ருத்ராக்ஷம் என்பது ஒருவகையான மரத்தின் விதைகள்.ருத்ராக்ஷம் என்றால் ருத்ரன்+அக்ஷம்=சிவன்கண்.அதாவது சிவனின் கண்களில் இருந்து தோன்றியதாகும்.மேலும் இதனை சிவனின் சொரூபம் என்றும் கூறலாம்.ருத்ரன் என்றால் தீமைகளை அழிப்பவன்.
ருத்ராக்ஷம் தோன்றிய புராணக்கதை:
முன்னொரு காலத்தில் தாரகாஷன்,கமலாஷன்,வித்யுன்மாலி என்ற அசுரர்கள் இருந்தார்கள்.இவர்களுக்கு திரிபுர அசுரர்கள் என்று பெயர்.திரிபுர அசுரர்கள் கடுமையான தவம் செய்து பெற்ற வரங்கள் மற்றும் சக்திகளை கொண்டு பூலோகம் ,தேவலோகம் மீது படையெடுத்து சென்று மக்களையும்,தேவர்களையும் வாட்டி வதைத்தனர்.இதனால் துன்புற்ற தேவர்கள் சிவனிடம் சென்று தங்களை காப்பாற்றுமாறு வேண்டினர்.தேவர்கள் நிலைமையைக் கண்ட சிவன் அவர்களை காக்கும் பொருட்டு ஆயிரம் ஆண்டு கண் விழித்து “அகோரஸ்த்ரம்” என்ற அஸ்த்ரத்தை படைத்து அந்த அஸ்த்ரத்தின் மூலம் திரிபுர அசுரர்களை வதம் செய்தார்.தேவர்களின் நிலைக் கண்டு வருந்தினார்.அப்பொழுது சிவனின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் பூமியில் விழுந்து ருத்ராக்ஷம் மரங்களாக தோன்றின.
நலம் தரும் ருத்ராக்ஷம்:
ஒன்று முதல் இருபத்து ஒன்று முகங்கள் கொண்ட ருத்ராக்ஷங்கள் உண்டு என்பர்.ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் இருந்தாலும் சிவ அம்சமான ருத்ராக்ஷம் அணிவதன் பொதுவான பலன்களைக் காண்போம்.
1.அறிவும் ஞானமும் அடைய முடியும்.
2.குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும்.
3.மன அமைதியும்,ஒருமுகப்படுத்துதலும் சித்திக்கும்.
4.நோயற்ற நீண்ட வாழ்க்கை அமையும்.
5.தொழில் செய்வோருக்கு குறைவற்ற லாபம் கிடைக்கும்.
6.அதன் கந்தக சக்தி நரம்பு மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவும்.
7.மன அழுத்தம்,இரத்த அழுத்தம் போன்ற நோய்களும் அடங்கும்.
8.மாணவர்கள் அணிவதனால்,அவர்கள் கல்வியில் அறிவுத்திறனில் பிரகாசிப்பர்.
9.இரத்த ஓட்டம் சீராக அமையும்.
10.நவக்ரஹ தோஷங்கள் விலகும்.
11.அனைத்து பாவங்களையும் போக்கும்.
12.பிறவிப்பயனை அளிக்கும்.
“ஓம் நமசிவாய“
The post சிவனின் சொரூபம் -ருத்ராக்ஷம் appeared first on Swasthiktv.