கோயம்பத்தூர் அடுத்துள்ள தென்கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில் உள்ள ‘பஞ்சலிங்கங்களையும் தரிசனம் செய்தால் பாவம் தீர்ந்து புத்துணர்ச்சியுடன் திரும்பலாம் என்பது பக்தர்களின் தீராதநம்பிக்கை”இஷா தியான மண்டபத்தில் இருந்து சுமார் ஜந்து கி.மீ. தூரம் சென்றால் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ளகோவிலை சென்றடையலாம். மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி நாதர் கோவில் உள்ளது. அம்மன் திருநாமம் சௌந்தரிய நாயகி. கோவில் பின்புறம் இருந்து மலை கோவில் செல்லும் பாதைய தொடங்குகிறது. தென் கயிலை என்று அறியப்படும் வெள்ளியங்கிரிமலை மேல்இயற்கையாக அமைந்த குகைக்குள் பஞ்சலிங்கம் உள்ளது. அடிவாரத்தில் உள்ள கோவில் 6 கி.மீ. தூரம் செங்குத்தான மலையில் ஏறி பஞ்சலிங்கதரிசனம் செய்யலாம் ஏழுமலைகள் ஏறவேண்டும்.
மிகவும் சக்தி வாய்ந்த மூலிகைகள் நிறைந்த மலை இது. இயற்கைசுனைகள் நிறைந்த மலை. பொதுவாக பெளர்ணமி இரவில் தான் வெள்ளியங்கிரி மலை ஏறுவர்கள் பங்குனி உத்திரம், சித்திர பெளர்ணமி, மகாசிவராத்திரி போன்ற சமயங்களில் அதிக அளவில் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்குயாத்திரை செல்வார்கள், வடமாநிலம் மக்கள் அமர்நாத் யாத்திரைக்கு நிகராக வெள்ளியங்கிரி பஞ்சலிங்கதரிசனத்தையும் புனிதமாக கருதுகிறர்கள்.வெள்ளியங்கிரி மலை அடிவாரம் வெள்ளியங்கிரி கோவில் நீண்டவிசாலமான பிரகாரம், வித்தியாசமான வடிவில் நவக்கிரக சன்னதி, வழக்கமான மலைப்பாதை ஆரம்பத்தில் காணப்படும் ஒருவளைவு, செங்குத்தாக ஆரம்பிக்கும்சீரான படிக்கட்டுகள் கட்டெனத் தெரியும்.
கோயம்புத்தூரிலிருந்து 40 கீமி தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சிமலைத்தொடர். தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கொட்டும் பணியும், கை தொட்டு விளையாடும் உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத்தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்களும் சுழி, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் ‘வெள்ளியங்கிரி” என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. சுமார் 3500 அடி உயரமுடைய இம்மலை ஏழுசிகரங்களைக் கொண்டுள்ளது. ஜந்தரை கிலே மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயிலும், பாம்பாட்டி சுனை, கைதட்டிசுனை, சீதைவனம், அர்ச்சுனன்வில், பீமன்களி உருண்டை, ஆண்டிசுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம். இரவில், மலையில் காட்டுயானைகள் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் தொடங்கிவிடும் என்பதால் இங்கிருந்து மாலையிலேயே திரும்பி விடுதல் பாதுகாப்பானது என்று சொல்லப்படுகிறது ஆனால் அனைவரும் இரவில் பயணத்தை தொடங்கி அதிகாலை மலை உச்சிக்கு சென்று சேர்கிறார்கள். அதிக மக்கள் நடமாட்டத்தால் வனவிலங்குகள் அங்கு இருப்பதை தவிர்க்கின்றன. கொங்கு மண்டலத்தில் சிவன் வசிக்கும் கைலாசம் என்று வெள்ளியங்கிரியை சொல்லுவார்கள். ஏழுமலைகள், வணன்களால் சூழப்பட்டபகுதியாகும்.
மூங்கில் தடி மிகப்பிரபலம் வேலைப்பாடுகளுடன். இருக்கும். வெள்ளியங்கிரி தடி என்று சொன்னால் கொங்கதேசம் முழுக்கவே தெரியும். படியேறதுவங்கியதில் இருந்தே பல சாமியார்களைக் காணமுடியும். துவக்கத்தில் படி வசதிஇருக்கும், போகப்போகபடிகள் குறைந்து கரடுமுரடான பாதைகள், பாறைகள் மீது கூட சிறிதுதூரம் பயணம் கொள்ள வேண்டியிருக்கும். மூங்கில் தடிஉதவும். மீண்டும் சுலபமான நடைபாதை போன்ற பகுதிகள் வரும். எப்போதும் செங்குத்தாகவே இராது. செல்லும் வழியில் இயற்கையான ஊற்றுக்கள் மூலம் வரும் நீர் மூங்கில் தப்பைகள் கொண்டு வடிந்து கொண்டிருக்கும். அந்த நீர்தேன்அமிர்தம் போல இருக்கும். அருவிகள், பறவைகளின் ஒலிகள், வனச்சூழல் நம்முள் இனம்புரியாத மாற்றத்தை ஏற்படுத்தும். செல்லச் செல்ல கோவையின் அழகு, வனங்களின் அழகு, மனதை கொள்ளை கொள்ளும். வழியில் ஒரே ஒரு கடை மட்டுமே உண்டு. கொஞ்சம் உணவுப் பண்டங்கள் இருக்கும். மூன்றாவது நான்காவது மலை ஏறும்போதே, ஏண்டா ஏறதுவங்கினோம் என்றிருக்கும். ஜந்தாவதுமலையில் ஒரு சுனை உண்டு, ஐஸ் தண்ணி என்றுதான் சொல்லணும். அதில் குளித்துத் தான் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க செல்லணும். குளிராக இருந்தாலும் ஒரு முறை முழ்கி எழுந்தாலே மறு ஜென்மம் எடுத்ததுபோல, ஆத்ம சுத்தி, பாரமற்றமனம், புத்துணர்ச்சியான உடல் என்று ஆனந்தத்தை உணரமுடியும். அவ்வளவு தூரம் ஏறிய களைப்பு சிறிது கூட இராது. திருநீறால் ஆன மலை என்று ஒரு பகுதி வரும். அதன் மண் தான் வெள்ளியங்கிரி திருநீறு என்பவர். அங்கிருந்து பீமன்களியுருண்டை என்ற ஒரு பெரும்பாறையை காணலாம். வனவாசத்தின் போது பாண்டவர்கள் இங்கே தங்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைவிடம் : கோவையில் இருந்து 40 கீ.மி தூரத்தில் உள்ளது
மலைக்கோயில் தொடர்புக்கு : 91.422-2615258, 2300238.
செய்தி : ப.பரசுராமன்
படங்கள் : வசந்த்
The post பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி பஞ்சலிங்கஈஸ்வரர் appeared first on Swasthiktv.