால் உம்மை நான் கணவராக ஏற்றுக் கொள்வேன் என்று கூற அதற்கு உட்பட்டு அப்படியே செய்வதாக வாக்குக்கொடுத்தார்.

  திருமங்கை மன்னன் தினமும் 1,008 வைணவருக்கு அன்னதானம் செய்து வந்தார். சோழ மன்னனுக்கு செலுத்த வேண்டிய பகுதி பணம் முழுவதும், இந்த நல்ல காரியத்திற்கு செலவழிந்தது. எனவே திருமங்கையால் பகுதி பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் சோழ மன்னன் திருமங்கையை பிடித்து சிறை வைத்தான். திருமங்கை உணவு இல்லாமல் 3 நாட்கள் பட்டினி கிடந்தார்.

 பெருமாள் திருமங்கையின் முன்பாக தோன்றி உனக்கு உணவு மற்றும் வேண்டிய பொருட்களை தருகிறேன் வா என்று அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்த ஒரு நதிக்கரையில் பொருள் உள்ள இடத்தை சுட்டிக்காட்டினார். திருமங்கை அந்த பொருளை எடுத்து வந்து அரசனுக்குச் சேர வேண்டியதை செலுத்தினார்.

 திருமங்கை கைவசம் இருந்த பொருட்கள் எல்லாம் அன்னதானம் செய்து செலவழித்தார். அனைத்தும் செலவழிந்த நிலையில், என்ன செய்வதென்று அறியாமல், தன்னுடைய கையாட்கள் துணையோடு, வழிப்பறி செய்து அதன் மூலம் இறைவனை பூஜித்து, அன்னதானம் செய்தும் வந்தார்.

 திருமங்கையை நல்வழியில் திருப்புவதற்கு பெருமாள் சித்தம் கொண்டார். அதன்படி அந்தணர் வேடம் பூண்டு தன் தேவியரோடு, நகைகளை அணிந்தபடி திருநகரியில் உள்ள வேதராஜபுரம் சென்றார். அங்கு அரச மரத்தடியில் பதுங்கி இருந்த திருமங்கை, அந்தண உருவில் இருந்த பெருமாளையும், தேவியரையும் தன் பரிவாரங்களின் துணையோடு ஆயுதம் தாங்கியபடி வழிமறித்தார். அவர்களிடம் நகைகளை பறித்தபோது, தேவியின் கால் விரலில் அணிந்திருந்த மெட்டியை, திருமங்கையால் கழற்ற முடியவில்லை. பலமுறை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. அதனால் திருமங்கைக்கு கலியன் என்ற பெயரும் வந்தது.

 பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட மற்ற பொருட்களை எல்லாம் மூட்டையாகக் கட்டி, அந்த மூட்டையை தூக்க முயன்றார். அதுவும் அசைக்க முடியாதபடி ஆயிற்று. இதனால் ஆத்திரம் அடைந்த திருமங்கை, அந்த அந்தணரை (பெருமாளை) நோக்கி நீ என்ன மந்திரம் பண்ணினாய் என்று தனது படையைக் காட்டி மிரட்டினார். அந்தணரும் அந்த மந்திரத்தினை உமக்கு சொல்லுகிறேன்; அருகில் வாரும் என அழைத்தார். அருகில் வந்த திருமங்கையின் காதில், ஓம் நமோ நாராயணா எனும்  மந்திரத்தை உபதேசித்து அருளினார். பின்னர் கருட வாகனத்தில் திருமகளோடு காட்சியளித்தார்.

 மந்திர உபதேசம் பெற்ற திருமங்கை, அஞ்ஞானம் அழிந்து தத்துவ ஞானம் கைவரப்பெற்றார். இறைவன் மீது நான்கு வகை கவிகளையும் பாடினார். தொடர்ந்து இறைவனின் பல தலங்களுக்குச் சென்று பெருமாளை வணங்கி, மங்களாசாசனம் பாடியுள்ளார். இதன் பிறகு திருமங்கை மன்னன் திருமங்கையாழ்வார் என அழைக்கப்படுகிறார்.

தொடர்புக்கு :-  91-4364-256927

அமைவிடம்:

    நாகப்பட்டினத்தில் இருந்து பஸ் வசதியுள்ளது

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

The post செல்வங்களை தரும் திருநகரி வரதராஜப்பெருமாள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


வேண்டிய செல்வங்களை தரும் மகாலட்சுமி

$
0
0

 கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள மேட்டு மகாதானபுரத்தில் ஊர்மக்களால் பள்ளத்தை தோண்டிய போது கண்டொடுக்கப்பட்ட அம்மன் சிலை உள்ளது இங்கு அம்பாள் மகாலட்சுமி என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இந்த அம்பாளை வணங்கினால் வேண்டிய வரம் கொடுப்பார் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பக்தர்கள் நோத்திகடனாக தலையில் தோங்காய் உடைத்து பிரார்த்தனைகள் நிறைவோற்றுகின்றனர்.

