அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றும் திருப்பணியை, பர்வத ராஜகுல மரபினர்கள் தொன்றுதொட்டு ஏற்றிவருகின்றனர். மாமலை மீது மகா தீபம் ஏற்றும்போது, பர்வதராஜகுல மரபினர்கள் சங்கொலி முழங்க அண்ணாமலையாரை போற்றி பாடுவதும் இசைப்பதும் வழக்கம்.
விண்ணதிர முழங்கும் பாடல் வரிகள்:-
கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஜோதியாய்
மலைமீது நிற்கும் அண்ணாமலை போற்றி ..!
உண்ணாமுலை அம்பிகைக்கு இடபாகம் அளித்து
அர்த்தநாரீஸ்வரராய் நிற்கும் அண்ணாமலை போற்றி ..!
எங்கும் எப்போதும் எல்லோரையும் கைவிடாமல்
காத்து அருள்புரியும் அண்ணாமலை போற்றி ..!
ஞான தபோதனரை வாவென்று அழைத்து
வாழ்வளித்து காக்கும் அண்ணாமலை போற்றி ..!
எங்கிருந்து நினைத்தாலும் நினைத்தபோதே
முக்திஅருளும் அண்ணாமலை போற்றி ..!
மாலும் நான்முகனும் முயன்றும் அடி முடி
அறியாமல் நின்ற அண்ணாமலை போற்றி ..!
ஓங்கி வளர்ந்து ஓளியாய் காட்சியளித்து
காத்தருள் புரியும் அண்ணாமலை போற்றி ..!
வள்ளால ராஜாவுக்கு மகனாய் தோன்றி அண்ணலும்
அம்மையுமாய் காட்சி அளிக்கும் அண்ணாமலை போற்றி ..!
புண்ணியம் ஒன்று செய்தால் பலவாக வெளிபட்டு
அருள்மழை பொழியும் அண்ணாமலை போற்றி ..!
வீட்டிடில் கஷ்டமாம் விட்டிடாது உனை
உயிர்விட்டிட அருள்புரி அண்ணாமலை போற்றி ..!
தேவரும்,அடியாரும் தொழும்போது
துணையாகும் அண்ணாமலை போற்றி ..!
மலையாய் வடிவுகொண்ட மகேசன்
தீபமாய் எழுந்தருளும் அண்ணாமலை போற்றி ..!
மலையுருவாய் சிவவுருவாய் எழுந்தருளி
எளியார்க்கு காட்சிதரும் அண்ணாமலை போற்றி ..!
தொடர்புக்கு : ப.வசந்த் – 8015564718
செய்தி : ப.பரசுராமன்
படங்கள்: ப.வசந்த்
The post மகா தீபம் ஏற்றும்போது முழங்கும் பாடல் appeared first on Swasthiktv.