உலகெங்கும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ஸ்வஸ்திக் டிவி.காம் நேயர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு பரிகாரமும்,பலன்களும் என்ற இந்த அருமையான ஒரு பகுதியில் நாம் இன்று எடுத்துக் கொண்ட தலைப்பு தொகுப்பு என்னவென்றால் செவ்வாய்க்கு உரிய தாந்திரிக பரிகாரங்கள்.செவ்வாய் தோஷம் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயமாகும்.ஒரு மனிதனுக்கு செவ்வாய் பாதிக்கப்பட்டால் சகோதர வகையிலே கசப்புணர்ச்சி உண்டாகும்.பூமி யோகம் அவனுக்கு கிட்டாது.ரத்த சம்பந்தப்பட்ட வியாதிகள் தலையெடுக்கும்.மேலும் எப்பொழுது பார்த்தாலும் விபத்து,ஆபத்து ஏற்படும்.செவ்வாய் அவர்களுக்கு சாதகமாக இல்லை என்றால் அவர்கள் எப்பொழுது பார்த்தாலும் கோழைகளாகவே இருப்பார்கள்.
இராணுவம்,போலீஸ் போன்ற துறைகளிலே அவர்களுக்கு வேலை கிடைக்காது.செவ்வாய் அங்கே பழுதுபட்டால் வைத்தியராகக் கூடிய முயற்ச்சிகள் தடுக்கப்படும்.செவ்வாய் பழுதுபட்டால் பெண்களுடைய ஜாதகத்திலே பொருத்தமான கணவர்கள் அமையமாட்டார்கள்.இப்படி செவ்வாயுடைய பாதிப்பு அவர்களுக்கு பல வகையிலே பல விதமான சோதனைகளை ஏற்படுத்தக் கூடிய நிலை இருக்கும் போது அவர்களுடைய ஜாதகத்திலே செவ்வாய் கடகத்திலே நீச்சம் பெற்று பங்கம் பெறாத ஒரு சூழ்நிலையிலோ அல்லது செவ்வாய் தன் எதிரியான புதனோடும் அல்லது சனியோடும் ராகு கேதுஒடும் இணைந்திருந்தாலும் அல்லது செவ்வாய் மறைந்திருந்தாலும் அவருடைய தசை 7 வருட கல கட்டத்திலே இதைப் போன்ற சோதனைகள் பல வரும். அதனால் அவருக்கு பூமி,சொத்து,சகோதரன்,தைரியம்,ரத்த சம்பந்தப்பட்ட வியாதி,விபத்து போன்றவற்றில் ஆபத்தைக் காட்டும்.அதனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் அவரை வசியம் செய்கின்ற அந்த துவரம்பருப்பு என்ற தானியத்தை எடுத்து அடிக்கடி நாம் சாம்பார் சாதம் படைத்து அதை உண்ண வேண்டும்.
அதற்கு அடுத்தபடியாக செண்பக மலர் செவ்வாயை வசியம் செய்வதால் அதை முருகனின் கோயிலில் கொடுத்து நாம் வெற்றியைப் பெறலாம்.செவ்வாய் சகோதரனை அடையாளம் காட்டுவதால் நம் சகோதரர்களுக்கு அல்லது சகோதரிகளுக்கு தானம் அல்லது அவர்களுக்கு வேண்டிய அந்த நன்கொடையைக் கொடுத்து அல்லது அவர்களுக்கு பரிசுகளைக் கொடுத்து உதவிகளைச் செய்து நாம் ஆசீர்வாதத்தை பெறலாம்.மேலும் நல்ல உடல் நலனோடு இருப்பவர்கள் ரத்த தானம் செய்து செவ்வாயின் ஆதரவைப் பெறலாம்.முருகனுடைய வழிபாடு தொடர்ச்சியாக செவ்வாய் மாலையன்று முருகனின் கோயில்களில் விளக்கேற்றி வருவது அருமையான ஒரு தாந்திரிக பரிகாரமாகும்.ஹோமங்கள் நடந்தால் கோயிலில் அதற்குரிய ஹோமப் பொருள்களை நாம் வாங்கிக் கொடுத்து அதிலும் நாம் செவ்வாயின் அருளாசியை பெறலாம்.சில கோயிலிலே அன்னதானம் செய்கின்ற சூழ்நிலையிலே அவர்களுக்கு வேண்டிய அந்த விறகு,மேலும் கட்டைகளை வாங்கிக் கொடுத்து மரக்கட்டைகளை வாங்கி கொடுத்து அந்த சமைப்பதற்கு உதவி செய்யும் பொழுது அக்னியின் பாகமாய் இருக்கின்ற அந்த செவ்வாயின் அருளாசியைப் பெறுவதற்கு ஒளி தானம் அந்த மின்சார விளக்குகளை அந்த கோயிலில் ஏற்றப்படுகின்ற அனைத்து விளக்குகளுக்கும் நெய் அல்லது நல்லெண்ணெய் நாம் தானம் கொடுத்து அந்த கோயிலிலே திருவிலக்குகளை ஏற்றி நந்தா விளக்குகளை ஏற்றுகின்ற அந்த பாகங்களுக்கு நமது அந்த பொருள் நன்கொடையாகக் கொடுக்கும் பொழுது செவ்வாயுடைய கடாக்ஷம் உங்களுக்கு இயற்கையாகவே வந்து விடுகிறது.அதனால் அந்த காலத்துவமான அந்த வீடு கட்டுகின்ற பாக்யம் அவனுக்கு ஏற்படுகிறது.
சகோதர வழியிலே பகை வருவதில்லை அதன் மூலமாக இவர் கோர்ட் வாசலை மிதிப்பதில்லை.மேலும் ரத்த சம்பந்தப்பட்ட வியாதி வருவதில்லை.ரத்தத்தை சிந்துகின்ற விபத்துக்கள் இவர்களைத் தாக்குவதில்லை என்றால் இவையெல்லாம் அவருடைய அருளாசியைப் பெற்றிருப்பதால் இவ்விதமான தாந்திரிக பரிகாரங்களை நாம் ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ தொடர்ந்து செய்யும் பொழுது நமது ஜனன ஜாதகத்தில் செவ்வாய் பழுதுபட்டிருந்தால் அது நமக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி பாதகமான நிலையைக் குறைக்கிறது.ஒவ்வொரு செவ்வாய் இரவு அன்று நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் அவருக்கு வசியத்தை ஏற்படுத்துகின்ற துவரம்பருப்பு ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிகப்பு துணியிலே அதை முடிந்து தலையனை அடியிலே வைத்து செவ்வாயிலிருந்து தொடர்ந்து அடுத்த செவ்வாய் வருங்கின்ற வரையில் ஒன்பது நாட்கள் அந்த தலையனைக் கீழே வைத்து உறங்கி அதை எடுத்து ஓடுகின்ற நீரிலே போடுகின்ற போது பலவிதமான செவ்வாயால் வருகின்ற அபாயகரமான அந்த விளைவுகள் தடுக்கப்படுகின்றது என்றால் தாந்திரிக சாஸ்திரத்தின் நன்மைகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இந்த பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் புதனின் தாந்திரிக பரிகாரங்கள் என்னென்ன என்பதை விரிவாகவும்,விளக்கமாகவும் பார்க்க இருக்கிறோம் என்று சொல்லி இந்த பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் உங்களை சந்திக்க இருக்கிறேன்.நன்றி,வணக்கம்.
The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 30/04/2016 appeared first on Swasthiktv.