 சிறிய கல் வடிவில் இருந்த அம்மன் சிலையை வைத்து பக்தர்கள் வழிபட்டு வந்தனர். ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அம்மனுக்கு ஆலயம் எழுப்ப முயற்சி மேற்கொண்டனர். இந்த நிலையில் ஆலயம் இருந்த பகுதி வழியாக ரெயில் போக்குவரத்து அமைப்பதற்காக தேவையான தளவாட பொருட்கள் குவித்து வைக்கப்பட்டது. ஒருநாள் அதிகாலை அங்கு ரெயில் பாதை அமைக்க வைத்திருந்த தளவாடபொருட்கள் அனைத்தும், தேங்காய் வடிவில் கல் உருண்டைகளாக மாறிப்போய் இருந்தது. அதைப்பார்த்த அனைவரும் இது அம்மனின் சக்திதான் என்று முடிவு செய்தனர். மேலும் அம்மனை வைத்து வழிபட்ட இடத்தில் ஒரு பள்ளம் தோன்றி இருப்பதையும் பார்த்தனர். இதனையடுத்து அந்தப் பள்ளத்தை பொதுமக்கள் தோண்டி பார்த்தபோது, பள்ளத்திற்குள் மகாலட்சுமி அம்மன் சிலை ஒன்று புதுப்பொலிவுடன் தகதகவென்று மின்னியபடி காட்சியளித்தது.

 இந்த நிலையில் ரெயில் பாதை அமைக்க இருந்த இடத்தில் அம்மன் சிலை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆங்கிலேயர்கள், அம்மனின் மகிமையை கண்டு மிரண்டு போய் அந்த இடத்தில் ரெயில் தண்டவாளம் அமைக்கும் முயற்சியை கைவிட்டனர். அதன் பிறகு பக்தர்களின் எண்ணப்படி, அந்த இடத்தில் அம்மனுக்கு அழகிய ஆலயம் கட்டப்பட்டது. தன்னை நினைத்து வணங்கும் பக்தர்களுக்கு அளவற்ற செல்வத்தை அள்ளித்தரும் இந்த மகாலட்சுமி அன்னையின் கோவிலுக்கு சென்று அன்னையை பயபக்தியுடன் வணங்கி அவரது ஆற்றலை பெறலாம்.

 இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18–ந் தேதி ஆடிப்பெருக்கு விழா அன்று நடைபெறும் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆடிப்பெருக்கு விழா அன்று கோவிலில் இருந்து வடக்கே சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும். அன்று மாலை மேட்டுமகாதானபுரம் ஊரில் உள்ள வீதிகளில் அம்மன் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். அடுத்த நாள் காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை முடிவடைந்ததும், கோவில் முன்புறம் உள்ள கருட தூணில் தீபம் ஏற்றப்படும். இதனை தொடர்ந்து பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து வழிபடும் நிகழ்ச்சி தொடங்கும். கோவில் முன்பு உள்ள மண்டபத்தில் பக்தர்கள் வரிசையாக அமர்ந்து இருப்பார்கள். கோவில் பூசாரி அங்கு வந்து ஒவ்வொரு பக்தரின் தலையிலும் தேங்காயை உடைப்பார். உடைந்த தேங்காயை சுற்றியிருக்கும் பக்தர்கள் பிரசாதமாக எடுத்துச் செல்வார்கள்.

அமைவிடம் :

  திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மகாதானபுரம் என்ற ஊரின் தெற்கில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் கோவில் இருக்கிறது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post வேண்டிய செல்வங்களை தரும் மகாலட்சுமி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சபரிமலை யாத்திரை பாகம் –18

$
0
0

 பசுமை கொஞ்சும் கேரளதேசத்தில் பம்பை நதிக் கரையோரம் கோயில் கொண்ட சபரிகிரீஸனான ஐயப்பன் கலியுகத்தில் மிகப்பிரபலம் பெற்று விளங்குகிறார். இப்போதெல்லாம் கார்த்திகை பிறந்தால் உலகெங்கும் ‘ஐயப்பா சரணம்’ என்ற சரணகோஷம் தொடங்கி விடும். மஹிஷி என்ற அரக்கியை அழிக்க வந்த அவதாரம் ஐயப்ப அவதாரம். இவரை நாம் முன்னரே கண்ட ஐயனாரின் பிறப்பாக காட்டுவர். ஐயனாரின் அவதாரமாக பம்பையாற்றங்கரையில் தானே குழந்தையாகி கழுத்தில் மணியுடன் கிடந்தார் சுவாமி. அப்போது அங்கே வந்த பந்தளம் என்ற அப்பகுதியை ஆண்ட ராஜசேகர மன்னன் குழந்தையைக் கண்டு எடுத்துக் கொண்டு போய் தன் பிள்ளையில்லாக் குறை போக்க வந்த பிள்ளை என்று மகிழ்ந்து ‘மணிகண்டன்’ என்று நாமகரணம் செய்து ஆசையாய் வளர்த்தான்.

 தனது பன்னிரண்டாவது வயதில் தாயின் தலைவலி நீக்க மருந்தாக புலிப்பால் பெற.. அதன்பேரில் தன் அவதார ரஹஸ்யத்தை செயற்படுத்த காட்டிற்குச் சென்றார் ஐயப்பன். மஹிஷியை ஐயப்பன் காலால் உதைந்த போது அவள் அவரின் திருவடிகள் பட்டு புனிதையானாள். அழகிய பெண் வடிவம் எய்தினாள். தன்னை மன்னிக்குமாறு மன்றாடினாள். சாப விமோசனம் பெற்று மனைவியாக தன்னை ஏற்க வேண்டி நின்ற மஹிஷியை நோக்கி ‘இப்பிறவியில் எப்பெண்ணையும் சிந்தையாலும் தொடாத’ பிரம்மச்சர்ய விரதம் அனுசரிப்பதே தன் நோக்கு என்று குறிப்பிட்ட ஐயன் அவளுக்கும் பிரம்மச்சர்ய சக்தி பற்றிக் கூறினார். பின் அவளைத் தன் சகோதரியாக ஏற்று தான் இருப்பிடமாக கொள்ளவுள்ள சபரிமலையின் வலது பாரிசத்தில் ‘மஞ்சுமாதா’ என்ற பெயருடன் விளங்க அருளினார்.

 பின் தன் காரியத்தை முடித்துக் கொண்டு தேவர்கள் பூஜிக்க புலிப்பால் பெற வந்த பெருமான் புலிவாஹனராக பந்தள ராஜசபைக்கு எழுந்தருளினார். சூழ்ச்சி செய்து ஐயனைக் காட்டுக்கு அனுப்பிய சிறியதாய் பதறிப்போய் தன் பையனான ஐயன் கால்களில் விழுந்து தன் பாவத்தை மன்னிக்க வேண்டினாள்.  அவளை மன்னித்த பெருமான் அனைவருக்கும் அருளாட்சி செய்து தன் அவதாரத்தை வெளிப்படுத்திய பின் வில்லில் ஒரு அம்பைப் பூட்டி ‘இது விழும் இடத்தில் எனக்கு கோயில் அமைக்குதி’ என்று தன் வளர்ப்புத் தந்தையான ராஜசேகரனுக்கு ஆணையிட்டு பரமனாக பரமபதமேகினான் ஐயன் ஐயப்பன்.

 ஐயப்பன் காடு செல்லுகையில் ராஜசேகரன் தந்து கொண்டு போனது இருமுடி என்று அவன் அடியார்களும் இன்றும் சபரிமலைக்கு கொண்டு செல்கிறார்கள். ஒரு முடியில் உணவுப்பொருட்களும் மறுமுடியில் பூஜைப்பொருட்களும் என்று அந்த இருமுடி அமைகிறது. மஹிஷி உடல் வளராமல் சுவாமி கல்லிட்ட கல்லிடுங்குன்றில் அடியார்களும் கல்லிடுகிறார்கள். ஐயப்பனின் அம்பு(சரம்) விழுந்த சரங்குத்தி ஆலில் அடியார்கள் சரங்குத்துகிறார்கள். அப்புறமாகத் தான் புலன் ஐந்து, பொறி ஐந்து பிராணன் ஐந்து, மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்று ஆக பதினெட்டையும் கடந்து பதினெட்டுப்படி ஏறி சுவாமி ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் சுவாமி ஐயப்பனைக் காண்கிறார்கள்.

 சபரி மலையிலே ஐயப்பனைக் காண வாருங்கள்… அவன் நாமத்தை எப்போதும் பாடுங்கள்… ஐயப்பனைக் காண வாருங்கள்.. என்று பாடி.. அவன் திருவடித்தாமரைகளில் வாழ்வின் ஆனந்தத்தைப் பெறலாம். ஐயனானவர் கேரளதேசத்தில் தான் வாழ்ந்த பதியில், குளத்துப்புழாவில் பாலயோகிநாதனாயும், ஆரியங்காவில் இல்லறக்கோலத்துடன் பூரணை புஷ்கலை துணைவனாயும், அச்சங்கோவிலில் வனப்பிரஸ்தரூபராயும், எருமேலியில் கிராதவடிவுடன் வேடனாயும், சபரிமலையில் சாஸ்தாவாகவும் காந்தமலையில் மோட்சப்பிரதாயகராயும் காட்சி தருவதாக அடியார்கள் போற்றி வணங்குவர்.

 இன்றைக்கு சில தசாப்தங்களாக இவ்வழிபாடு மிகப்பிரபலம் பெற்று வருவதையும் கேரள முறைப்படி சபரிமலையில் தாந்திரீகர்கள் செய்வது போல திருக்கோயில்களை அமைத்து திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து பல்வேறு ஊர்களிலும் பல்வேறு கோயில்கள் செய்து கோவிந்தன் மகனான ஐயப்பனை வழிபாடாற்றி வருகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.

 ஐயப்ப வழிபாட்டில் உள்ள ஸம்ப்ரதாயங்களும் சில வினாக்களும்..

                                                                                                                                        –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

The post சபரிமலை யாத்திரை பாகம் –18 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

குழந்தைகளை பேசவைக்கும் உய்யக்கொண்டான் பெருமான்

$
0
0

 திருச்சி மாவட்டம் உய்யக் கொண்டான் திருமலை என்னும் கிராமத்தில் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்ட 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு மூலவராக ஆளுடையார் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். இவரை வாய்போச முடியாத குழந்தைகளும் திருமணமாகாத பெண்களும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் வணங்கினால் குறைகளை தீர்ப்பார் என்பது இங்கு வரும் பக்தர்களின் தீராத நம்பிக்கை…

பிராத்தனைகள் நிறைவேறியதும் பெண்கள் நந்தியம் பெருமான் அருகே தொட்டில் கட்டியும் மணிகளை கட்டியும் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர். கருவறையில் ஆளுடையார் லிங்கத்திருமேனியில் கிழக்கை நோக்கியுள்ளது, இவரது திருமேனி எட்டரை அடி உயரத்தில் உள்ளது பிரம்மாண்டமாக அழகிய திருக்கோலத்துடன் அமைந்துள்ளது.

இது  அம்மன் சன்னதி இல்லாத சிவாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

 வலுவான கோட்டையாக உய்யக்கொண்டான் திருமலை கோயில் திகழ்கிறது. கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. அவற்றைச் சுற்றி சுற்றுச்சுவரும், அதற்கு வெளியே ஆறு அடி அகலம் உள்ள வலிமையான மதில் சுவரும் கட்டப்பட்டுள்ளன. கோயிலில் மேற்கு நோக்கி சிவபெருமான் சன்னதி உள்ளது. மூலவருக்கு உஜ்ஜீவனேஸ்வரர் என்ற பெயர். தமிழில் உச்சிநாதர் என்றழைக்கப்படுகிறார். வாழ்வின் உச்சியை அடைய நமக்கு அருள்பவர் என்று இதற்கு பொருள். நாம் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து மேலான முக்தி நிலையை அடைவதற்கு வழிகாட்டுபவர் என்றும் பொருள். பக்தர்களை அன்பினால் ஆட்கொள்பவர் என்பதால் உய்யக்கொண்டான் திருமலையில் அருளாட்சி செய்யும் சிவபெருமான், ஆளுடையார் என்றும் அழைக்கப்படுகிறார்.

 சிவபெருமான் சன்னதி பிரகாரத்தில் உள்ள கோஷ்டத்தில், கிழக்கு நோக்கி லிங்கோத்பவர் அல்லது மகாவிஷ்ணு இருப்பது வழக்கம். ஆனால் இங்கே வித்தியாசமாக பெண்ணுக்கு சரிபாதி தந்தவராய், அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். உய்யக்கொண்டான் ஆலயத்தின் சிறப்பம்சம், இங்கே அம்பாளுக்கு இரண்டு சன்னதிகள். கிழக்கு நோக்கி இருக்கும் சன்னதியில் அம்பாளுக்கு அஞ்சானாட்சி என்று திருப்பெயர். தமிழில் மைவிழியாள் என்று பொருள். மேற்கு நோக்கி இருக்கும் மற்றொரு சன்னதியில் பாலாம்பிகா அருள்பாலிக்கிறார். உய்யக் கொண்டான் கோயிலை 1200ஆண்டுகளுக்கு முன்பு நந்திவர்ம பல்லவன் என்ற பல்லவ மன்னன் கட்டியதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால் அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கே கோயில் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. ராமாயண காலத்தில் ராவணனின் படைத் தளபதியாக இருந்த கரன் என்ற அரக்கன், இந்தக் கோயிலுக்கு வந்து சிவபெருமானை வழிபட்டு வரங்களை பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் உள்ள தீர்த்தங்களில் குடமுருட்டி என்பது சர்ப்பநதி, உய்யக்கொண்டான் நதி என்றும், கல்வெட்டில் வைரமேகவாய்க்கால் என்றும் உள்ளது. கோயிலில் உள்ள கல்வெட்டில் நந்திவர்ம மங்கலம், ராஜாஸ்ரய சதுர்வேதி மங்கலம் என்றும் உய்யக்கொண்டநாதர் என்றும் குறிக்கப்படுகிறது. க்கண்டேய மகரிஷி 16 வயது நிறைவடையும் தருணத்தில் இங்கே வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது. 16 வயது நிறைவடைந்ததும், தனது உயிரை எமன்  வாங்கிவிடுவான் என்ற காரணத்தால், தன்னைக் காப்பாற்றும்படி உச்சிநாதரை மார்க்கண்டேயர் மனமுருக வேண்டியிருக்கிறார். உடனே மனமிரங்கிய அம்பாள்  சிவபெருமானை கேட்டுக் கொள்ள, மார்க்கண்டேய மகரிஷிக்கு சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தை இங்கு தான் சிவபெருமான் வழங்கினாராம். ஆகையால் இங்கு  வந்து உச்சிநாதரை வணங்குவோருக்கு எமபயம் நீங்கும் என்பது பக்தர்களின் பரிபூரண நம்பிக்கை.

அமைவிடம் :

    திருச்சியில் இருந்து உய்யக்கொண்டான் திருமலைக்கு பஸ்வசதியுள்ளது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

The post குழந்தைகளை பேசவைக்கும் உய்யக்கொண்டான் பெருமான் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சபரிமலை யாத்திரை பாகம் –19

$
0
0

 ஏழைபங்காளன், ஆபத்பாந்தகனான ஐயப்பனின் வழிபாட்டில் ஜாதியில்லை, சமயமில்லை, ஐயப்பனே வாவர் என்ற முஸ்லீம் நண்பரை உடையவர் என்று சொல்லுவார்கள். இதனால் சபரிமலைக்குச் செல்லும் அன்பர்கள் ஒவ்வொருவரும் வாவர் சுவாமி கோயில் என்று வாவர் மசூதிக்கும் சென்று பின்னரே ஐயப்பனைக் காணச் செல்கிறார்கள். பணக்காரன், ஏழை பேதமில்லை.. மாலை அணிந்து ஐயப்பனைக் காணச் செல்ல வேண்டும் என்றால் எல்லோரும் சுவாமிகள்… எல்லோரும் மஞ்சமாதாக்கள்… சிறுவர்கள் யாவரும் மணிகண்டன்கள்.. எங்கும் சமத்துவம் இது தான் ஐயப்ப வழிபாட்டின் விசித்திரம்.

 அருள் உண்டு.. அச்சமில்லை.. எங்கு நோக்கினும் பஜனை..’ சாமியே சரணம் ஐயப்பா’ என்ற சரண கோஷம். எல்லாமே சிறப்புத் தான்.. எனினும் சில விடயங்கள் தெளிவாக்கிக் கொள்வதும் அவசியம். ஐயப்ப வணக்க முறைகள் சில தசாப்த காலங்களுள்ளேயே ஒழுங்கமைக்கப்பெற்றிருப்பதாகவே கருதமுடிகின்றது. ஆகவே, சில விடயங்களில் சிற்சில மாற்றங்களும் தேவை என்று சிறியேன் கருதுகிறேன். என்னைப் பொறுத்த வரையில் நல்ல விஷயங்கள் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியனவே. ஆயினும் சில விடயங்கள் பற்றி சிறியேனுக்குச் சில சந்தேகங்கள் உண்டு.

 (அ) கன்னிச்சாமிமார்கள் உள்ளிட்ட ஐயப்ப பக்தர்கள் சிலர் கறுப்பு நிறத்தில் ஆடையணிகிறார்கள் .ஆனால் இஸ்லாமிய, கிறிஸ்தவச் சகோதரர்கள் சிலரைத் தவிர நமது இந்துதர்மத்தில் கறுப்புடை சாற்றி வழிபாடுகளில் ஈடுபடும் வழக்கம் இல்லை என்றே அறிகிறேன். திருமால் கார்மேக வண்ணனாய் இருந்தாலும் வைஷ்ணவர்கள் கறுப்பாடை சாற்றிக் கொள்வதில்லை. ஏன் ஐயப்பனடியார்கள் கறுப்பாடை அணிகிறார்கள்?. செம்பொருளான இறைவனைக் காட்ட செவ்வாடை சாற்றுவதோ.. மங்கலமான மஞ்சளாடை, காவியாடை சாற்றுவதோ வெள்ளாடை அணிவதோ ஏற்கத்தக்கது. இது விடயத்தில் மீள்பரிசீலனை செய்தால் என்ன என்பது எனது வேண்டுகோள்.

 அதிலும் கேரள தேசத்தில் வெண்மையான ஆடைகளுக்கு மரியாதை அதிகம். அவர்கள் அதனையே விரும்பி அணிகிறார்கள் .பார்க்கவும் தூய்மையும் அழகும் பொலிகிறது. எனவே ஐயப்ப பக்தர்களும் அதனையே பின்பற்றலாமே? சுவாமி சந்நதியில் பூஜை பண்ணும் மேல்சாந்திமார்கள் உள்ளிட்ட அர்ச்சகர்களும் வெள்ளாடை சாற்றியிருப்பதையே காணும் போது ஏன் இவ்வாறு கறுப்பாடை அணிய வேண்டும் என்பது என் வினா.. சில அடியவர்கள் மோட்டார் வாகனப் பாவனைக்கு கறுப்பு நிற ஹெல்மெட் (தலைக்கவசம்) தான் இக்காலத்தில் அணிகிறார்கள். இப்படி எல்லாம் கறுப்பு மயமாக்கிக் கொள்வது விரதகாலத்திற்குப் பொருத்தமானதா? என்று தெரியவில்லை. சில அடியவர்கள் நீல வர்ண ஆடை அணிகிறார்கள் இதனை ஓரளவு ஏற்றுக்கொள்ள முடிகின்றதல்லவா?

 (ஆ) இது போல, இஸ்லாமியப் பள்ளி வாசல்களுக்கு தொழுகைக்குப் பெண்கள் செல்ல இயலாது என்பது போல அமைந்திருக்கிற, பெண்ணடியார்களுக்கு ஐயப்பவழிபாட்டிலுள்ள சில தடைகளும் நீக்கப்பெறலாம் என்பதும் தாழ்மையான எனது கருத்து. இருந்தாலும் இது விடயத்தில் பெண்களே சிந்திக்க வேண்டும். ஒரு ஆடவனான சிறியேன் அறிவுக்குறைவுடன் இது பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறேன்.

 (இ) ஐயப்பனடியார்களில் சிலர் கார்த்திகை, மார்கழி என்ற இருமாதங்களிலும் விரதம் அனுசரிக்கிறார்கள். இந்த மண்டலபூஜை என்ற விஷயம் பரம்பரையாக ஐயனார் பக்தர்களாக ஐயனாருக்கு ஆட்பட்டிருக்கிற அடியவர்கள் அறிந்திருக்கிறார்களில்லை. ஆக, ஐயனின் புதிய அவதாரத்தினை முதன்மைப்படுத்தியே இது பேணப்படுகிறதா? இது பற்றியும் தெளிவான செய்திகள் பேணப்படுவது சிறப்பல்லவா? மாலை அணிபவர்களுக்கு ஒவ்வொரு குருசாமியும் ஒவ்வொரு விதமாக கட்டுப்பாடுகளை விதிப்பதும் ஒரு ஒழுங்கமைப்பில்லாத நிலையையே ஏற்படுத்தும். எனவே இவற்றில் ஓர் சீரிய ஒழுங்கமைப்பை ஏற்படுத்திக் கொள்வது வழிபாட்டைச் செம்மைப்படுத்தும்.

 (ஈ) இப்போதெல்லாம் புதிது புதிதாக சாஸ்தா ஆலயங்கள் உருவாகின்றன. அங்கே பூஜைகளில் சபரிமலை நடைமுறையைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள். சபரிமலைக் கோயிலில் பின்பற்றப்பெறும் நடைமுறைகள் எவ்வாறானவை..? அவ்வழியில் பிரதிஷ்டை செய்யப்பெறும் ஆலயங்களுக்கு உள்ள கிரியாபத்ததிகள் வைதீக மரபிலா? ஆகம மரபிலா? அமையும் என்பதெல்லாம் சிந்திக்க வேண்டியனவே.. நம் தர்மம் நிலைபேறாகவும் சுதந்திரமாகவும் இருக்கிற நிலையில் இவற்றைத் தெளிவாக வெளிப்படுத்துவது எவ்வித சிக்கல்களையும் தராது என்பதும் இவற்றின் வழியே அடியவர்கள் தங்களைத் தயார் செய்து வழிபாட்டில் ஈடுபட வழிசெய்யும் என்பதும் எனது கருத்தாக உள்ளது.

                                                                                                                                        –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

The post சபரிமலை யாத்திரை பாகம் –19 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீஷ்வர ஜகத்குரு அஷ்டோத்திர சத நாமாவளி

$
0
0

ஓம் ஸ்ரீ சந்த்ரஸேகரேந்த்ர-அஸ்மதாசார்யாய நமோ நம:

ஸ்ரீ சந்த்ரமௌளி-பாதாப்ஜ-மதுபாய நமோ நம:

ஸ்ரீ ஆசார்யபாததிஷ்டானாபிஷிக்தாய நமோ நம:

ஸர்வக்ஞாசார்ய-பகவத்ஸ்வரூபாய நமோ நம:

அஷ்டாங்கயோகனிஷ்டா-கரிஷ்டாய நமோ நம:

ஸனகாதி-மஹாயோகி-ஸத்ருசாய நமோ நம:

மஹாதேவேந்த்ர-ஹஸ்தாப்ஜ-ஸஞ்ஜாதாய நமோ நம:

மஹாயோகி-விநிர்பேத்ய-மஹத்த்வாய நமோ நம:

காமகோடி மஹாபீடாதீஸ்வராய நமோ நம:

கலிதோஷ-நிவ்ருத்த்யேக-காரணாய நமோ நம:

ஸ்ரீ சங்கரபதாம்போஜ-சிந்தனாய நமோ நம:

பாரதீக்ருத ஜிஹ்வாக்ர-நர்தனாய நமோ நம:

கருணாரஸகல்லோல-கடாக்ஷாய நமோ நம:

காந்தி நிர்ஜித-ஸூர்யேந்து-கம்ராபாய நமோ நம:

அமந்தா நந்தக்ருன்-மந்தகமனாய நமோ நம:

அத்வைதானந்தபரித-சித்ரூபாய நமோ நம:

கடீதட-லஸச்சாரு-காஷாயாய நமோ நம:

கடாக்ஷமாத்ர-மோக்ஷேச்சா-ஜனகாய நமோ நம:

பாஹு-தண்ட-லஸத்வேணு-தண்டகாயநமோ நம:

பாலபாக-லஸத்பூதி-புண்ட்ரகாய நமோ நம:

தரஹாஸ-ஸ்புரத்திவ்ய-முகாப்ஜாய நமோ நம:

ஸூதாமதுரிமா-மஞ்ஜு-பாஷணாய நமோ நம:

தபனீய-திரஸ்காரி-ஸரீராய நமோ நம:

தப: ப்ரபா-ஸதாராஜத்-ஸுநேத்ராய நமோ நம:

ஸங்கீதானந்த-ஸந்தோஹ-ஸர்வஸ்வாய நமோ நம:

ஸம்ஸாராம்புதி-நிர்மக்ன-தாரகாய நமோ நம:

மஸ்தகோல்லாஸி-ருத்ராக்ஷ-மகுடாய நமோ நம:

ஸாக்ஷாத்-பரஸிவாமோக-தர்ஸனாயநமோ நம:

சக்ஷுர்கத-மஹாதேஜோ-அத்யுஜ்ஜ்வலாய நமோ நம:

ஸாக்ஷாத்க்ருத-ஜகன்மாத்ரு-ஸ்வரூபாய நமோ நம:

க்வசித்-பாலஜனாத்யந்த-ஸுலபாய நமோ நம:

க்வசின்-மஹாஜனாதீவ-துஷ்ப்ராபாய நமோ நம:

கோப்ராஹ்மண-ஹிதாஸக்த-மானஸாயநமோ நம:

குருமண்டல-ஸம்பாவ்ய-விதேஹாயநமோ நம:

பாவனாமாத்ர-ஸந்துஷ்ட-ஹ்ருதயாய நமோ நம:

பாவ்யாத்யபாவ்ய-திவ்யஸ்ரீ-பதாப்ஜாய நமோ நம:

வ்யக்தாவ்யக்ததராநேக-சித்கலாய நமோ நம:

ரக்தஸுக்ல-ப்ரபாமிஸ்ர-பாதுகாய நமோ நம:

பக்தமானஸ-ராஜீவ-பவனாய நமோ நம:

பக்தலோசன-ராஜீவ-பாஸ்கராய நமோ நம:

பக்த-காமலதா-கல்ப-பாதபாய நமோ நம:

புக்திமுக்தி ப்ரதாநேக-சக்திதாய நமோ நம:

சரணாகத-தீனார்த்த-ரக்ஷகாய நமோ நம:

ஸமாதி-ஷட்க-சம்பத்-ப்ரதாயகாய நமோ நம:

ஸர்வதா ஸர்வதா லோக-சௌக்யதாய நமோ நம:

ஸதா நவநவாகங்க்ஷய-தர்ஸனாய நமோ நம:

ஸர்வ-ஹ்ருத்பத்ம-ஸஞ்சார-நிபுணாய நமோ நம:

ஸர்வேங்கித-பர்ஜ்ஞான-ஸமர்த்தாய நமோ நம:

ஸ்வப்னதர்ஸனபக்தேஷ்ட-ஸித்திதாய நமோ நம:

ஸர்வவஸ்து-விபாவ்யாத்ம-ஸத்ரூபாய நமோ நம:

தீன-பக்தாவனைகாந்த-தீக்ஷிதாய நமோ நம:

ஜ்ஞானயோக-பலைஸ்வர்ய-மானிதாயநமோ நம:

பாவ-மாதுர்ய-கலிதாபயதாய நமோ நம:

ஸர்வபூதகணாமேய-ஸௌஹார்தாய நமோ நம:

மூகீபூதாநேகலோக-வாக்ப்ரதாய நமோ நம:

ஸீதளீக்ருத-ஹ்ருத்தாப-ஸேவகாய நமோ நம:

போகமோக்ஷ-ப்ரதாநேக-யோகஜ்ஞாயநமோ நம:

ஸீக்ரஸித்திகராநேக-ஸிக்ஷணாய நமோ நம:

அமானித்வாதி-முக்யார்த்த-ஸித்திதாய நமோ நம:

அகண்டைக-ரஸானந்த-ப்ரபோதாய நமோ நம:

நித்யாநித்ய-விவேக-ப்ரதாயகாய நமோ நம:

ப்ரத்யகேகரஸாகண்ட-சித்ஸுகாய நமோ நம:

இஹாமுத்ரார்த்த-வைராக்ய-ஸித்திதாய நமோ நம:

மஹாமோஹ-நிவ்ருத்த்யர்த்த-மந்த்ரதாய நமோ நம:

க்ஷேத்ரக்ஷேத்ரஜ் ஞ-ப்ரத்யேக-த்ருஷ்டிதாய நமோ நம:

க்ஷயவ்ருத்தி-விஹீனாத்மஸௌக்யதாய நமோ நம:

தூலாஜ்ஞான-விஹீனாத்மத்ருப்திதாய நமோ நம:

மூலாஜ்ஞான-பாதிதாத்மமுக்திதாய நமோ நம:

ப்ராந்திமேகோச்சாடன-ப்ரபஞ்ஜனாய நமோ நம:

ஸாந்தி-வ்ருஷ்டிப்ரதாமோக-ஜலதாய நமோ நம:

ஏககால-க்ருதாநேக-தர்ஸனாய நமோ நம:

ஏகாந்தபக்தஸம்வேத்ய-ஸ்வகதாய நமோ நம:

ஸ்ரீ சக்ரரத-நிர்மாண-ஸுப்ரதாய நமோ நம:

ஸ்ரீ கல்யாணதராமேய-ஸுஸ்லோகாய நமோ நம:

ஆஸ்ரிதாஸ்ரயணீயத்வ-ப்ராபகாய நமோ நம:

அகிலாண்டேஸ்வரீ-கர்ண-பூஷகாய நமோ நம:

ஸசிஷ்யகண-யாத்ரா-விதாயகாய நமோ நம:

ஸாதுஸங்கநுதாமேய-சரணாய நமோ நம:

அபின்னாத்மைக்யவிஜ்ஞான-ப்ரபோதாய நமோ நம:

பின்ன-பின்ன-மதைஸ்சாபிபூஜிதாய நமோ நம:

தத்தத்விபாக-ஸத்போத-தாயகாய நமோ நம:

தத்தத்பாஷா-ப்ரகடித-ஸ்வகீதாய நமோ நம:

தத்ர தத்ர க்ருதாநேக-ஸத்கார்யாய நமோ நம:

சித்ரசித்ர-ப்ரபாவ-ப்ரஸித்திகாய நமோ நம:

லோகானுக்ரஹக்ருத்கர்ம-நிஷ்டிதாய நமோ நம:

லோகோத்த்ருதி-மஹத்பூரி-நியமாய நமோ நம:

ஸர்வவேதாந்த-ஸித்தாந்த-ஸம்மதாய நமோ நம:

கர்மப்ரஹ்மாத்மகரண-மர்மஜ்ஞாய நமோ நம:

வர்ணாஸ்ரம-ஸதாசார-ரக்ஷகாய நமோ நம:

தர்மார்த்தகாமமோக்ஷ-ப்ரதாயகாய நமோ நம:

பத-வாக்ய-ப்ரமாணாதி-பாரீணாய நமோ நம:

பாதமூல-நதாநேகபண்டிதாய நமோ நம:

வேதசாஸ்த்ரார்த்த-ஸத்கோஷ்டீ-விலாஸாய நமோ நம:

வேதசாஸ்த்ரபுராணாதி-விசாராய நமோ நம:

வேதவேதாங்கதத்வ-ப்ரபோதகாய நமோ நம:

வேதமார்கப்ரமாண-ப்ரக்யாபகாய நமோ நம:

நிர்ணித்ரதேஜோவிஜித-நித்ராட்யாய நமோ நம:

நிரந்தர-மஹானந்த-ஸம்பூர்ணாய நமோ நம:

ஸ்வபாவ-மதுரோதார-காம்பீர்யாய நமோ நம:

ஸஹஜானந்த-ஸம்பூர்ண-ஸாகராய நமோ நம:

நாதபிந்துகலாதீத-வைபவாய நமோ நம:

வாதபேதவிஹீனாத்ம-போததாய நமோ நம:

த்வாதஸாந்த-மஹாபீட-நிஷண்ணாயநமோ நம:

தேஸகாலாபரிச்சின்ன-த்ருக்ரூபாய நமோ நம:

நிர்மானசாந்திமஹித-நிஸ்சலாய நமோ நம:

நிர்லக்ஷய-லக்ஷய-ஸம்லக்ஷய-நிர்லேபாய நமோ நம:

ஸ்ரீஷோடஸாந்த-கமல-ஸுஸ்திதாயநமோ நம:

ஸ்ரீ சந்த்ரஸேகர-ஸ்ரீஸரஸ்வத்யை நமோ நம:

இத்யேதத் குருதேவஸ்ய நாம்னாம் அஷ்டோத்தரம் ஸதம்  படனாத் பூஜனாத் தத்க்ஞானாத் பக்தானாம் இஷ்ட ஸித்திதம்.

ஸர்வம் ஸ்ரீ குரு தேவார்ப்பண மஸ்து.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீஷ்வர ஜகத்குரு அஷ்டோத்திர சத நாமாவளி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Viewing all 679 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>